Thursday, February 4, 2021

கோவில் இடத்தை ஆக்கிரமித்து திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கார்மல் சர்ச் சர்ச்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கார்மல் சர்ச் இருக்கும் இடம் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடியை தாண்டும். தற்போது இந்த நிலங்களை மீட்டு எடுப்பதற்காக அனைத்து இந்து அமைப்புக்களும் இந்து சொந்தங்களும் போராடி வந்த நிலையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக இந்து அறநிலைத்துறை இந்த நிலங்கள் முழுவதும் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்று கூறி DRO விடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மனு விசாரணைக்கு 4/1/2021 வந்தது. அன்றைய சமயம் வாய்தா வாங்கியது சர்ச் நிர்வாகம். 18/1/2021அன்றைய விசாரணையிலும் வாய்தா வாங்கியது சர்ச் நிர்வாகம். 1/2/2020இன்றைய விசாரணையிலும் எந்தவித ஆவணங்களையும் சர்ச் நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை . இந்த நிலையில் DRO அவர்களிடம் மேலும் அவகாசம் கேட்ட சர்ச் நிர்வாகம் போலி ஆவணங்களை சமர்ப்பித்தால் மாட்டிக்கொள்வோம் என்ற நிலையில் உள்ளது.
.
ஹிந்து அறநிலையத்துறை எல்லா ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ள நிலையில் சர்ச் நிர்வாகத்திடம் ஆவணங்கள் இல்லாத நிலையிலும் விசாரணை அதிகாரியிடம் வாய்தா வாங்கியுள்ளது சர்ச் நிர்வாகம். வருகிற 1/3/2021வாய்தா கொடுக்கப்பட்டுள்ளது அன்றையதினம் ஆவணங்களை சமர்ப்பிக்க விட்டால் விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .மேலும் இந்து அறநிலைக்கு சொந்தமான ராணி மங்கம்மாள் இடத்தினை மீட்கும் வரை ஹிந்து மக்களின் ஆதரவோடு போராட்டம் தொடரும்
 
 



No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...