Thursday, June 23, 2022

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை- வில்லிவாக்கம் பாதிரி போக்சோவில் கைது

 வில்லிவாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் பாதிரியார் கைது

சென்னை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச் பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 31 வயதுமிக்க பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது 13 வயது மகளுக்கு பாதிரியார் சேகர் கிருபாகரன் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தொல்லை இருந்து வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

சென்னை அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச் பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வில்லிவாக்கம் பெரியார் நகர் பகுதியில் உள்ள சர்ச்சில் புகார் அளித்த பெண்ணின் கணவர் வேலை பார்த்தபோது அங்கு பாதிரியாராக சேகர் கிருபாகரன் (வயது 38). என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கிருபாகரனின் மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், அந்த பெண்ணும் அவரது 13 வயது மகளும் கிருபாகரனின் வீட்டிற்கு வேலைக்கு சேர்ந்துள்ளளனர். நாளடைவில், சிறுமியின் மீது கிருபாகரனுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு புது ஆடை வாங்கி கொடுத்து நல்லவர் போல் நடித்துள்ளார்.

பின்னர் அவர் கும்முடிபூண்டியில் உள்ள சர்ச்க்கு மாறுதல் ஆகி சென்றதால், சிறுமியை பார்க்கமுடியாமல் போனது. இதனால் புது திட்டம் தீட்டி தன் முதல் மனைவி இறந்ததாகவும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சிறுமியின் தாயாரிடம் கூறியுள்ளார்.இதனால் அவரை பார்த்து கொள்வதற்கு நீயும் உன் மகளும் கும்மிடிப்பூண்டி வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியும், அவரது தாயாரும் கும்டிப்பூண்டியில் கிருபாகரன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி கொண்ட பாதிரி  கிருபாகரன் சிறுமியை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியே கூறினால் தந்தையை வேலையை விட்டு தூக்கிவிடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் சிறுமியும், அவரது தாயும் சென்னைக்கு வந்துவிட்டனர்.

இதனிடையே, சிறுமியின் கைப்பேசியில் வந்த ஆபாச படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கிருபாகரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

https://m.dinakaran.com/article/news-detail/776395 

https://news7tamil.live/sexual-harassment-of-a-girl-an-act-committed-by-a-church-pastor.html https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-pastor-arrested-for-assaulting-girl-sexually-since-2018/articleshow/92400358.cms

  4வருடங்களாக சித்ரவதை செய்தது அம்பலம்
* தாய் கொடுத்த புகாரின்படி போலீசார் நடவடிக்கை

சென்னை: வில்லிவாக்கத்தில், 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச் பாதிரியாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடந்த, 4 வருடங்களாக இந்த கொடுமை நடந்தது தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மலர் (31), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், `எனது 17 வயது மகளுக்கு பாதிரியார் சேகர் கிருபாகரன்  பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக இது நடக்கிறது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். அதன்படி, வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், புகார் கொடுத்த மலரின் 17 வயது மகளின் செல்போனை வாங்கி சோதனை செய்தபோது அதில் வாட்ஸ் அப்பில் பல ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்கள் இருந்தன. இதனை அனுப்பிய பெரம்பூர் பரமசிவம் தெரு பகுதி சேர்ந்த பாதிரி சேகர் கிருபாகரன் (38) கைது செய்தனர்.  


அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதில் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் வில்லிவாக்கம் பெரியார் நகர் பகுதியில் உள்ள சர்ச்சில் மலரின் கணவர் வேலை பார்த்தார். அப்போது, அங்கு பாதிரியாராக சேகர் கிருபாகரன் பணியாற்றினார். அவரது மனைவிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் மலரும், அவரது 13 வயது மகளும் சேகர் கிருபாகரன் வீட்டிற்கு சென்று அவரது மனைவிக்கு உதவி செய்து வந்தனர். அப்போது, சிறுமி மீது சேகர் கிருபாகரனுக்கு ஆசை ஏற்பட்டு அவளுக்கு அவ்வப்போது பிரியாணி, புது ஆடைகள் வாங்கிக்கொடுத்து வந்துள்ளார். மேலும் சில நேரங்களில் பாதிரி சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. அதன்பிறகு சிறுமி மற்றும் அவளது தாய் மலர் ஆகியோர் சர்ச்சுக்கு வருவதை நிறுத்தி விட்டனர். அதன் பின்பு 2020ம் ஆண்டு ஜூன் மாதம் பாதிரி சேகர் கிருபாகரன் கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள சர்ச்சிக்கு மாறுதலாகி சென்றுவிட்டார்.

அப்போது, கொரோனா காலகட்டம் என்பதால் மலர் மற்றும் அவரது மகள் ஆந்திராவில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்துள்ளனர். இந்த தகவலை அறிந்துகொண்ட சேகர் கிருபாகரன் அவரது வீட்டிற்கு சென்று, `நான் தற்போது கும்மிடிப்பூண்டியில் இருக்கிறேன். உடல்நிலை பாதிப்படைந்த எனது மனைவி இறந்துவிட்டார். இதனால், நான் 2வது திருமணம் செய்துகொண்டேன். தற்போது, அவர் கர்ப்பமாக இருக்கிறார். இதனால், வீட்டிற்கு வந்து அவரை பார்த்துக்கொள்’ என சிறுமியின் தாயாரிடம் கேட்டுள்ளார். இதனால், சிறுமி மற்றும் அவளது தாய் இருவரும் கும்மிடிப்பூண்டியில் பாதிரியார் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, யாருக்கும் தெரியாமல் பாதிரி.சேகர் கிருபாகரன் 2 முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் இதுகுறித்து வெளியே சொன்னால் அவரது தந்தையை வேலையை விட்டு தூக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதன்பிறகு, சிறுமி தனது தாயுடன் சென்னைக்கு வந்து விட்டாள். மேலும், தனது தந்தைக்கு வேலை போய்விடுமோ என பயந்து கும்மிடிப்பூண்டியில் நடந்த விஷயங்கள் எதையும் சிறுமியின் தாய்க்கு சிறுமி கூறாமல் மறைத்து வந்தாள்.

அதன்பிறகு, சிறுமியின் செல்போனில் ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனுப்புவதை பாதிரி.சேகர் கிருபாகரன் தொடர்ந்து வந்துள்ளார். அதன்படி, கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது திடீரென சிறுமியின் வீட்டிற்கு வந்த சேகர் கிருபாகரன் அப்போதும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதன்பின்னர், சிறுமியின் பெற்றோர் வருவதற்குள் அங்கிருந்து சென்றுவிட்டார். அப்போதும், சிறுமியை மிரட்டியுள்ளார். திடீரென ஒருநாள் சிறுமியின் தாய் தனது மகளின் செல்போனில் வந்த ஆபாச படங்களை பார்த்து விட்டார். அதன் பிறகு வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தது தெரியவந்தது.இதனையடுத்து, பாதிரியார் சேகர் கிருபாகரன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புகாரின் மீது வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியின் கைப்பேசியை வாங்கி சோதனை செய்தபோது, வாட்ஸ் அப்பில் பல ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்கள் இருந்தன. பின்னர் இதனை அனுப்பி வைத்த பெரம்பூர் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்த சேகர் கிருபாகரன் (வயது 38) என்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


 


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா