Saturday, February 6, 2021

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் - மைநாரிட்டி முஸ்லிம்கள் மலம்

 ஈ.வெ.ரா  - மைநாரிட்டி முஸ்லிம்கள் மலம் - ராமசாமி நாயக்கர் கருத்து

https://www.facebook.com/vedagiri.venkatraman/posts/2639176399446633



"எந்த நாட்டிலும் மைனாரிட்டி சமுதாயம், மைனாரிட்டி மதம், மைனாரிட்டி கலாச்சாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ, செல்வாக்கோ இருக்குமானால்- அது அந்த நாட்டின் நலத்துக்கு, பொது வளர்ச்சிக்கு கேடாகவே முடியும்."
உடனே இதை, பார்ப்பனரைத் தான் ஈ வே ரா சொல்கிறார். மற்றவர்களை இல்லை என்று நாம் நினைத்து விடுவோமோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டதோ என்னவோ, அடுத்து இன்னும் தெளிவாக சொல்கிறார்.
" இந்நாட்டு மைனாரிட்டி சமுதாயங்களான பார்ப்பனர், முஸ்லிம் ஆகியவர்களுக்கு தனிச்சலுகைகளை ஆட்சிகள் காட்டி வந்த காரணத்தால், நாடு வளர்ச்சியடையாமலும் மெஜாரிட்டி மக்கள் மனிதத்தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்"
இப்படி அவர் தெளிவாக சொல்லியும் கேட்காமல் போனால், என்ன நடக்கும் என்றும் அவரே எச்சரித்து இருக்கிறார்.
மைனாரிட்டிகளுக்கு அளிக்கும் சலுகையும் உரிமையும் துரோகம் - பச்சைத் துரோகம் என்கின்ற குழந்தைகளைத்தான் ஈனும்; ஈன்று வருகிறது"
ஒரே போடாக போட்டு விட்டார்.இதையும் மீறி சிறுபான்மை மக்களுக்கு சலுகை செய்ய யாராவது முயன்றால், அவர்களை எப்படி அழைக்க வேண்டும்?
இதோ,
"நாட்டிலுள்ள யோக்கிய பொறுப்பற்ற மக்கள் தங்கள் சுயநல சமுதாய கேடான காரியங்களுக்கு, இப்படிபட்ட மைனாரிட்டிகளின் பின்புலத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் செய்யத் துணி்கிறார்கள்."
"இந்த துரோகி மைனாரிட்டிகளும் அப்படிப்பட்ட பொறுப்பற்ற சமூக துரோகிகளுக்கு பயன் பட்டு வாழக் காத்து கிடக்கிறார்கள்"
அதாவது இஸ்லாமியர், மற்றும் அவருக்கு சலுகை தருபவர்களை அயோக்கியர்கள், துரோகிகள் என்று தெளிவாக சொல்கிறார்.
இல்லை இல்லை.... அவர் இஸ்லாமியர் மீது பெரிய மரியாதை வைத்து இருக்கிறார். பார்ப்பனர் மட்டும் தான் அவர் எதிரி, என்று யாரும் எதிர் காலத்தில் சொல்லி விட கூடாதே என்ற எச்சரிக்கையில் அடுத்து இன்னும் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
"பார்ப்பானுக்கு பயந்தும், முஸ்லிம்களுக்கு அதிக இடம் கொடுத்தும் வந்தோம்.அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். இது சாணியை மிதிக்க அசிங்கப் பட்டு, மலத்தின் மீது காலை வைக்க நேர்ந்த பழமொழியாக முடிந்தது"
அதாவது பார்ப்பனர் கூட சாணிதானாம். இஸ்லாமியர் மலமாம்.
எவ்வளவு அழகான வார்த்தை பிரயோகம்?
முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.
"இவ்வளவும் எழுதப்பட்டதன் காரணம், மைனாரிட்டிகளை ஆதிக்கத்தில் விட்டு வைப்பதும், அவர்களது தனிச் சலுகைகளுக்கு இடம் கொடுப்பதும் நாட்டுக்கு- நாட்டுப் பெரு வாரி மக்கள் சமுதாயத்துக்கும் கேடு என்பதை விளக்கவேயாகும்"
இவ்வளவு தெளிவாக "பகுத்தறிவு பகலவன்" ஆழமாக சிந்தித்து தெளிவாக எடுத்து கூறி இருப்பதை ஏற்கவோ, ஏற்காவிட்டால் கண்டிக்கவோ மனமில்லாமல் ஓடி ஒளிபவர்களை எப்படி அழைக்கலாம்?
பின் குறிப்புகள்
1) வழக்கம் போல பதில் சொல்ல தெரியாத பகூத்துகள் ஈ வே ரா சொன்னதை, நான் திரித்து எழுதி இருப்பதாக சொல்வதற்கு முன், முதல் பின்னூட்டத்தில் இருக்கும் புத்தக ஆதாரத்தை பார்த்து விட்டு, வேறு ஏதாவது யோசிக்கவும்.
2) பதில் சொல்ல இயலாத பகூத்துகள் வழக்கம் போல் பார்ப்பான், அரை பார்ப்பான் என்று ஏதாவது உளறி விட்டு போகலாம்.

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...