Tuesday, June 21, 2022

தமிழில் பொறியியல் பாடம்


 மும்மொழித் திட்டமா? இருமொழித் திட்டமா?... என்ற விவாதமே தமிழகத்துக்குத் தேவையற்றது! Murali Seetharaman

ஏன் ஆங்கிலம் மட்டும் பயில வேண்டும்? அன்னைத் தமிழ் இருக்க ஆங்கிலம் ஏன்? INSERTION - உட்செலுத்துதல், நுழைத்தல் - என்பதையே 'இன்செர்சன்'- என்றுதான் 'தமிலில்' எழுதிப் படிக்கிறான் இன்றைய மாணவன்!
ஆங்கிலமும் இவனுக்கு சிரமம்தான். எனவே 'ஒரு மொழித் திட்டம்' போதும்! தாய்மொழியாம் தமிழிலேயே இவன் படிப்பான்!
'தானியங்கிப் பொறியியல்'- (Automobile Engineering) அல்லது 'இயந்திரப் பொறியியல்' (Mechanical Engineering) பாடம்....


ஒரு ஈருருளி (டூ வீலர்) இயங்குவதற்கு, முடுக்கி (Accelerator), ஒடுக்கி (Clutch), விசைப் பொறி(Gear), தடுப்பான்(Brake),எரியூட்டி (Spark Plug), எரிபொருட் கலவையகம் (கார்பரேட்டர்), துடிப்பான்(பிஸ்டன்)... போன்றவை இன்றியமையாதவை!
விசைப்பொறிப் பெட்டி எண்ணை (Gear Box Oil), பொறி எண்ணை(Engine oil) சில இடங்களில் தடுப்பான் எண்ணை(Brake oil) ஆகிய திரவ நெகிழ்விகள் (Lubricants) ஈருருளியின் சீரான இயக்கத்துக்கு உதவும்.
மேலும் ஒடுக்கியின் கைப்பிடி, முன்சக்கர தடுப்பானின் கைப்பிடி ஆகியவற்றில் பிசுப்பு நெகிழ்வி (க்ரீஸ்) அவ்வப்போது தடவப்பட்டால் பிடித்தலும், விடுதலும் இலகுவாகும். சகடச் சங்கிலிக்கும் இணப்பு அறுவுறாவண்ணம் இளகவைக்கும் பிசுப்பு நெகிழ்வி உண்டு!
உதை உந்தி (kick starter) பொருத்தப்பட்ட ஈருருளிகளும் உண்டு; பொறி உந்தி (switch starter) உள்ள ஈருருளியும் உண்டு. பொத்தான் உந்தி (button starter) என்றும் கூறலாம்!

தூரமானி (odometer), விரைவு மானி(speedo meter), பயண மானி (Trip meter) மூன்றும் இணைந்த காட்டி (Indicator) மற்றும் எரிபொருள் அளவு காட்டி (Fuel gauge) இணைந்த வட்டவடிவக் கண்ணாடிப் பெட்டகம் நவீன மின்னியல் சாதனையாகும்.
இலக்கக் குறிகாட்டிகள் (digital) மேலும் நவீனமாகி உள்ளன - இப்போது செல்லும் வேகத்தில் எரிபொருள் இருப்பு எவ்வளவு தாங்கும் என்ற நுண்ணிய விவரங்கள் கொண்ட தகவல்காட்டிகள் வந்துவிட்டன.
உதையுந்தியில் பாதத்தை வைத்து இறகுத் தொடுதல் செய்தாலே (feather touch) ஈருருளியானது உந்து சக்தியைப் பெறும் முன்னேற்றம் வந்துள்ளது..
ஈரருருளி சகடப் புறவளையம் (Tyre) இப்போது அகவளையமில்லா (Tubeless) இனமாகவும் வந்துவிட்டது.
துளைச் சேதம் (Puncture) ஏற்பட்டாலும் காற்றிழப்பு உடனடியாக நிகழாமல், ஓட்ட நிறுத்தம் (Halting) ஏற்படும் வரை சிறிது சிறிதாகக் காற்று இறங்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது.
இப்படிப்பட்ட 'அகவளையமில்லா சகடப் புறவளையங்கள்'- (Tubeless Tyres) ஒரு நவீனமான காற்றுத் துருத்தியின் மூலம் (valve tube) செயல்படுகின்றன!

இப்படியே படி ராசா!
"ஐயோ இப்படிப் படிச்சிட்டு நான் வெளிநாடு போக நேர்ந்தால் உதையுந்தி, எரியூட்டி, எரிபொருட் கலவையகம்... இதெல்லாம் அவங்களுக்குப் புரியும்?"
"அப்படி வெளிநாடு போறதுக்கெல்லாம் வேற ஆளுங்க இருக்கு ராசா! நீயும் நானும் தமிழ்நாட்டுக்கு உள்ள குண்டு சட்டில குதிரை ஓட்ட 'ஒடுக்கி'- 'முடுக்கி' போதும் ராசா! வா நாம இப்படிக்கா போவம்!"

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...