Monday, June 27, 2022

குஜராத் கலவர வழக்கில் சுப்ரீம் கோர்ட்

 சந்தியா ரவிஷங்கர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பகுப்பாய்வு செய்து எழுதியதின் தமிழாக்கம்.

குஜராத் கலவர வழக்கில் சுப்ரீம் கோர்ட், வலுவான ஆதாரங்களை அரசு வைத்த காரணத்தாலேயே, இந்த திருட்டு கும்பல்களின் வாதங்களை கோர்ட் சுக்கு நூறாக உடைத்து எறிந்து விட்டது. பொய்களை அவிழ்த்து விட்ட தீஸ்தா, ஜாகிர் ஜாஃப்ரி, சஞ்ஜீவ் பட், ஶ்ரீ குமார்.. இவர்கள் இதற்கான உண்மையை எதிர்கொள்ளவே முடியாது.. பொய்களாலேயே அழிந்து போனார்கள்.
1. ஜாகியா ஜாஃப்ரி மற்றும் தீஸ்தா, கோத்ராவிற்கான காரணம் வலது சாரி தீவிரவாத இயக்கங்கள். இவர்கள் கலவரம் வரவேண்டும் என்பதற்காக இதை செய்தார்கள். இதை சிஎம்மாக இருந்த நரேந்திர மோதி, தடுக்காமல் ஆதரித்தார் என்பதே இவர்களின் வாதம்.
கோர்ட்: ஜாகியா மற்றும் தீஸ்தாவின் வாதங்கள் 19 வருடங்களாக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. கோல் போஸ்டுகள் தினம் மாறுகிறது. எந்த குற்றச்சாட்டையும் சரிபார்க்க இயலாதவைகளாகவும், எந்தவித ஆதாரங்களும் சமர்ப்பிக்காத/ ஆதாரமற்றவைகளாகவே இருக்கிறது. குஜராத்தின் உளவுத்துறை அதிகாரிகளுக்கே, இந்த ரயிலில், இந்த பெட்டியில் கர் சேவகர்கள் வருகிறார்கள் என்கிற எந்த தகவலும் இல்லாத பட்சத்தில், அரசின் உயர்மட்டத்தில் கோத்ராவிற்கு பிறகு கலவரம் செய்ய தூண்டிவிட சதி செய்தார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
மோதி, கலவரம் கை மீறிய சில மணி நேரத்தில், தில்லிக்கு ஃபோன் செய்து ஆர்மி குஜராத்துக்கு உடனடியாக தேவை என்று விண்ணப்பித்தது அரசு ரெக்கார்டில் இருக்கிறது. ஆனால்.. இரண்டு மாதம் முன்னர் நடந்த பார்லியமென்ட் தாக்குதல் காரணம், ஆர்மியை அனுப்ப மத்திய அரசு தாமதித்தது.
2. சஞ்சீவ் பட்:
சஞ்சீவ் பட் சொன்னது, நான் கலவரம் நடந்த அன்றிரவு காந்திநகரில் சிஎம் மீட்டிங்கில் இருந்தேன். அவர், ஹிந்துக்கள்.. மூன்று நாட்கள், என்ன வேண்டுமானுலும் செய்து கொள்ளட்டும் என்றார்.
கோர்ட்: ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீம்.. அவரின் செல் ஃபோன் ரிகார்டுகளை ஆய்வு செய்து, அவர், அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ளவே இல்லை. அவரின் செல்..சிஎம்மோடு சந்திப்பு நடந்ததாக சொன்ன தினத்தில், நேரத்தில்..காந்தி நகரிலிருந்து 25 கிமீ தள்ளி இருந்ததை காட்டியது. அங்கிருந்து ஃபோன் பேசிய அவர் எப்படி மோதியோடு மீட்டிங்கில் இருந்திருக்க முடியும்..? இதற்கு பதிலில்லை..
3. ஹிரேன் பாண்ட்யா:
இவரும் சிஎம்மோடு மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் 25 கிமீ தள்ளி இருந்ததை செல்போன் சொல்லி விட்டது.
4. ஶ்ரீ குமார் ஐபிஎஸ்: கலவரம் நடக்கும் போது…போலீஸை, சிஎம்மும், மினிஸ்டர்களும் அமைதியாக இருக்க சொன்னார் என்பதை குற்றச்சாட்டாய் வைத்தார்.
கோர்ட்: ஶ்ரீ குமார் கலவரத்தை ஹான்டில் பண்ணும் டீமிலேயே இல்லை. இதனால், இந்த டீமுக்கு தந்த அரசு என்ன கட்டளை இட்டது என்பது பற்றிய எந்த வித புரிதலுமே இருக்க வாய்ப்பில்லை. நானாவதி கமிஷனின் முதல் 2 அஃபிடவிட்டில் இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல், மூன்றாவதாய் ஒரு அஃபிடவிட்டில் சொல்லி இருக்கிறார். இதற்கு மோடிவ் இருக்கிறது. இவர் இந்த சமயத்தில் பதவி உயர்வு பெறமுடியவில்லை. காரணம், பல விஷயங்களில் தவறு செய்தது. முக்கியமாய்.. இஸ்ரோ ஸ்பை கேஸில் நம்பி நாராயணனை சிக்க வைத்தது, அதோடு தீஸ்தாவின் NGO சப்ரங்கோடு சேர்ந்து கொண்டு பல காரியங்கள் செய்தது என்று கோர்ட் பலதையும் வெளி கொண்டு வந்து விட்டது.
4. டெஹல்கா ஸ்டிங்க் ஆபரேஷன்:
பஜ்ரங் தள், மற்றும் விஹெச்பி மோதியோடு பேசியபின், புது உத்வேகத்தோடு கலவரம் செய்து கொன்றார்கள். ஒரு துப்பாக்கி தொழிற்சாலையில், கலவரத்திற்கு முன்னரே துப்பாக்கிகளை சேகரித்து வைத்திருந்தனர்.
கோர்ட்: குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கி தொழிற்சாலை என்று ஒன்று இல்லவே இல்லை. அப்படி ஒன்று இருப்பதாய் போலீஸ் உறுதிப்படுத்தவே இல்லை. நரோடா பாடியா கலவரத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் விஹெச் பி ஆசாமிகள் இப்போது கலவரத்தில் ஈடுபட்ட மாற்று மத ஆசாமிகள் போல் சிறையில்தான் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குமூலத்தில், டெஹல்காவின் ஆஷிஷ் கேதான் சுவையாக இருக்க சில விஷயங்களை கேட்டதால், அதிகமாக பலதையும் சேர்த்து தந்தோம்.
நன்றிகள்:
ஆங்கிலத்தில் sandhiya Ravishankar

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா