Monday, February 8, 2021

கிறிஸ்துவம் மறைக்கப் பட்ட உண்மைகள்- நூல் டவுன்லோட் இணைப்பு

 ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை; பைபிள் இறைமொழி அல்ல;  

ஆய்வு நூல் டவுன்லோட் இணைப்புகள்  நூல் 

கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம்!!!  

ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை; பைபிள் இறைமொழி அல்ல
கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம்
கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை
 
இந்த முறை சென்னையின் மாபெரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சீக்கிரமே கிட்டியது. வழக்கம் போல் பல ஆன்மீக நூல்களை வாங்கிக் கொண்ட என் கண்ணில் இந்த புத்தகம் தட்டியது
 
“கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை”-இதை எழுதியவர் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் திரு இராம கோபாலன் ஐயா அவர்கள். அந்த புத்தகத்தின் கருத்துரையாக இந்த பதிவை இடுகிறேன்.
 
இந்த புத்தகம் 64 பக்கங்களைக் கொண்ட சிறிய புத்தகமாக இருந்தாலும், கிறித்தவ கதைகளின் ஆழத்தை எளிதாக புரிய வைக்கும்படியாக இருக்கிறது. இயேசு கிறித்துவின் கதை, பொன்னியின் செல்வன் போன்ற பெரிய கதை ஒன்றும் கிடையாது. இந்த புத்தகத்தில் பாதி புத்தகம் வரை இயேசு கிறித்துவின் முழுக் கதையையும் நம் முன் நிறுத்தி, அதில் ஒவ்வொன்றிலும் தங்கியிருக்கும் அடிப்படை உண்மைகளையும், முரண்களையும், கட்டு கதைகளையும், திரிபுகளையும் அழகாக படம் பிடித்து சுட்டி காட்டப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதி புத்தகம் முழுவதும் இயேசுவை சுற்றி வரையப்பட்ட பல்வேறு கதைகளும், கிறித்தவம் உலக அளவில் பரப்பபட ஏற்படுத்தபட்ட பல்வேறு திட்டங்களையும், பல வரலாற்று சான்றுகளையும் தொகுத்து மிக நேர்த்தியாக எடுத்துரைக்கிறது.
 
ஆதி தீபம் ஒன்று தான் கோடி தீபமாகும் என்ற கட்டுரை மூலம் ஆரம்பித்து, இதில் நம்நாட்டின் பெருமையை சுருக்கமாக கூறி, இன்று நம் நாட்டில் நடக்கும் அவலங்களை எடுத்துரைத்து, இந்த விழிப்புணர்வு புத்தகத்தை எல்லோரையும் சென்று அடைந்திட கோரிக்கையாகவும் இந்த கட்டுரையை வைத்துள்ளார் ஆசிரியர்.
 
“மற்றவர்கள் நம்மிடம் வந்து மனோவசியமாக பேசி நம்மைக் கலைக்கும் போது படித்தவனே வீழ்ந்துவிடுகிறான்”
மேற்கத்திய ஆய்வாளர்கள் வெளியிட்ட, மறுக்க முடியாத உண்மைகளாக இந்த இரண்டு அதிர்ச்சியளிக்கும் தகவல்களை முன்னுரையில் எடுத்துரைக்கிறார்:
 
ஏசு என்பவர் உண்மையிலேயே இல்லை.
கிறித்துவாக ஏசு உயிர்த்தெழுந்தார் என்ற கேலிக்குரிய கோட்பாட்டின் வாயிலாக கிறித்தவத்தை முதலாம் நூற்றாண்டில் தூய பவுல் பரப்பினார். Niceaவில் 325 BC யில் நடைபெற்ற முதல் தலைமை குருமார்கள் மாநாட்டில் பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் இது முறைப்படுத்தப்பட்டது.
மேலும், தன்னை ஆளுமை உணர்வு மிக்க ஒரு பாரம்பரியமாகவும், அதனை ஏற்றுக்கொள்ளாதவர்களையோ அரவணைக்காதவர்களையோ கொல்ல சமய ரீதியான அனுமதி அளிக்கும் இறையியலாக கிறித்தவம் இருக்கிறது. (Deuteronomy 13:6, John 15:6 & Luke 19:27)
கடவுளின் பெயராலும் அவரது தேவ வெ(றி)ளிப்பாடுகள் பெயராலும் நிகழ்த்தபட்ட பயங்கரமான அட்டூழியங்களையும், வன்முறையை ஏவி நாடுகளை கைப்பற்றவும் எவ்வாறு பயன்படுத்த பட்டது என்பதை தெளிவாக விளக்குவதோடு, தக்க ஆதாரங்களையும் எடுத்துரைப்பதாக, முன்னுரை அமைந்திருக்கிறது.
  
கிறித்தவத்தின் பின்புலத்தில் இருக்கும் உண்மைகளை தெரிவு படுத்துகிறது முதல் பகுதி. கிறித்தவம் என்பது விவிலியம் சார்ந்த, ஏசு மயக்கத்தில் இருக்கும் ஒரு சமயம். புனித விவிலியத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. பழைய ஏற்பாடு. புதிய ஏற்பாடு. டாக்டர் உமேஷ் பத்ரி PhD., விவிலியத்தின் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக 666 கேள்விக் கணைகளை தொடுத்துள்ளார். கிறித்துவை தழுவியே கிறித்தவம் இருக்கிறது. ஏசுவே,  கிறித்துவாக உருவாக்கபட்டுள்ளார். ஏசு என்பவர் இறைவனின் குமாரனாக புனையபட்டவர். தூய பவுலால் 49 CEல் உயிர்த்தெழச் செய்யபட்டு, கிறிஸ்துவாக ஆக்கபட்டவர்.
மேற்கத்திய அறிஞர்கள், வரலாற்று ரீதியாக ஒரு ஏசுவோ, ஒரு கிறித்துவோ, அதாவது ஏசு மீண்டும் ரத்தமும் சதையுமாக உயிர்த்தார் என்பதாக இருந்திருக்கவில்லை என்று ஏற்கனவே நிறுவி இருக்கிறார்கள். ஆகையால் ஏசு கிறிஸ்து என்பது சுவிசேக்ஷங்கள் முன்நிறுத்தும் ஒரு புனையப்பட்ட கற்பனை உருவமாகும். கிறித்துவத்தின் கோட்பாடு முதன்மையான பாவத்தை அடிப்படையாகவும், அதிலிருந்து உய்வினை, ஏசு கிறித்து மூலமாக பெறுவது என்பதாக, சுவிசேஷ ஏசுவைச் சுற்றியே இயங்குகிறது. ஏசுவின் முக்கிய நிகழ்வாக 1. தூய பிறப்பு 2. சிலுவையேற்றம் மற்றும் 3. உயிர்த்தெழுதல் கருதப்படுகிறது.  
ஏசுவின் பிறப்பில் பல முரண்பாடுகள் உள்ளன. மேரி என்ற கன்னிக்கு பரிசுத்த ஆவி மூலமாக ஏசு பிறந்ததாக ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்கான எந்த சான்றும் விவிலியத்தில் இல்லை. சுவிசேஷங்களில் குவிந்து கிடக்கும் மொத்த முழுவதுமான முரண்பாடுகள் ஏசுவின் தூய பிறப்பு என்பது ஒரு மாபெரும் பொய் என்பதை நிரூபிக்கிறது. மேரிக்கு ஏற்கனவே சோசப்புடன் திருமணம் ஆகியிருந்தபடியால் இவர்களுக்கு பிறந்ததாக கூறினால் இவரும் முதல் பாவத்திற்கு விலக்கல்ல என்றாகிவிடும். இதனால் இதை விசுவாசமுள்ள கிறித்தவர்கள் ஏற்க அஞ்சுகிறார்கள். மேரி பரிசுத்த ஆவி மூலம் கருத்தரித்தாள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. பிரான்சிஸ் வழி வந்தவர்களும், டொமினிக் வழி வந்தவர்களும் ஏசு பிறப்பு குறித்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டார்கள். புனித தாமஸ் ஆக்வினாஸ் இந்த கோட்பாட்டையே மறுக்கிறார். பழைய ஏற்பாடான தேவ வாக்கின் படி, ஏசு டேவிடின் வழித் தோன்றலாக வருகிறார்.
 
ஐயோ.. போதுமா குழப்பம் ? ஏசுவின் உண்மையான தாய் தந்தையர் யார் என்று கேளுங்கள் உங்கள் கிறித்தவ சகோதரர்களிடம். பல கதைகள் கிடைக்கும். இன்னும் ஏசு கிறித்து பிறந்த நாள் குறித்தும், அந்த பருவநிலை குறித்தும் பல முரண்பாடுகள் இந்த புத்தகத்தில் விரிவாக உரைக்கபட்டுள்ளது, தக்க ஆதாரத்தோடு.

மேற்கத்திய விவிலியம் சார், கிறித்து சார் ஆய்வாளர்கள், ஏசுவின் பிறப்பே கூட பெரிய பொய்யாக இருப்பதை நிரூபித்துள்ளனர். ஏசு வாழ்ந்தார் என்ற கூற்றேயை பொய்யாக்கும் வகையில் மறுக்க முடியாத பல ஆதாரங்களோடும் பிழையற்ற சான்றுகளோடும் நிரூபித்துள்ளனர். இந்த முக்கியமான கண்டுபிடிப்புக்களை எல்லாம் தன் அறிவுப்பூர்வமான புத்தகமாக “Jesus Christ: An Artifice for Aggression” இயேசு கிறிஸ்து – வன்முறைக்கான ஊற்று என்ற புத்தகத்தில் அருமையாக தொகுத்து அலசியிருக்கிறார் திரு சீத்தாராம் கோயல் அவர்கள்.
 
சிலுவையை கிறித்தவர்கள் முதலில் பயன்படுத்தவில்லை. எகிப்திய நாகரீகத்தின் சித்திர எழுத்திலும் புறசமய சின்னமாகவும் சிலுவை பயன்பட்டு வந்திருக்கிறது. பிற்காலத்தில் கிறித்தவர்கள் இதை தங்களுடைய சின்னமாக வைத்துக்கொண்டார்கள். இயேசு உயிர்தெழுந்தார் என்பதற்கான எந்த ஒரு சரித்திர சான்றுகளும் இல்லை. பவுல் தான் இந்த உயிர்த்தல் கோட்பாட்டை புனைந்து அளித்தார் என்று ஆராய்ச்சி வல்லுனர்கள் நிரூபித்துள்ளனர். சுவிசேஷத்தை போதிக்க ஏற்படுத்தபட்ட சீடர்களுக்கும் பிறர்க்கும் அவர் வரைந்த கடித்த்தில் தான் இந்த உயிர்த்தெழுதல் கதை புதியதாக சேர்க்கபட்டிருக்கிறது. 49 CEல் முதல் கொரிந்திய கடிதம் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. அது கிறிஸ்து உயிரோடு எழவில்லையெனில் நமது போதனைகளும் நம்பிக்கையும் முயற்சிகளும் வீண் என்று கூறுகிறது.
 
ஜெருசலேமிற்கு வெளியே இருந்த யூத சமூகத்துக்கு, பவுல் பித்தம் தலைக்கேறிய வகையிலான பல கடிதங்களை எழுதினார். இவை யாவும் புதிய ஏற்பாட்டில் இணைக்கப்பட்டன. ஆனால், யூத சமூகத்தினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறித்தவ கோட்பாடு என்பது நிஸியாவின் 4வது குழுவில் உருவம் பெற்றது. மனித தேவதூதனாக இருந்த ஏது, அமரத்துவம் நிறைந்த இறைவனாக, கூடியிருந்த மதகுருமார்கள் வாக்கெடுப்பின் மூலம் மாறினார். இவ்வாறாக கிறித்தவம் என்பது பவுலால் நிறுவப்பட்ட சமயம். இது 4ம் நூற்றாண்டில் அரசியலாக்கப்பட்டது.
 
விவிலியத்தில் இருக்கும் முரண்பாடுகள் எண்ணிலடங்காதவை. உலகம் தட்டையானது முதல் ஏற்றுக்கொள்ளப் படமுடியாத கோட்பாடுகள் எண்ணற்ற உள்ளன. இன்னொரு முக்கிய தத்துவம் உலகம் எப்படி படைக்கபட்டது என்றும், ஆதாம் ஏவாள் கதையும், முதல் பாவமும். இதில் இருக்கும் முரண்பாடுகளும் தற்கால கண்டுபிடிப்புகளுக்கு ஒவ்வாத கருத்துக்களும் நாம் கண்கூடாக காணும் ஒன்று. தனிமனிதன், படைத்தல் காத்தல், கடவுளின் கிருபை என்று இதில் உள்ள உண்மைகளை இந்த புத்தகம் அலசுகிறது. http://www.jesusneverexisted.com என்ற இணையதளத்தில் பல நம்பகமான தகவல்கள் உள்ளன.
 
கிறித்தவம் என்பது ஒரு மதமல்ல. உலக ஆளுமைக்காக வன்முறையை கையாண்ட ஏகாதிபத்தியம் என்பதை தவிர வேறொன்றுமில்லை. கிறித்தமும் இஸ்லாமும் தங்கள் மூடத்தனமான வெறியையும், உலகை வெற்றி கொள்ளும் பேராசைகளையும் விட்டொழித்தாலன்றி கலாச்சார மோதல்கள் தொடர்வதோடு மேலும் தீவிரமடையவே செய்யும். இது நடப்பதற்கான சாத்தியகூறுகள் அரிதாகவே இருக்கின்றன. ஏனென்றால், மூடத்தனமான வெறியும், சமய ஏகாதிபத்தியமும் அவர்கள் மத நூல்களில் மத நம்பிக்கை முறைகளிலேயே பொதிந்திருக்கின்றன. இந்த முறைகளை சீர்திருத்தியாக வேண்டும். ஆனால் அது சாத்தியமல்ல. அவற்றைப் பின்பற்றுபவர்கள் அவற்றை கடவுளர்களின் திவ்யமான வெளிப்படுத்தல்களாக நம்பவைத்துள்ளார்கள்.

பல ஆதாரங்களை தொகுத்து வெகு அற்புதமாக பல இணைப்புகளில் இந்த புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதை யாவரும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இவற்றில் இருக்கும் மீடியாக்கள் பற்றிய செய்திகளை மட்டும் கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
 
நமது நாட்டில், ஒட்டுமொத்த பத்திரிக்கைகளும், தொலைகாட்சிகளும் நேரடியாக கிறிஸ்தவர்களாலோ இல்லை, வியாபார நோக்கில் மற்றவர்களாலோ நடத்தப்படுகின்றன. இவையாவும் கிறிஸ்தவர்களால் வளைக்கபடுகின்றன.

மீடியாக்களின் பலத்தால் இந்து மக்களுக்குத் தங்கள் மதத்தின் மீது உள்ள நம்பிக்கைகளைத் தளர்த்தி குலைக்கும் விதமாக செயல்பட்டு மூளைச்சலவை செய்யப்படுகிறது. இந்து சமய நம்பிக்கை குலைந்தபின் சுலபமாக இந்துக்களின் மனதை மதமாற்றம் செய்யப்படுகிறது.
 
உதாரணமாக அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானது என்றும், சபரிமலை சோதி பற்றிய சந்தேக கேள்விகளையும் NDTV, CNN, IBN போன்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சி மீடியாக்கள் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. அது போல, இந்துத் துறவிகள் பற்றிய அவதூறு செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அதுவே கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றிய குற்றச் செய்திகளை மூடி மறைக்கின்றன என்பது உண்மை.
 
THE HINDU – தி இந்து நாளிதழ் – இதற்கு நிதியுதவி அளித்து வருவது ஜோஸ்வா சொசைட்டி, சுவிட்சர்லாந்து. இது மட்டும் கிறிஸ்தவ அமைப்பு அல்ல. இந்து பத்திரிக்கையினஅ ஆசிரியர் என். ராம் அவரது மனைவியும் ஒரு கிறிஸ்தவர். 
  
NDTV – க்கு முழு நிதியுதவி செய்து வருவது கோஸ்பல் சாரிட்டி என்கிற ஸ்பெயினில் இயங்கும் கிறிஸ்தவ அமைப்பாகும்.
CNN, IBN  ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு 100% நிதியுதவி செய்வது புகழ்பெற்ற சதர்ன் பாப்டிஸ்ட் சர்ச்.
THE TIMES OF INDIA GROUP தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை பெர்னாட், மற்றும் கோலாமென் என்பவர்களால் நடத்தப்படுகிறது. இதற்கு 80% நிதியளிப்பது உலக கிறிஸ்தவ ஆலோசனை சபை. மீதமுள்ள 20% ஓர் இத்தாலியரால் அளிக்கபடுகிறது. அவர் சோனியாகாந்தியின் நெருங்கிய உறவினர்.
STAR TV GROUP – செயின்ட் பீட்டர் பொன்டிபிசியல் சர்ச், மெல்போர்ன் ஆஸ்திரேலியா.
ஈநாடு மீடியாவை நிர்வகிப்பது இராமோஜிராவ் என்ற இந்து பெயரை கொண்ட கிறிஸ்தவர்.
ஆந்திரஜோதி என்ற பத்திரிக்கை எம்.ஐ.எம் என்ற தி முஸ்லீம் பார்டி ஆப் ஹைதராபாத் கட்சியால் வெளியிடப்படுகிறது. இதை தற்போது ஒரு காங்கிரஸ் மந்திரி வாங்கியதாக தகவல் உள்ளது. காங்கிரஸ் கட்சியே கிறிஸ்தவ கட்சியாகிவிட்டது.
கைரளி டி.வி. கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் இயக்கபடுகிறது.
மாத்ருபூமி – முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.
ஏசியன் ஏஜ், டெக்கான் கிரானிக்கல் பத்திரிக்கைகள் சவுதி அரேபியன் கம்பெனிகளால் நடத்தப்படுகிறது.
  
முடிவுரை
 
ஏசு கிறிஸ்து என்று மதத்தின் போர்வையில், வெளிநாட்டு அரக்கர்கள் மெதுமெதுவாக நம்மையும் நம் கலாசாரத்தையும் அழித்து தங்கள் ஆதிக்க வெறியை நம் நாட்டில் நிலை நாட்ட, அவர்களின் கருப்பு கோர கைகளால் நம்மை அணைத்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை இந்த புத்தகம் தெளிவாக உணர வைக்கிறது. இன்னும் நாம் ஒற்றுமை இல்லாமலும், உறங்கிக் கொண்டும், டி.வி. பார்த்துக் கொண்டும் இருந்தால், நம் குழந்தைகளுக்கும் நம் வருங்கால சந்ததிகளுக்கும் நிம்மதியற்ற வாழ்க்கையினை கொடுத்துவிட்டு, அவர்கள் தலைமுறைக்கும் நம்மை திட்டும் நிலைக்கு தள்ளிவிடுவோம்.
 
இந்த புத்தகத்தை பல நகல்களாக வாங்கி, நண்பர்கள் உறவினர்களுக்கும் கொடுத்த படிக்க செய்யுமாறு ஆசிரியரே கேட்டுக்கொண்டுள்ளார். இயலாதவர்கள், நடமாடும் நூலகமாக செயல்பட்டு இந்த நூலை இரண்டு நாட்களிலோ அல்லது இரயில், பேரூந்துகளில் பயணம் செய்யும் போது படிக்க கொடுத்து வாங்கவும் கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொருவரும் குறைந்தது 100 குடும்பங்களையாவது விழிப்புணர்வு பெற்ற குடும்பமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார். நாமும் நம் கடமையை செய்வோம்.
உண்மைகள் சீக்கிரம் வெளி வரும். தர்மமே வெல்லும். 
 

 

 
  
  
  

  

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...