மாரியாத்தா கூலி கொடுத்துட்டா... -இருக்கன்குடி பூசாரிகள் சஸ்பெண்ட்!
‘‘இருக்கன்குடி மாரியம்மன் சிலையைக் கண்டெடுத்தவர் பரிபூரணத்தம்மாள்; அவரின் கணவர் ராமசாமி. இந்தத் தம்பதியின் வாரிசுகள்தான் கோயிலை நிர்வகிக்க வேண்டும் என அம்மன் அருள்வாக்கு கூறியதாகத் தலவரலாறு. அன்று முதல் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்தான் கோயில் பூஜைகள் மற்றும் பிற வருமானங்களைக் கவனித்து வருகின்றனர். இப்போதும் அந்த வம்சத்தில் வந்த மூன்று குடும்பத்தினர்தான் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கோயிலில் பூஜை செய்து வருகின்றனர். அந்த மூன்று குடும்பங்களின் சார்பில் 10 பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பரம்பரை அறங் காவலராக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
சமீபகாலமாக, திருக்கோயிலுக்கு யார் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் என்பதில் அந்த மூன்று குடும்பங்களுக்கு இடையே பூசல் உருவாகி, அந்தப் பிரச்னை பூதாகாரமாகிவிட்டது. இதற்கிடையில் திருக்கோயிலின் உண்டியல்களும் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளால் நிரம்பி வழிந்திருக்கின்றன. உண்டியல்களைத் திறப்பதற்காக அதிகாரிகள் போயிருக்கிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட குடும்பத்தினர், பரம்பரை அறங்காவலர் பிரச்னை தீராமல் உண்டியலைத் திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கவே, உண்டியல்களை சாக்குப் பைகள் போட்டு மூடி வைத்திருக்கிறார்களாம்.’’
ஏற்கெனவே இந்தக் கோயிலை அறநிலையத் துறை கையகப்படுத்த நினைத்தபோது, அந்தக் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. இறுதியாக, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அந்த பூசாரிகளின் குடும்பச் சொத்து; எனவே, எல்லா உரிமைகளும் பூசாரிகளுக்கு இருக்கிறது. கோயில் உண்டியலைத் தவிர, மொட்டை போடுதல், சிறப்பு தரிசனக் கட்டணம் உள்பட கோயிலின் பிற வருமானத்தில் பூசாரிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு தர வேண்டும் என்று இந்து அறநிலையத் துறைக்கும், கோயிலில் பூஜை செய்யும் அந்த வாரிசுக் குடும்பங்களுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை உருவாக்கப்பட்டு, இருக்கன்குடி கோயிலை நிர்வகிப்பது, கண்காணிப்பது மட்டுமே இந்து அறநிலையத் துறையின் பணி என்றானது. இப்போது ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக அரசுக்குக் கணக்கு காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் கோயில் வருமானம் பல கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள் பக்தர்கள். சாமி கும்பிட சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.10-தான். ஆனால், பிளாக்கில் ரூ.50-க்கு விற்கிறார்களாம்.
அதேபோல், முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம், நேர்த்திக்கடன் செலுத்துவதற்கான கட்டணம் போன்றவற்றிலும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது; கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை ஏலம் விடுவதிலும், மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கும் பட்டுத் துணிகளை ஏலம் விடுவதிலும்கூட நிறைய முறைகேடுகள் நடக்கின்றன என்கிறார்கள்.
இதுபோன்ற முறைகேடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கிறார்களாம்; பக்தர்கள் தட்டிக் கேட்டாலும், ஒரு பலனும் இல்லை
நாறிப் போன இருக்கன்குடி மாரியம்மன் கோவில் நிர்வாகம்
தென்தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.
இங்கு சித்திரை, ஆடி, தை மாதங்களில் நடைபெறும் விழாக்களில் பல லட்சம் மக்கள் சாமி தரிசனம் செய்வர். இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி பித்தளை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் அங்கவஸ்திரங்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.
தமிழகம் முழுவதிலுமிருந்து இந்த திருக்கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லாத அசிங்கமான அவல நிலை நீண்டகாலமாக உள்ளது.
அதுபோக இங்கு பல்வேறு உள்குத்து ஊழல் பிரச்சினைகள் உள்ளது.
பக்தர்களுக்கு கழிப்பறை வசதி கட்டப்பட்டிருந்தாலும் அது காட்சிப் பொருளாகவே இன்றளவும் உள்ளது.
ஒரு சில கழிப்பறைகளை மட்டும் மாலை 6 மணிக்கு மேல் பூட்டி விடுகின்றனர்.
ஒருமுறை இந்தத் திருக்கோயிலுக்கு இரவில் வந்து தங்கும் பக்தர்கள் அடுத்த முறை கண்டிப்பாக இரவு தங்கவே மாட்டார்கள்.
இது நடைமுறை உண்மை…!
காரணம்….
பக்தர்களின் அவசர இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்வதற்காக வெட்டவெளியில் கழிப்பிடமாக பக்தர்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழித்துக் கொள்கின்றனர்.
இது பற்றி கோவில் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டாலும் பயனில்லை…!
வெள்ளி ஞாயிறு கிழமைகளில் கூட்டம் வரும் நாட்களில்…. இருக்கும் கழிப்பிடம் நரகமாக மாறிவிடும்.
ஆட்டுக் கிடா வெட்டும் இடம் ரத்தம் தேங்கிய கழிவுநீர் குட்டையாக காட்சி தருகிறது. இது சுற்றுப்பகுதியில் மிகுந்த துர்நாற்றம் அடிக்கிறது.
அப்பகுதியில் தான் கோவில் மூலவருக்கு நந்தவனம்…. அது கூவத்தை விட மோசமான நிலையில் உள்ளது.
இங்கு நடக்கும் ஆறு கால பூஜையிலும் ஆகமவிதிப்படி கொட்டும் முரசு, நாயனம், மேளதாளம் முழங்க பூஜைகள் நடைபெற்று கொண்டிருந்தது.
சமீப காலமாக கொட்டும் முரசு,நாயனம் ஒலிக்காமலும் மேளதாளம் முழங்காமலும் மூலவருக்கு பூஜை நடைபெற்று கொண்டிருக்கிறது.
அம்மனை தரிசிக்க 30 ரூபாய் கட்டண சீட்டு எடுத்துக்கொண்டு வரிசையில் வரும் பக்தர்கள் படும் பாடு சொல்லி மாளாது.
விவிஐபி எனும் அரசியல் பணம் செல்வாக்கு படைத்தவர்களை சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பணத்திற்காக அவர்களை சுவாமி தரிசனம் செய்ய குறுக்கு வழியில் உட்புகுந்து வருகின்ற காரணத்தால் பொது தரிசன வழியில் வரும் பக்தர்களும் சிறப்பு தரிசன வழியில் வரும் பக்தர்களும் மூலவர் தெரியாமல் ஒரே கூச்சலும் குழப்பமும் ஒவ்வொரு வெள்ளியும் ஞாயிறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
அரசு விதிகளின்படி கோவிலில் யாருக்கும் வி.வி.ஐ.பி., எனும் சிறப்பு மரியாதை ஏதும் செய்யக்கூடாது என உத்தரவு இருந்தும்.
கோவில் ஊழியர்கள் இவ்வாறு பணத்தைப் பெற்றுக்கொண்டு வசதியான பக்தர்களை குறுக்கு வழியில் தரிசனம் செய்ய வைக்கிறார்கள்.
இதனால் கட்டண வரிசையில் வரும் பக்தர்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இதனை பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் சென்று புகார் கூறினால் அலுவலக ஊழியர்கள் அவர்களை சமரசம் பேசி அவர்களையும் குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்யவைத்து அனுப்பிவிடுகிறார்கள்.
வருகின்ற பக்தர்களுக்கு முறையான அடிப்படை வசதி ஏதும் நிறைவாக செய்யப்படுவதில்லை.
மேற்சொன்ன புகார்களில் எல்லாம் கோவில் நிர்வாகம் கவனத்தை செலுத்துவது கிடையாது
மாறாக தலைமுடியை மொட்டை போடும் பக்தர்களிடம் முறைகேடாக வசூலிக்கும் கட்டணத்தில் எவ்வளவு கமிஷன் பெற்றோம் என்பதில்தான் கண்ணும் கருத்துமாக நிர்வாகம் உள்ளது.
அதில் எவ்வளவு பணம் பெற முடியும் என்பதை மட்டும் ஆராய்ச்சி செய்து கொண்டு அருமையாக பணியாற்றி வருகிறார் கோவில் உயர் அதிகாரி…!
இவர் பணிக்காலம் குறைந்த மாதங்களே உள்ளதால் கிடைக்கும் வரை கிடைக்கும் ஆதாயத்தை பெற்று விட்டு ஓய்வு பெற உள்ளார் என்கின்றார்கள் அங்கு உள்ள சமூக ஆர்வலர்கள் சிலர்…!
இவரைப் போன்ற கோவில் சொத்தை தின்னும் நல்ல செயல் அலுவலர்கள் தான் தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர், ராமமூர்த்தியின் மேற்பார்வையில்தான் கோயில் நிர்வாகம் தற்போது நடைபெற்று வருகிறது.
இவர் திருக்கோவிலில் நடந்த.. தலைமுடி திருட்டு வழக்கின் முதல் குற்றவாளி….. என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 45 லட்ச ரூபாய் காணிக்கை முடி திருட்டு வழக்கின் முதல் குற்றவாளி ராமமூர்த்தி நிர்வாகம் செய்தால் கோவில் எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தக் குற்றப் பின்னணி பற்றி உதவி ஆணையர் கருணாகரனுக்கு நன்கு தெரிந்திருந்தும் இதை எப்படி அனுமதிக்கிறார் என்பதை இருக்கன்குடி மாரியம்மன் தான் கூற வேண்டும்.
என்று பக்தர்கள் மனவேதனையுடன் எண்ணுகிறார்கள். பக்தர்களின் எண்ணம் துறையின் ஆணையரின் காதுகளுக்கு எட்டியும் எட்டாமல் இருக்கும் மர்மம் அந்த ஆயிரம் கண்ணுடைய இருக்கன்குடி மாரியம்மனுக்குத்தான் தெரியும்…!
செய்திகள்:- சங்கரமூர்த்தி தலைமை செய்தியாளர்
வாரிசு சிக்கலில் இருக்கன்குடி மாரியம்மன்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என வழக்கு - அறங்காவலர்கள் ஆஜாராக உத்தரவு
இந்த வழக்கு நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 18 பிரதிவாதிகள் வரும் 5.3.2021 தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது, இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலின் பரம்பரை பூசாரிகள், இந்தக் கோயிலை நிர்வகித்து வருகின்றனர். இந்து அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் உள்ளிட்ட மற்ற விஷயங்களை கண்காணித்து வருகிறது. பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பவர் ராமமூர்த்தி. யார் பரம்பரை கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருப்பது என்பதில் ராமமூர்த்தி மற்றும் அவரது உறவினர்களுக்குள் மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் இருக்கன்குடி கோயிலில், லட்சக்கணக்கான பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கையாக செலுத்தியிருந்த முடிகள், மூட்டை மூட்டையாக கோயில் வளாகத்திற்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
சமீபத்தில் முடி காணிக்கை மூட்டைகளில் இருந்து, ரூ.60 லட்சம் மதிப்புள்ள 15 முடி மூட்டைகள் திருடு போயின. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறையின் செயல் அலுவலர் ஹரிகரன், இருக்கன்குடி போலீசில் புகார் செய்தார். போலீசாரின் விசாரணையில், இந்து அறநிலையத்துறையை சேர்ந்த வாட்ச்மேன்கள் சுந்தர், ஈஸ்வரன் ஆகியோர் முடி மூட்டைகள் திருட்டு போனதற்கு உடந்தையாக இருந்ததாகவும், கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராக்களை திருட்டு சம்பவம் நடந்த நாளையொட்டி பழுதாக்கி வைத்திருப்பதற்கு இந்து அறநிலையத்துறையின் என்ஜினியர் சேவற்கொடியோன் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்தது.
மேலும் முடி மூட்டைகள் திருடுப் போன சம்பவத்திற்கு அறங்காவலர் குழுத்தலைவரான ராமமூர்த்திதான் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்து அறநிலையத்துறை ஊழியர்களான என்ஜினியர் சேவற்கொடியோன், சுந்தர், ஈஸ்வரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த திருட்டு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தியை இருக்கன்குடி போலீசார் கைது செய்தனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 50 கோடி வளர்ச்சிப்பணிகள்; அதிகாரிகள் அதிரடி உத்தரவு!
ஹைலைட்ஸ்:
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.50 கோடி மதிப்பில் வளர்ச்சிப்பணிகள்
- வளர்ச்சிப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு
- வைப்பாற்றை கடக்க பாலம்
2022-06-09@ 10:53:01
சாத்தூர்: இருக்கன்குடி கோயிலில் வளர்ச்சிப்பணிகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் குறுக்கே உள்ள ஆற்றை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் மாரியம்மன் கோவில் காணிக்கையாக வந்திருந்த தங்கம் மற்றும் பொருட்களை சேமிப்பு பெட்டகமாக மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அமைச்சர் கோவிலை சுற்றி பார்த்த பின்பு, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்பிறகு கோவில் நிதியிலிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு அணைக்கட்டு பகுதியிலிருந்து பேருந்து வந்து செல்ல மேம்பாலம் அமைக்கவும், கோவிலை பாதுகாக்க சுற்றுச்சுவர் அமைக்கவும், வணிக வளாகங்கள், அன்னதான கூடம் அமைக்கவும், மருத்துவ வசதிக்காக மருத்துவ மையம், சுகாதார வளாகம், ஓய்வு அறை மற்றும் கார் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்ள இடம் தேர்வு செய்வதற்காக இந்து சமய அறநிலைத் துறை தலைமை பொறியாளர் தட்சிணாமூர்த்தி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மலர்விழி, துணை பொறியாளர் அமுதா மற்றும் மற்றும் அரசு அலுவலர் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கருணாகரன் மற்றும் கோவில் நிர்வாக அறங்காவலர் ராமமூர்த்தி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நடைபெற உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் முடிவடையும் தருவாயில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும் அமைதியாக ஓய்வு எடுக்கவும் சிரமும் இன்றி வந்து செல்லவும் கூடிய வசதிகள் அமைத்து தரப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment