Saturday, June 25, 2022

அமெரிக்க கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து- மதவாதம் வென்றது

கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து.. இந்த தீர்ப்பால் 150 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டோம்..  ஜோ பைடன்


Supreme Court committed tragic error. US back 150 years: Joe Biden vinoth kumar   25.06.2022 அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்ட பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு  உச்ச நீதிமன்றம் 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது. 

இந்நிலையில், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவுக்கு மோசமான நாள் என தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு உரிமை சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் பெண்களின் அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் பறிக்கிறது. பெண்களின் அடிப்படை உரிமையை பறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் வரலாற்று பிழையை இழைத்து விட்டது. கிட்டத்தட்ட 150 வருடங்கள் அமெரிக்காவை இந்த தீர்ப்பு பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடுபவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனவும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க கருக்கலைப்பு சட்டம்: பெண் ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தனியார் நிறுவனங்கள்

https://www.hindutamil.in/news/world/818310-after-us-abortion-ruling-companies-reach-out-to-help-women-employees.html

வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் கருக்கலைப்பு சட்ட தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், அதே வேளையில் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் பலவும் பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. வெறும் ஆதரவு என்ற வார்த்தைகளைத் தாண்டி சில நிறுவனங்கள் ஒருபடி மேலே சென்று, பெண்கள் கருக்கலைப்பு செய்ய அண்டை நாடுகளுக்குச் செல்ல விரும்பினால் அவர்களுக்கு விடுப்பு, பயணப்படி என எல்லாம் தருவதாக அறிவித்துள்ளன.

வழக்கு பின்னணி: கடந்த 1973 ஆம் ஆண்டு, கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்று 1973-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து. ஆனால், அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 50 ஆண்டு காலத்திறகுப் பிறகு கருக்கலைப்பு உரிமை சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை இயற்றியுள்ளன. தன் சொந்த தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் மீறிவிட்டதாக எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. இதற்கிடையில், கிடைத்துள்ள ஆறுதல் செய்திதான் வரிசைக்கட்டி உதவிகளை வாரி வழங்கும் அமெரிக்க நிறுவனங்களின் அறிவிப்பு. அதன் விவரம்:

அமேசான்: அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய வேலைவாய்ப்புக் களமான அமேசான், தனது பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு உள்பட உயிருக்கு ஆபத்து ஏற்படாத பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ள பயணப்படியாக 4,000 டாலர் வரை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் இன்க்: இந்நிறுவனமானது தனது பெண் ஊழியர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மருத்துவக் கப்பீடு திட்டத்தின் கீழ் கருக்கலைப்பும் அதற்கான பயணச் செலவும் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட்: மைக்ரோஃபாஃப்ட் நிறுவனமானது கருக்கலைப்பு மற்றும் பாலினம் சார்ந்த மருத்துவ சேவைகளுக்கான காப்பீட்டை விரிவுபடுத்தி இனி பயணச் செலவையும் சேர்த்து வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது.

மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ் இங்க்: தங்கள் நிறுவனம் கருக்கலைப்பு செய்ய வெளிநாடு செல்லும் பெண் ஊழியர்களின் பயணச் செலவை திருப்பி அளிக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனை எவ்வளவு சிறப்பாக செய்யலாம் என்பது குறித்து சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளது.

வால்ட் டிஸ்னி: கருக்கலைப்புக்காக வெளிநாடு செல்லும் ஊழியர்களின் செலவை உள்ளடக்கிய இன்சூரன்ஸ் திட்டங்கள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ்: நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் எப்படி தனது ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த நெருங்கிய உறவினர்கள் புற்றுநோய், உறுப்புமாற்று சிகிச்சைக்கு செல்லும்போது பயணச் செலவை ஏற்றுக்கொள்கிறதோ அதுபோலவே கருக்கலைப்பு செலவையும் ஏற்றுக் கொள்ளும்.

சிட்டிகுரூப் இங்க்: சிட்டிகுரூப் இங்க் நிறுவனமானதும் பயணச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது. ஜேபிமார்கன் சேஸ் அண்ட் கோ: ஜேபி மார்கன் சேஸ் அண்ட் கோ நிறுவனமானது அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் சட்டபூர்வமாக கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறதோ அந்த மாகாணத்துக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டு திரும்ப பயணச் செலவைத் திரும்பத் தரும் என்று கூறியுள்ளது.

ஸ்டார்பக்ஸ்: ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் தங்களின் பெண் ஊழியர்கள் சட்டபூர்வ கருக்கலைப்புக்காக 100 மைல் தாண்டிய இடத்துக்குச் செல்வது தேவையாக இருந்தால் அவர்களுக்கு பயணச் செலவை திரும்ப அளிக்கும். அவர்களுடன் செல்லும் நபருக்கான செலவையும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோ: தங்கள் ஊழியர்களின் கருக்கலைப்பு செலவு பயணச் செலவு என எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.

உபெர் டெக்னாலஜிஸ்: தனது நிறுவனத்தின் ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில், மகப்பேறு, கருக்கலைப்பு செலவுகள் ஏற்கும் வழிவகை உள்ளது என்று கூறியுள்ளது.

கோல்ட்மேன் சேக்ஸ் குரூப்: ஜூலை 1 ஆம் தேதி முதல் தனது நிறுவன ஊழியர்களின் கருக்கலைப்புக்கான பயணச் செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது.  

ரோ Vs வேட்: கருக்கலைப்பு குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன சொல்கிறது?

ரோ Vs வேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 1973ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு முக்கிய தீர்ப்புக்கு பிறகு, அந்நாடு முழுவதும் கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டது. அந்த வழக்கே ரோ vs வேட் வழக்கு என்று அழைக்கப்படுகிறது. இப்போது, அந்தத் தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம், 22 அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்பு உடனடியாக சட்டவிரோதமாக்கப்பட்டு உள்ளது.

ரோ Vs வேட் - என்ன வழக்கு?

1969 ஆம் ஆண்டில், 'ஜேன் ரோ' என்ற புனைப்பெயரைக் கொண்டு நார்மா மெக்கோர்வி என்ற 25 வயதான திருமணமாகாத பெண் ஒருவர், டெக்சாஸில் உள்ள குற்றவியல் கருக்கலைப்புச் சட்டங்களை எதிர்த்து வழக்கு தொடுத்தார்.

தாயின் உயிருக்கு ஆபத்து உள்ள சூழ்நிலைகளைத் தவிர, மற்ற நிலைகளில் கருக்கலைப்பு செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்று வழக்கில் டெக்சாஸ் நீதிமன்றம் தடை விதித்தது.

கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை ஆதரிப்பவர் ஹென்றி வேட். அவர் டல்லாஸ் மாகாணத்தின் வழக்கறிஞர். அதனால், இந்த வழக்கு ரோ Vs வேட் என்று அழைக்கப்படுகிறது.

நார்மா மெக்கோர்வி வழக்கு தொடுத்தப்போது, தனது மூன்றாவது குழந்தையுடன் அவர் கர்ப்பமாக இருந்தார். மேலும் அவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டதாகக் கூறினார். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், அவர் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கடந்த 1973ஆம் ஆண்டில் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது வழக்கை சாண்ட்ரா பென்சிங் என்ற 20 வயதான ஜார்ஜியா பெண் தொடுத்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது. டெக்சாஸ் மற்றும் ஜோர்ஜாவில் கருக்கலைப்புச் சட்டங்கள் அமெரிக்க அரசியலமைப்புக்கு எதிராக இருக்கிறது என்று அவர்கள் வாதிட்டனர். ஏனெனில், அவை ஒரு பெண்ணின் தனி மனித உரிமையை மீறுகின்றன என்று அவர்கள் வாதிட்டனர்.

இந்த விவகாரத்தில், ஏழுக்கு இரண்டு வாக்குகள் மூலம், கருக்கலைப்பைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

கர்ப்பத்தைக் கலைக்கும் ஒரு பெண்ணின் உரிமையை அமெரிக்க சட்டம் பாதுக்காக்கும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

ரோ Vs வேட்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

இந்த வழக்கு பெண்களின் உரிமையை எப்படி மாற்றியது?

இந்த வழக்கு 'டிரைமெஸ்டர்' (மூன்று மாத கணக்கு) முறையை உருவாக்க அனுமதிக்கிறது. அதாவது:

1. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான முழு உரிமை தரப்படுகிறது.

2. இரண்டாவது மூன்று மாதங்களில், சில அரசுக் கட்டுப்பாடுகளுடன் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

3. கருப்பைக்கு வெளியே வாழக்கூடிய கட்டத்தை அந்த சிசு நெருங்கி விடுவதால், கடைசி மூன்று மாதங்களில் கருக்கலைப்புகளை கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ மாகாணங்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது.

ரோ Vs வேட் வழக்கில், இறுதி மூன்று மாதங்களில், ஒரு பெண்ணின் உயிரையோ உடல்நலத்தையோ காப்பாற்றுவது அவசியம் என்று மருத்துவர்கள் சான்றளித்தால் மட்டுமே எந்தவொரு சட்டபூர்வ தடையையும் மீறி கருக்கலைப்பு செய்ய முடியும் என்பதை வலியுறுத்தியது.

ரோ Vs வேட் வழக்கு எப்படிரத்து செய்யப்பட்டது?

15 வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்புக்கு மிஸ்ஸிசிப்பி மாகாணம் தடை விதித்ததற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

இதன் மூலம், மில்லியன் கணக்கான அமெரிக்கப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமையை அந்த தீர்ப்பு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

தனிப்பட்ட மாகாணங்களால் இப்போது இந்த நடைமுறைக்கு மீண்டும் தடை விதிக்க முடியும்.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் பாதி, புதிய கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கருக்கலைப்பை தானாகவே தடை செய்யும் மாற்று சட்டங்களை (trigger laws) ஏற்கெனவே 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. இன்னும் சில மாகாணங்கள், புதிய கட்டுப்பாடுகளை விரைவாக நிறைவேற்ற வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் ஆறு பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களால் நியமிக்கப்பட்டவர்கள்.

2022ஆம் ஆண்டு மே மாதம், இவர்களில் ஒருவரான நீதிபதி சாமுவேல் அலிட்டோவின் விரைவில் குறிப்பிடப்பட்ட கருத்து ரகசியமாக வெளியானது. அதில் ரோ Vs வேட் தீர்ப்பு 'மிகவும் தவறானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரோ Vs வேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கருக்கலைப்புக்கு ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகள்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு முன்பே, கருக்கலைப்பை எதிர்க்கும் குரல்கள் அங்கு வலுப்பெற்றுள்ளன.

1980ஆம் ஆண்டில், ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவசியம் இருக்கும் நிலையைத் தவிர, கருக்கலைப்புக்கு அரசு நீதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை நீதிமன்றம் உறுதி செய்தது.

பின்னர் 1989ஆம் ஆண்டில், அரசு மருத்துவமனைகளில் அல்லது அரசு ஊழியர்களால் கருக்கலைப்பு செய்வதைத் தடை செய்ய மாகாணங்களுக்கு அனுமதி அளித்தது.

1992ஆம் ஆண்டு, மற்றொரு முக்கிய வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியது.

ரோ Vs வேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ய மாகாணங்கள் கட்டுப்பாடு விதிக்கலாம் என்று அந்த தீர்ப்பு கூறியது.

இதன் விளைவாக, பல மாகாணங்கள் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இளம் கர்ப்பிணிகள் கருக்கலைப்பு குறித்து எடுக்கப்படும் முடிவில், அவர்களின் பெற்றோர்களோ ஒரு நீதிபதியோ தலையிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.

மேலும், ஒரு பெண் கருக்கலைப்பு கிளினிக்கிற்கு செல்லும் நேரத்திற்கும், கருக்கலைப்பு செய்யப்படும் சமயத்திற்கு இடையில் உள்ள காத்திருக்கும் நேரம் போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கெனவே பிற மாகாணங்களில் உள்ளன.

இதன் விளைவாக, பல பெண்கள் கருக்கலைப்பு செய்ய அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் மாகாணங்களின் எல்லைகளைத் தாண்டி, அவர்களுக்கு அதிக பணம் செலுத்த வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா