Thursday, June 23, 2022

போதை மருந்து கடத்தல் ஊழியம்- வெளிநாடு கிறிஸ்துவ்ர் 12 ஆண்டு சிறை

போதை மருந்து கடத்தல் விற்பனையில் ஊழியம் செய்யும் வெளிநாடு கிறிஸ்துவ்ர்கள். பல வெளிநாட்டு கிறிஸ்துவர்கள் டூரிஸ்ட் விசாவில் வந்து சர்ச்களில் ஜெபக் கூட்டம், சாட்சி சொல்வது என சட்ட விரோத செயல் தாண்டி போதை மருந்து வியாபாரம் செய்தவருக்கு 12 ஆண்டு ஜெயில் தண்டனை

கடத்தல் பேர்வழிக்கு 12 ஆண்டு சிறை சென்னை:மும்பையில் இருந்து தமிழகத்துக்கு, 'கோகைன்' போதைப்பொருளை கடத்தி வந்து விற்பனை செய்த, டான்சானியா நாட்டை சேர்ந்தவருக்கு, 12 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மண்டல போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, 2014 ஜனவரி 25ல், மும்பையில் இருந்து தமிழகத்துக்கு 'கோகைன்' எனப்படும் போதைப்பொருளை கடத்தி வந்து, விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, கிழக்கு ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டைச் சேர்ந்த மார்க் ஹென்றி என்ற ஜான், 36, என்பவர், சென்னையை அடுத்த மதுரவாயலில் தங்கியிருந்து, 'கோகைன்' விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, மதுரவாயலில் அந்த நபர் வீட்டில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு, 123 கிராம் கோகைன், 15 கிராம் ஹெராயின், 10 கிராம் மெத்தகுலோன் போன்ற போதைப்பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மார்க் ஹென்றியை கைது செய்தனர்.இதுகுறித்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.பி.குமார் வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதால், மார்க் ஹென்றிக்கு, 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment