Sunday, February 14, 2021

திருமணம் செய்து கொள்ள வேண்டாம் உலகம் அழியும் காலம் வந்துவிட்டது --பவுல்

கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபித்தவர் பவுல்,  திருமணமாகாமத பிரம்மச்சாரியாக இருந்த பவுல் எழுதிய கடிதத்தில் திருமணம் பற்றிய கேள்விகளுக்கு பதில் கொடுக்க எழுதிய கடிதத்தில் சில முக்கிய வசனங்களை கீழே காண்போம்.

கிறிஸ்தவ சர்ச் செவி வழி கதைகள் பாரம்பரியத்தில் இந்தப் பவுல் யார் என்பதே தெரியாமல் அப்போஸ்தலர் நடபடிகள் என்ற அந்த ஒரு புத்தகத்திலேயே ஒரு இடத்தில் பவுலை ரோமன் குடிமகன் என்கிறார்; இன்னொரு இடத்தில் ஏழை கூடாரம் கட்டுபவர் என்கிறது; இன்னுமொரு இடத்தில் ரோமன் ஆட்சியாளர்களுக்கு உதவி செய்த சதுசேய யூத பாதிரி சங்க உறுப்பினர் என்கிறது இன்னொரு இடத்தில் பரிசேயர் என்கிறது; எது உண்மை ஒன்று சரி என்றால் இன்னொன்று சரியாக இருக்க முடியாது

உலகம் அழிந்து கணக்கெடுப்பு நாள் அல்லது கர்த்தரின் நாள் என்பது தன் வாழ்நாளில் வந்துவிடும் என்பது பவுலின் மிக அடிப்படையான நம்பிக்கை.  எனவே அவர் திருமணத்தை பற்றிய கேள்விக்கு கொடுத்த பதில் இதுதான்  

 1கொரிந்தியர் 7:1  பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது. 

7 எல்லாரும் என்னைப் போலவே இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்...8 இப்போது மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது இதுவே; அவர்களும் என்னைப்போலவே இருந்துவிட்டால் மிகவும் நல்லது. 

26 மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து விடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.

28 .. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். 
29 அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். 31 உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடு நாள் இராது. 
32 நீங்கள் கவலை ற்றவர்களாய் இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன், மணமாகாதவர் ஆண்டவருக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படி அவருக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறார். 33 ஆனால் மணமானவர் உலகுக்குரியவற்றில் அக்கறை கொள்கிறார்; எப்படித் தம் மனைவிக்கு உகந்தவற்றைச் செய்யலாம் என எண்ணிக்கொண்டிருக்கிறார். 
 
இன்று வாழும் பைபிளியல் அறிஞர்களில் மூல கிரேக்க ஏடுகளை பதிப்பதில் மிகவும் புகழ்பெற்ற அமெரிக்க பைபிளியல் பேராசிரியர் பார்ட் எர்மான் நூலின் பெயர் "இயேசு உலக இறுதி கால தீர்க்கதரிசி"

No comments:

Post a Comment