இந்துக்கள் ஒருவர் இல்லாது அழித்து விடுவோம் எனப் பேசினார்
தமிழக அரசு முஸ்லிம் பயங்கரவாதம் தூண்டுவோர் துணை நிற்கிறதா?
திருநெல்வேலி: நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் நேற்று (ஜூன் 19) எஸ்டிபிஐ கட்சி சார்பில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புல்டோசர் கொண்டு இடிக்கும் உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட மகளிரணித் தலைவி ஜன்னத் ஆலிமா பேசும்போது, "வடமாநிலங்கள் தீப்பற்றி எரிகிறது. உங்களால் சமாளிக்க முடிகிறதா? சாமாளிக்க முடியவில்லை. இஸ்லாமியர்ளுக்கு ஒரு மணி நேரம் டைம் கொடுத்து பாருங்கள். இந்தியாவில் ஒரு சங்கி கூட உயிரோடு இருக்கமாட்டார்கள்" என்று ஆவேசமாகப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், எஸ்டிபிஐ பெண் நிர்வாகியின் பேச்சு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுப்பது போன்று இருப்பதாகக் கூறி இந்து முன்னணி மாநிலச்செயலாளர் குற்றாலநாதன் காவல் துறையில் புகார் அளித்தார். மேலும், இதுதொடர்பாக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் பேட்டை காவல் துறையினர் ஜன்னத் ஆலிமா மீது 153 -A (மதக் கலவரத்தைத் தூண்டுதல்), 504 அமைதியை சீர்குலைத்தல் மற்றும் 505(1),505(2) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment