Wednesday, June 15, 2022

தென்காசி வீரசிகாமணி கைலாசநாதர் குடவரைக் கோயிலில் தமிழரிடம் கிறிஸ்துவ அராஜகம்

வீரசிகாமணி குடைவரை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகேயுள்ள வீரசிகாமணி எனும் ஊரில் முற்காலப் பாண்டியர் காலத்து எட்டாம் நூற்றாண்டு குடைவரையொன்று காணப்படுகிறது. இன்று அக்குடைவரை கைலாசநாதர் கோவிலென அழைக்கப்படுகிறது.

இக்குடைவரையின் பழமையான கல்வெட்டாக சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு(1020-21) குடைவரைத் தூணில் காணப்படுகிறது. இது தமிழ் வட்டெழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. 

இதில் இவ்வூர் இராஜராஜ பாண்டி நாட்டு முடி கொண்ட சோழ வளநாட்டு கல்லக நாட்டு பிரமதேயம் வீரசிகாமணியான வீரவிநோதச் சதுர்வேதி மங்கலமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் பெயர் கைலாயத்து எம்பெருமான். பாண்டிய நாட்டில் சோழர்கள் பெயர்களிலிருக்கும் ஊர்களில் இதுவும் ஒன்று. ( வீரசிகாமணி முதல் பராந்தகச் சோழனின் விருதுப்பெயர் ). இவ்வூர் இன்றுவரை அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது.

"ஸ்வஸ்தி ஶ்ரீ
கோச்சடையவன்மரா
ய ஶ்ரீ சுந்தர சோழ பாண்டிய தேவர்
க்கு யாண்டு 8 ஆவது இ(ராசராச)ப்பா
ண்டி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டு
கல்லக நாட்டு ப்ரஹ்மதேயம் வீரசி...
ன வீரவிநோதச் சருப்பேதி ம....
ஶ்ரீ கையிலாயத்து பெருமான் ....
வ்வூர் இருக்கும் மண்டை ... சோ
லை சாத்தன் வச்ச... (நந்தா விளக்கு )
எறு.... வுகாணி ஒன்.. மூ
ன்று ஸந்தியும் இ.....
டு முட்டாமை எரிக்க கடவோ...
இவூர் ஶிவப்ராஹ்மணனெ.....
கணனும்... பாத்தீஶ்வர....
.... பாத்தீஶ்வர ...
... ண்யனும்..."
வரிகள் : SII 14

 

குடைவரையின் வெளிப்புறத்தே விநாயகரும் நின்ற நிலைத் திருமாலும் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளது. குடைவரை இரு சதுர அரைத்தூண்களையும் இரு முழுத்தூண்களையும் கொண்டதாகக் குடையப்பட்டுள்ளது. குடைவரையின் துவாரக பாலர்கள் குன்னாண்டார் கோவில் துவாரக பாலகர் அமைப்பினை நினைவுபடுத்துகின்றன. மேலும் சில உருவங்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

குடைவரைக்கு அருகிலுள்ள இயற்கைக் குகைத்தளத்தில் சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன. ஒரு படுக்கையில் வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகிறது.( படிக்க இயலவில்லை ). கோவில் அருகிலே பிற்காலத்தைய அமர்ந்த நிலை திருமால் சிற்பம் காணப்படுகிறது

Siva Subramanian is with Deva Sena Pathy and 8 others

இந்துக்களுக்கு எதிரான அடுத்த மத தாக்குதல்.இந்துக்களுக்கு அவர்கள் வழிபாட்டு தலங்களிலேயே வழிபடும் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டம் வீரசிகாமணியில் இந்துக்களுக்கு எதிரான அடுத்த தாக்குதல்.

தென்காசி மாவட்டம் வீரசிகாமணி -வடநத்தம்பட்டி இணைக்கும் இடத்தில்,திரு கைலாசநாதர் குடவறைக் கோயில் உள்ளது.
குடவரைக்கோவிலில் சிவன்,பார்வதி, கணபதி,நந்தி,திருமாலோடு ஏழாம் நூற்றாண்டை சேர்ந்த மிகப் பழமையான சிவாலயம் உள்ளது.இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது‌.
மலைக்கு மேல் சமண முனிவர்கள் வாழ்ந்த சமண படுகைகளும்,
14-ம்நூற்றாண்டை சார்ந்த தாமரை பாதமும் உள்ளது.
இதில் ஸ்வாமி சகஜானந்தா ஏறி அருளிவித்தான் என்ற கல்வெட்டு குறிப்புகளும் உள்ளன.
இதை சித்தர் பாதம் என்றும் ,சமணர் பாதம் என்றும்,ராஜா பாதம் என்றும் பல்வேறு தரப்பினர் வழிபட்டு வருகின்றனர்
இந்நிலையில், பத்து நாட்களுக்கு முன்னர் ஐசக் என்னும் கிறிஸ்தவ ஊழியக்காரர் பத்து கிறிஸ்தவர்ளோடு வந்து, அங்கு வழிபடும் மக்களை மிரட்டி அவர்கள் பூஜை பொருட்களை வலுக்கட்டாயமாக பிடுங்கி வீசி எறிந்து தகாத வார்த்தைகள் பேசி திட்டி இங்கு வழிபட வரக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.இதனால் பயந்து யாரும் வழிபட செல்லாமல் இருந்தனர்.
மறுபடியும் நேற்று15.6.2020 நான் உட்பட சில சிவனடியார்கள் வழிபட சென்றோம் .இந்த நிலையில் ஒரு ஏழு கிறிஸ்தவர்களோடு வந்த ஐசக் என்னும் ஊழியக்காரர் எங்களை சொல்லத்தாகாத வார்த்தைகளால் திட்டி இங்கு வழிபட வரக்கூடாது எனவும்,அங்கு குருவே சரணம் என்று எழுதியதை அழிக்கப் போவதாகவும் திட்டி அனுப்பினார்.
பின்பு நேற்று மாலை விளக்கேற்ற வந்த ஒருவரின் கையிலிருந்து விளக்கை வலுக்கட்டாயமாக பிடுங்கியும் எறிந்துள்ளார்
இப்பொழுது,இதற்காக இந்துமுன்னணி அமைப்பை நாடியுள்ளோம். தக்க நியாயம் கிடைக்க அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.அப்பாவி சிவனடியார்களின் வழிபாட்டு உரிமையை மீட்டுத்தாருங்கள்.
இந்து அமைப்புகள் தயவு செய்து கவனத்தில் கொண்டுவழிபாட்டு உரிமையை காக்க உதவுங்கள்.

No comments:

Post a Comment