Monday, June 20, 2022

பாமியான் 2புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்த்ததகர்த்த முஸ்லிம் மதவெறி தலிபான்கள்

 ஆப்கானிஸ்தானில் பாமியான் எனுமிடத்தில் இரண்டு பெரிய புத்தர் சிலைகள் இருந்தன. இந்தச் சிலைகளை கடந்த 2001 ஆம் ஆண்டு தலிபான்கள் வெடிவைத்து தகர்த்தனர். இப்போது அந்த இடத்தில் புத்தர் சிலை இருந்த மாடம் மட்டுமே உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில் புத்தர் சிலை இருந்த மாடமும் கூட சிதைக்கப்படக்கூடும் என அஞ்சப்பட்டது.

 

https://www.hindutamil.in/news/world/723226-taliban-say-they-will-preserve-bamiyans-buddha-niches.html

பாமியான் புத்தர் சிலை இருந்த இடங்களை பாதுகாப்போம்: தலிபான்கள்

ஆனால், அந்த இடம் சிதைக்கப்படாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர். பாமியானின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநரக தலைவர் சைஃப் உல் ரஹ்மான் முகமதி, அரியானா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாமியானில் இருந்த புத்தர் சிலைகள் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவற்றை சல்சல், ஷமாம் என உள்ளூர்வாசிகள் அழைத்துவந்தனர். இந்த சிலைகள் 2001 மார்சில் தகர்க்கப்பட்டன. 

இப்போது இந்த சிலைகள் இருந்த மாடத்தை பாதுகாக்கும் முயற்சியில் உள்ளேன். இந்த சிலை மாடங்கள் தகர்க்கப்படமாட்டாது. மாறாக நாட்டில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க இந்த தலம் அடையாளமாகப் பயன்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், 2001 மார்ச்சில் பாமியானில் சிலைகள் அழிக்கப்பட்டது ஏதும் அவசர கதியில் எடுக்கப்பட்ட முடிவில்லை. இஸ்லாமிய சட்டத்தின்படியே ஆராய்ந்து அந்த முடிவை எடுத்தது என்றார்.

முன்னதாக ஹெராட் நகரின் தகவல் மற்றும் கலாச்சார துறை அதிகாரி ஜல்மாய் ஷஃபா கூறுகையில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் மட்டுமே நாட்டின் 40% கலாச்சார அடையாளங்கள் உள்ளன. அவற்றை மீட்டெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாட்டின் பொருளாதாரம் அதற்கு இப்போதைக்கு இடம் கொடுக்கவில்லை. அரசாங்கத்தின் நிலைமை சீரானதும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

ஹெராட் மாகாணத்தில் 780 வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. அவற்றில் ஹெராத் நகர மாளிகை, முஸல்லா காம்ப்ளக்ஸ், காவ்ஹர் ஷாத் சமாதி ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவை.















உடைக்கப்பட்ட பாமியான் புத்தர் சிலை: 3டி எபெக்ட்டில் மீண்டும் ஜொலிப்பு

 Added : ஜூன் 15, 2015 

ஆப்கானிஸ்தானத்தில் உள்ள பாமியான் பள்ளத்தாக்கில், 1500 ஆண்டுகளுக்கு முன் 115 மற்றும் 174அடி உயரத்தில் நின்ற நிலையில் இரண்டு புத்தர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த சிலைகள், சர்வதேச சுற்றுலா பயணிகளின் கவனத்தை கவர்ந்து வந்தன. இவற்றை பாரம்பரிய கலைப்படைப்புக்களாக யுனெஸ்கோ அமைப்பும் அறிவித்தது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=1275145

சிலைகள் தகர்ப்பு:

இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு முன், மார்ச் 2001ல், தலிபான் பயங்கரவாதிகள் டைனமைட் மூலம் இரண்டு சிலைகளையும் தகர்த்தெறிந்தனர். இதையடுத்து, சிலைகள் நின்ற இடத்தில், அவை இருந்த குகைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில், காலியாக உள்ள குகைகளில் மீண்டும் புத்தர் சிலைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

3 டி தொழில் நுட்பம்:

கற்சிலைகளை பழைய கலை நுணுக்கத்துடன் படைப்பிக்க முடியாத நிலையில், அதிநவீன 3டி தொழில்நுட்பம் மூலம் புத்தர் சிலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டது. ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் தொழில்நுட்ப உதவி தர முன் வந்தன. இதையடுத்து, பழைய புத்தர் சிலைகளின் புகைப்படங்களை அடிப்படையாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் காலியாக உள்ள குகைகளில் புத்தர் சிலைகள் உயிர்தெழச் செய்யப்பட்டுள்ளன.

தத்ரூபமான காட்சி:

இது குறித்து இந்த நிகழ்ச்சியை பார்த்த ஒரு பத்திரிகையாளர் கூறுகையில், 'தகர்க்கப்பட்ட புத்தர் சிலைகள்,மீண்டும் தத்ரூபமாக 3 டி தொழில்நுட்பத்தில் காட்டப்பட்டன. நிஜத்தில், காலியான குகைக்களுக்குள் பழையபடி புத்தர் சிலைகள் வந்துவிட்டது போல் பார்வையாளர்கள் உணர்ந்தனர். போதிய விளம்பரம் இல்லாததால், துவக்க விழாவில் குறைவான பார்வையாளர்களே இருந்தனர். இந்த செய்தி வௌியானவுடன் ஏராளமானோர் இங்கு வருவார்கள்,' என்றார்.
புத்தர் சிலைகளை 3டி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கும் செலவை சீனாவைச் சேர்ந்த ஒரு தம்பதி ஏற்றுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா