Thursday, June 16, 2022

கவியரசு கண்ணதாசன் - கருணாநிதி பற்றிய கவிதை -ராஜிவ் காந்தி காணொளி

 கவியரசு கண்ணதாசன் - கருணாநிதி பற்றிய கவிதை -ராஜிவ் காந்தி காணொளி

30 வருடத்துக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதசணை பார்த்து நீ ஒரு கவிஞனா என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை.








அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்மென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று





 



  







 





















பிழைத்திருக்கும் ஆண்மையில்லா

பேதையனே கவிஞ‌னெனில்

நானோ கனவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.

வனவாசம் என்ற சுயசரிதை புத்தகத்தில் திரு மு.கருணாநிதியின் நெருங்கிய நண்பரான கவிஞர் கண்ணதாசன் அவர்களே அவரைப்பற்றி பொதுமக்கள் பலர் அறியாத பல விசயங்களை பற்றி எழுதியுள்ளார்.






















No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...