உலக மக்கள் அனைவரும் திடீரென சைவத்திற்கு மாறினால் என்ன ஆகும்...?
உலகம் முழுவதும் சைவ உணவிற்கு மாறினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப்தை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அவ்வாறு மக்கள் சைவ உணவிற்கு மாறுவதால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்கவும் ...- NEWS18 TAMIL
- LAST UPDATED :
ஃபோநூற்றாண்டு காலமாகவே சைவம் மற்றும் அசைவ உணவு உண்பவர்கள் இடையே பெரும் விவாதம் இருந்து வருகிறது. சைவ உணவு சாப்பிடுவர்கள் அனைவரும், அசைவ பிரியர்களைப் பார்த்து கேட்கும் ஒற்றைக் கேள்வி, உங்களால் தான் நிறைய விலங்குகள் கொல்லப்படுகின்றன? என்பது தான்.
ஆனால் அதற்கான பொதுவான பதில், இறைச்சி உண்பவர்களால் தான் உண்பது உணவுச் சங்கிலியையும் சுற்றுச்சூழலையும் சமநிலையில் இருக்கிறது என்பது தான். இருப்பினும், இறைச்சியை விட்டுவிட்டு சைவ உணவு உண்பதால் ஏதேனும் சாதகமான விளைவு உண்டா? பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டால் என்ன நடக்கும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
சரி, திடீரென உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களும் அசைவ உணவுகளை வெறுத்து சைவத்திற்கு மாறிவிட்டார்கள் என்றால் என்ன நடக்கும் தெரியுமா?. இறைச்சி சாப்பிடுவதால் சுற்றுச்சூழலில் அதிக கார்பன் டை ஆக்சைடை வெளியிடப்படுகிறது. Scientific America இணையதளத்தின் அறிக்கையின்படி, 226 கிராம் எடையுள்ள உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் கார்பன் டை ஆக்சைடைக் கொண்டு, ஒரு சிறிய காரை 0.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்ட முடியும் எனக்குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில், 226 கிராம் எடையுள்ள மாட்டிறைச்சி மூலம் உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடை வைத்து, அதே காரை 12.7 கிமீ தூரத்திற்கு ஓட்ட முடியுமாம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் படி, உலகின் பெரும்பாலான மக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உள்ளடக்கிய இத்தகைய உணவை பின்பற்றினால், பூமியில் பசுமை இல்ல வாயுக்களின் உற்பத்தி மிகவும் குறைக்கப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
காற்றுக்கு அடுத்த படியாக பூமியில் நீர் சேமிப்பிலும் குறிப்பிட்ட அளவு மாற்றம் இருக்கும் எனக்கூறப்படுகிறது. இறைச்சி உற்பத்திக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது, ஆனால் பழங்கள் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்ய குறைந்த நீர் பயன்படுத்தப்படுகிறது. கரும்பு உற்பத்திக்கு 1-2 கன மீட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படும் அதே வேளையில், காய்கறி உற்பத்திக்கும் கிட்டத்தட்ட அதே அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 15,000 கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!
உலகம் முழுவதும் சைவ உணவிற்கு மாறினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப்தை சில ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளதைப் போலவே, அவ்வாறு மக்கள் சைவ உணவிற்கு மாறுவதால் என்னென்ன பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்பதையும் சில ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை இறைச்சி மற்றும் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பொருட்களை சார்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளின் குறைந்த வருமானம் கொண்ட மக்கள் தங்கள் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுக்கு இறைச்சியை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது, ஏனெனில் உடல் உழைப்பை நம்பியிருக்கும் அந்த மக்களுக்கு இறைச்சி நிகரான சக்தி கொண்ட சைவ பொருட்களை வாங்குவது என்பது அவர்களது பொருளாதார சக்தி அப்பாற்றப்பட்ட காரியம் ஆகும். சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பொருட்படுத்தாமல், வளரும் நாடுகள் தற்போது இறைச்சி உட்கொள்ளலை கைவிடுவது சாத்தியமில்லை.
https://tamil.news18.com/news/lifestyle/food-what-would-happen-if-the-entire-world-turned-vegetarian-esr-ghta-759542.html
No comments:
Post a Comment