Thursday, June 23, 2022

அமீர்கான் மகளும், தங்கல் கதாநாயகி கொலை மிரட்டல் பயந்து சினிமாவை விட்டு விலகியது

திரையுலகிலிருந்து விலகினார் தங்கல் பட நடிகை !

அமீர் கானின் தங்கல் படம் மூலம் பிரபலமான நடிகை சைரா வாசிம் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

தங்கல் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்தவர் நடிகை சைரா வாசிம். அவரின் நடிப்பு ஒரே படத்தில் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றிருந்தார். குறிப்பிட்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் சைரா வாசிம் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த‌வர் ஆவார். 

 

சய்ரா வசிம் காஷ்மீரைச் சேர்ந்தவர். காஷ்மீரின் கலைத்துறையைச் சேர்ந்த பெண்கள் இப்படி விலகிக் கொள்வது இது முதல்முறை இல்லை. இந்த வரிசையில் சய்ரா நான்காவது நபர். 2013 காஷ்மீரில் முதன்முதலில் உருவான பெண்கள் இசைக்குழுவைச் சேர்ந்த மூன்று பேரும் இப்படிதான் திடீரெனத் தங்கள் குழுவைக் கலைத்தார்கள். 
 
டிசம்பர் 2012ல் உருவாக்கப்பட்ட அந்தக் குழு எடுத்த எடுப்பிலேயே பல பரிசுகளை வென்றது பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் வலைத்தளங்களில் அவர்களைக் குறித்து அவதூறு பரப்பப்பட்டது. உச்சக்கட்டமாக அவர்களது மதகுரு ஒருவர் அந்த மூன்று பெண்களுக்கு எதிராக ’ஃபத்துவா’ பிறப்பித்தார்.



 

அதனால் அந்தக் குழுவையே கலைத்தார்கள். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் நடிகை சய்ரா காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியைச் சந்தித்த சில நாட்களில் அவர் இவ்வாறு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மக்கள் உரிமைக் குரல் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள்,``சய்ராவுக்கு சில இஸ்லாமிய    அடிப்படைவாதிகளால் மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி வெளியே பேசுவதற்கு அவர்களது குடும்பத்தினர் அச்சப்படுகிறார்கள். ஜம்முவில் இருக்கும் பெண்களுக்கு இதுமாதிரியான அச்சுறுத்தல்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறது” என்றனர். இந்த கருத்து பற்றிக் கேட்க சய்ரா வசிமைத் தொடர்பு கொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை.



 

 

 

 


 https://www.wionews.com/south-asia/is-will-kill-you-dangal-actress-zaira-wasim-threatened-in-indias-restive-kashmir-11514

https://www.financialexpress.com/entertainment/dangal-actress-zaira-wasim-death-threats-aamir-khan-geeta-phogat-targets-trolls-says-no-need-to-apologise/510189/

https://en.m.wikipedia.org/wiki/Dangal_(film)

https://www.indiatoday.in/movies/bollywood/story/dangal-star-zaira-wasim-quits-films-my-relationship-with-my-religion-was-threatened-1558956-2019-06-30

https://m.youtube.com/watch?v=rIWUwMsoAzA

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா