Thursday, February 4, 2021

இயேசு பற்றிய சுவிசேஷக் கதைகளில் தீர்க்க தரிசனம் கட்டுக்கதைகள்

இயேசு பற்றிய சுவிசேஷக் கதைகளில்  தீர்க்க தரிசனம் நிறைவேறல் என்னும் கட்டுக் கதை. இயேசு பற்றிய நம்மிடம் உள்ள கதைகள்- செய்திகள் அனைத்திற்கும் உள்ள தரவுகள் கிரேக்க மொழியில் வரைந்த சுவிசேஷக் கதைகள் மட்டுமே

இயேசு -ரோமன் கவர்னர் கைது செய்து ரோம் சட்ட  முறைப்படியான மரணதண்டனை முறையில் செத்த மனிதன் என்பதே கதை. இறந்த இயேசுவை தெய்வீகர் என நம்பி அதை உறுதி செய்யும் வைகையில் கதாசிரியர்கள் சுவிசேஷம் புனைந்தனர்.நாம் இதை ஆதாரங்களோடே காண்போம்.

இயேசு தான் கைதாகப் போவதையும் பின் பழைய உடம்பில் உயிர் பெற்று காட்சி தருவது பற்றியும் முன்பே சொன்னார் எனக் கதை.


 மாற்கு 14: 28 இயேசு -நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.
 மத்தேயு 26: 32  இயேசு - நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார். 
 மத்தேயு 28: 5 தூதன் பெண்களிடம்... 7இயேசு சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு கலிலேயாவிற்குச் சென்று கொண்டு   ருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார்.’ அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்” என்று கூறினான்.   16.பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள்.17மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள். 

கதைப்படி இறந்த மனிதரை இஸ்ரேலிய நாட்டை எதிர்களிடமிருந்து மீட்க வரவேண்டிய மேசியா எனக் காட்ட- ஏசு வாழ்வின் சம்பவங்களில் தீர்க்கர் சொன்னவை நிறைவேறின எனக் கதை
  

 மத்தேயு1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். 21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. 


மத்தேயு இங்கே ஏசையா வசனங்கள் சுட்டுவாராம்.
ஏசு பிறந்தபின் வாழும் நாட்டில் வாழ முடியாமல் எகிப்து ஓட்டம், பின் வேறு பகுதியில் குடியேற்றம்- எங்கு பாலும் தேனும் ஓடியது. ஒரு தீர்க்கமும் நிறைவேறவில்லை.
  

 எசாயா7:13 அதற்கு எசாயா: தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
15 தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.


 மூல எபிரேய மொழியில் கன்னிப் பெண் என்ற வார்த்தையே இந்த வசனத்தில் இல்லை

  

 மத்தேயு2:19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' ″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. 


 யோவான் 19:19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ‘ நாசரேயன் இயேசு யூதர்களின் அரசன் ‘ என்று எழுதியிருந்தது.
இதில் நாசரேயன் என்பதை சுவிசேஷக் கதாசிரியர்கள் நாசரேத்து ஊர்க்காரன் என நம்பி, லூக்காவின் ஏலி மகன் ஜோசப் நாசரேத்துக்காரர்- சென்சஸ் என பெத்லஹெம் சென்றதாகக் கதை.
மத்தேயுவோ பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் என்றிட, பெத்லஹெம் வாழ்பவரை நாசரேத் வர- நட்சத்திரத்தைக் கண்டு ஜோசியர் சொல்ல- ஏரோது குழந்தை கொல்லல் கதை-
 பின் ஏரோது மரணத்திற்குப்பிந் யுதேயாவை ஏரோது மகன் ஆர்கிலேயு ஆள்வதால் நாசரேத் வந்ததாகக் கதை.
கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகன் அந்திப்பா தான்.
நாசரேத்து எனும் ஊர் முதல் நூற்றாண்டில் இருந்தது இல்லை.

http://www.nazarethmyth.info/
இயேசு சீடரோடு இயங்கிய பெரும்பாலும் கப்பர்நகூமில் தான் இருந்தார்.
  
பிறப்பு கதைகளில் புனையல்கள் பொருந்தவில்லை எனப் பார்த்தோம். சீடர்கள் ஏசு இயக்கம் ஆரம்பித்தபின் நடந்த கதைகளை மட்டுமே கண்டிருப்பர்- இவை வெற்று புனையல் எனலாம்.

யூதாசின் தற்கொலை
ஏசு மரணத்தின் போது தன்னோடு இயங்க தகுதியானவர் எனத் தேர்ந்தெடுத்து ஏசுவோடு கூடவே இருந்து அவரிடம் போதனை பெற்ற சீடர் யூதாசு இஸ்காரியோத்து- இயேசுவைக் காட்டிக் கொடுத்தவர்.
   
பணத்திற்கு காட்டிக் கொடுத்தவர்  யூதாசு- பணத்தை யூத தேவாலய்த்தில் வீசி எறிந்து தூக்கில் தொங்கி இறக்கிறார். (இது ஏசுவின் மரணத்திற்கு முன்பே) யூதப் பாதிரிகள் அந்தப் பணத்தில் யூதர் அல்லாத மக்களுக்கான சுடுகாடு நிலம் வாங்க தீர்க்கம் நிறைவேறியதாம்.

 மத்தேயு27யூதாசின் தற்கொலை
(திப 1:18 - 19)
3 அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,4 ' பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன் ' என்றான். அதற்கு அவர்கள், ' அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள் ' என்றார்கள்.5 அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான்.6 தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, ' இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல ' என்று சொல்லி,7 கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள்.8 இதனால்தான் அந்நிலம் ' இரத்த நிலம் ' என இன்றுவரை அழைக்கப்படுகிறது.9 ' இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து10 ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள் ' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.


 அப்போஸ்தலர்1:16 அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்கு கிடைத்த கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின.19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது. அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் அக்கலிதமா என வழங்குகின்றார்கள். அதற்கு இரத்தநிலம் என்பது பொருள்.


  
 அப்போஸ்தலர் நடபடிகள் - கதாசிரியர் (லூக்காதானாம்) ஏசு மரணத்திற்குப்பின்  யூதாசு பணத்தில் நிலம் வாங்கில் அதில் நடக்கும் போது உடல் பலூன் போலே ஊதி வெடித்து இறக்க அந்நிலம் யூதர் அல்லாத மக்களுக்கான சுடுகாடு நிலம் வாங்க தீர்க்கம் நிறைவேறியதாம்.


யூதாசு - ஏசு மரணத்திற்கு முன்பே தூக்கில் மரணமா- 
                         ஏசு மரணத்திற்கு பின் நிலம் வாங்கி வெடித்து மரணமா- ஒருவர் ஒரு முறை தான் சாகலாம். இதிலும் தீர்க்கம் நிறைவேறலாம் கட்டுக்கதைகள்.

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...