பத்தாம் வகுப்பு இணைய மதிப்பெண் பட்டியலில் தமிழ் என்ற பெயரே இல்லை, ஆனால் மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை, தமிழகத்தில் தமிழ் பாடத்தில் 5% ஃபெயில்
தெய்வத் தமிழையும் வாழ வைக்கிற காஞ்சி காமகோடி ஸ்ரீ மடத்தையும், காஞ்சி சங்கர மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளும், தமிழைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நன்றி.
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் நாற்பத்தி ஏழு ஆயிரம் பேர் தோல்வி .. சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக கணிதத்தில் 83 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
பத்தாம் வகுப்பு தேர்வில், தமிழ் கட்டாய தாளாக உள்ளது. இந்நிலையில், 5.16 சதவீதம் பேர்; அதாவது 37 ஆயிரம் மாணவர்கள்; 10 ஆயிரம் மாணவியர் என, 47 ஆயிரம் பேர் தாய்மொழியாக தமிழில் தேர்ச்சி பெறாதது, ஆசிரியர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் கவலையடையச்செய்துள்ளது.
No comments:
Post a Comment