Saturday, June 25, 2022

பஞ்சாங்கம்

 

 

பஞ்ச (5) அங்கம் கிரக சுழற்சிகளா அடிப்படையில் வானியலைக் காட்டும் வழிகாட்டி  https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D



பி இளங்கோ சுப்பிரமணியன்
பஞ்சாங்கம் என்பது ஒரு தயார்நிலை அட்டவணை. அதாவது அது ஒரு Ready Reckoner. Trigonometric tables போன்றதே பஞ்சாங்கம். அரசு அலுவலகங்களில் pay bill sectionல் ஒவ்வொருவரின் மேசை மீதும் பஞ்சப்படி கணக்கிடும் ரெடி ரெக்னர் இருக்கும். அதைப் பார்த்து இருக்கிறீர்களா?

தமிழ்ச் சூழலில் ஒரு negative connotation ரைடர் (rider) பஞ்சாங்கத்துடன் கூடவே இருந்து கொண்டு கழுத்தறுக்கிறது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இது போன்ற negative connotation இல்லை.


Negative connotation என்றால் என்ன என்றும் rider என்றால் என்ன என்றும் நன்கு தெரிந்தவர்கள் மேற்கொண்டு படிக்கலாம். ஏனையோர் வெளியேறலாம்.
1969-70ல் நான் SSLC (11ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த நேரம். ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் ஆப்ரகாம் லிங்கன் பற்றிய ஒரு பாடம்.
லிங்கன் ஒரு வழக்கறிஞராக இருந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் எப்போது நிகழ்ந்தது என்று அறிய விரும்பினார். அது ஒரு வழக்கின் தேவை. அதற்காக ஒரு almanac வேண்டுமென்று நீதிமன்றத்தில் கேட்டார்.
almanac என்பது collection of astronomical data. அதாவது வானியல் தரவுகளின் தொகுப்பு. அதாவது பஞ்சாங்கம். அவர் கோரிய பஞ்சாங்கம் தருவிக்கப் பட்டதும் சூரிய உதய நேரத்தை அறிந்து கொண்டு வழக்கை நடத்தி வெற்றி கண்டார்.
தமிழ்நாட்டில் ஒருவர் தமக்குப் பஞ்சாங்கம் தேவை என்று கூறுவாரேயாகில் என்ன நடக்கும்?
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விபச்சாரத் தரகர்களும் கேலிச்சிரிப்புடன் அதனை எதிர்கொள்ளுவார்கள்.
பஞ்சாங்கம் என்பது collection of astronomical empirical data என்று யாருக்கும் புரிய வைக்க முடியாது.
பஞ்சாங்கத்தின் பயன் என்ன? ஒரு trigonometric tablesன் பயன் என்ன? அதேதான். போன வருஷம் ஆவணி மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன திதி என்று தெரிய வேண்டி இருக்கிறது. எப்படித் தெரிந்து கொள்ளுவது? இதற்கு பஞ்சாங்கம் பயன்படும்.
சூரிய சந்திர கிரகணங்கள் எந்தெந்தத் தேதியில், என்னென்ன நேரத்தில் ஏற்படும்? இதைத் தெரிந்து கொள்ளப் பஞ்சாங்கம் பயன்படும்.
மற்றப்படி பஞ்சாங்கத்தில் ஜோசியப் பகுதி ஒன்று உண்டு. பல்லி விழும் பலன் முதல் தோஷங்கள் அவற்றின் பரிகாரங்கள் என்றெல்லாம் நிறைய உண்டு. இப்பகுதி முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது. ஆக பஞ்சாங்கம் என்பதன் கூறுகள் இரண்டு. பஞ்சாங்கம் என்பது ஒரு two in one ஏற்பாடு.
இஸ்ரோவிலும் சரி, நாசாவிலும் சரி, சீன ரஷ்யாவிலும் சரி, எல்லா நாடுகளின் வானியலிலும் (astronomy) பஞ்சாங்கம் பயன்படுகிறது. எவ்வாறு trigonometric tables
பயன்படுகிறதோ, அவ்வாறே பஞ்சாங்கமும் பயன்படுகிறது. விண்வெளி அமைப்புகளைப் பொறுத்தமட்டில், அவை பஞ்சாங்கத்தின் அறிவியலுக்கு எதிரான பகுதியை நிராகரித்து, அறிவியல் பகுதியைப் பயன்படுத்தி வருகின்றன.
பஞ்சாங்கத்தை முற்றிலுமாக நிராகரிப்பது தற்குறித்தனம். முற்றிலுமாக ஏற்பது கோமாளித்தனம். கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளித்தான் பஞ்சாங்கத்தை ஏற்க வேண்டும். இதுதான் பஞ்சாங்கம் குறித்த அறிவியல் கண்ணோட்டம்.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு: இயந்திரவியலில் நியூட்டனின் மூன்று இயக்கம் பற்றிய விதிகளை (Newton's laws of motion) வாசகர்களில் சிலர் அறிந்திருக்கலாம். வானியலைப் பொறுத்து கெப்ளரின் மூன்று விதிகளை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.

https://m.facebook.com/story.php?story_fbid=3342464892649722&id=100006587319842

1. வாரம் (தினம்)

2. திதி

3. கரணம்

4. நட்சத்திரம்

5. யோகம்

https://www.dinamalar.com/news_detail.asp?id=3061818 


No comments:

Post a Comment