Thursday, February 4, 2021

காருண்யா பால் தினகரன் அராஜகத்தை நீக்கி நல்லூர் வயல் மீடகப்படும்!!

இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால்..?
மத போதகர் பால் தினகரன் நடத்தும், காருண்யா கல்வி நிறுவனங்கள், 'ஏசு அழைக்கிறார்' உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கோவை நல்லுார்வயல் கிராமத்தில் செயல்படுகின்றன.
இந்நிலையில்,நல்லுார்வயல் தபால் நிலையமாக இருந்ததை, 1995ல், 'காருண்யா நகர்' தபால் நிலையமாக மாற்றினர்.அதேபோல், 'காருண்யா காவல் நிலையம், காருண்யா டெலிபோன் எக்சேஞ்ச்' என, அரசு நிறுவனங்களின் பெயர்களும் மாற்றப்பட்டதாக, அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில்,கிராமத்தின் பெயரையும், கலாசாரத்தையும் மீட்டெடுக்க, கிராம மக்கள், 'நல்லுார் வயல் பாதுகாப்பு குழு' என்ற அமைப்பை துவக்கினர். நேற்று மாலை, ஆலாந்துறை பகுதியில் கண்டன பேரணி நடத்தினர். மத்வராயபுரத்தில் திரண்ட மக்கள், நல்லுார்வயல் நோக்கி சென்றபோது, போலீசார் தடுத்து கைது செய்தனர்.

 
மத்வராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும், 'காருண்யா நகர்' என்ற பெயரை மாற்றி, நல்லுார் வயல் என, மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராமம் துவங்கும் இடத்தில், நல்லுார் வயல் கிராமத்தின் பெயர் பலகையும் வைக்கப்பட்டது.நல்லுார் வயல் பாதுகாப்பு குழுவினர் கூறுகையில்,
'நல்லுார் வயல் கிராமத்தின் பெயரை, காருண்யா நகர் என மாற்றியுள்ளனர். இங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர்களும், காருண்யா நகர் என மாற்றப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தின் பெயரை மாற்றுவது, அந்த கிராமத்தை அழிப்பதற்கு சமம்.'கிராமத்தின் கலாசாரம், வாழ்க்கை முறை புதைக்கப்படும். காருண்யா நகர் என்ற பெயரை மீண்டும் நல்லுார் வயல் என மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நல்லுார் வயல் என, அரசு அலுவலகங்கள் மற்றும் பஸ்களில் பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, கிராம மக்கள் சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
குறிப்பு; கைது செய்யப்பட வேண்டியவர்கள் யார்..?போராட்டம் செய்தவர்களை கைது செய்யும் இந்த அரசு,ஒரு ஊரி்ன் பெயரையே மாற்றியவருக்கு உடந்தையாக இருந்தது,இருப்பது ஏன்..?
இந்துக்கள் ஒன்றுபடாவிட்டால் தமிழகம் முழுவதும் இதேநிலை விரைவில் ஏற்படலாம்..
 
காருண்யாவிற்கு ஒரு பிரச்சனை என்றால் அடிமை ஊழியர்கட்கு விசுவாசம் வந்துருமே... ஊழியர் விசுவாசம் வந்திட மக்களை தூண்டிவிட
மலை வாழ் மக்களை ஈஷாவுக்கு எதிராக பிரச்சனை ஏதாவது செய்யுங்கள் என ஊழியம்- தூண்டிய சினிமா டைரக்டர் கவுதமன் அதே உள்ளூர் மக்களால் விரட்டியடிக்கப் பட்டார்..















2003 ம் ஆண்டு ஆலந்துறையில் "தென்கைலாய பாதுகாப்பு மாநாடு" காருண்யாவுக்கு எதிராக ஹிந்து முன்னணியால் நடத்தப்பட்டது. ஸ்ரீ ராமகோபாலன் ஜியின் தலைமையில் , காஞ்சி மடாதிபதி , பேரூராதீனம் உட்பட மடாதிபதிகளாலும் , ஆன்மிக பெரியவர்களா லும் நிறைந்த மேடை. 15000 க்கும் மேட்பட்டவர்களால் நிறைந்த மாநாடு . அதன் பிறகுதான் காருண்யாவின் வேகம் தடைபட்டது.


 
  

 

  

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா