Saturday, June 18, 2022

இன வெறியன் ஆஷ் கொண்டாடுபவனும் இன வெறியனே.

 ஆஷ் ஒரு இன வெறியன், அவனைக் கொண்டாடுபவனும் இன வெறியனே.  சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கம்

ஆஷ் ஒழிக. அவனுக்கு வீரவணக்கம் செலுத்தும் அயோக்கியத்தனமும் ஒழிக."

அனுப்புனர் :
குருசாமி மயில்வாகனன்,
செயலாளர், சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கம்,
சிவகங்கை மாவட்டம்.
தொலைபேசி எண்: 7358811322.
பெறுனர் :
மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
தலைமைச் செயலகம், சென்னை.
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,
பொருள் : சமீபகாலமாக தூத்துக்குடியிலுள்ள ஆஷ் நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற வீரவணக்க நாளைத் தடை செய்யக்கோரி –
இந்தியா பிரிட்டிஷாரிடம் அடிமைப்பட்டிருந்த கால கட்டங்களில் தென்னிந்தியப் பகுதியில் முதன்முதலாக விடுதலைப் போராட்ட உணர்வு உருவான திருநெல்வேலி மாவட்டத்தில் அதை ஒடுக்குவதற்காகவே அன்றைய ஆங்கிலேய அரசால் நியமிக்கப் பட்டவன் கலெக்டர் ஆஷ். அவனது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கைகளினால் தமிழர்கள் அடைந்த இன்னல்கள் ஏராளம்.
பெரியவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் முன்னணியாளர்களால் உருவாக்கப்பட்ட சுதேசிய கப்பல் கம்பெனியை அழித்தது; அவர்மீதும் சுப்பிரமணிய சிவா மீதும் பொய்வழக்கு சுமத்தி சிறையில் அடைத்தது; விடுதலை உணர்ச்சியுடன் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொலை செய்தது போன்ற பலவிதமான கொடுமைகளைச் செய்தவன் கலெக்டர் ஆஷ்.
அவனுடைய கொடுஞ்செயல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சில இளைஞர்களால் திட்டமிடப்பட்டபடி 1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆந் தேதியன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சி என்பவரால் கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இது விடுதலை உணர்ச்சியால் உந்தப்பட்டு நடத்தப்பட்ட செயலாகும். வாஞ்சியின் இத்தியாகச் செயலைப் போற்றி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை அரசு சூட்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக திராவிடத் தமிழர் கட்சி மற்றும் சில அமைப்புகள் கலெக்டர் ஆஷை நேர்மையாளனென்று புகழ்ந்து வருவதோடு அவனது நினைவிடத்தில் வீரவணக்க நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்கள்.
இச்செயலானது தமிழர்களின் விடுதலைப் போராட்ட உணர்வை இழிவுபடுத்துகிறது மற்றும் தமிழர்களின் சுதந்திரப் போராட்ட வரலாற்றிற்கு இழுக்கு சேர்க்கிறது.
எனவே எந்த அமைப்பாயினும் இதுபோன்ற தவறான செயல்களைத் தடை செய்ய மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
03.06.2022
நகல்:
1.மாவட்ட ஆட்சியர் அவர்கள், தூத்துக்குடி.
2. திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்
----------------------------------------------------------
இது தோழர் குருசாமி மயில்வாகனன் அவர்களின் கோரிக்கை விண்ணப்பம். இது முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...