Wednesday, June 22, 2022

சர்ச்சுக்குச் சென்ற பெந்தேகோஸ்தே சபை பெண் மதபோதகர் சடலமாக மீட்பு

 சென்னை: சர்ச்சுக்குச் சென்ற அகரம் தென் பாலாஜி நகரில் உள்ள பெந்தேகோஸ்தே சபை சர்ச் பெண் மதபோதகர் எஸ்தர் (51)  சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை!

போலீஸ் விசாரணை
சென்னையில் சர்ச்சுக்குச் சென்ற பெண் மதபோதகர், 
வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.


சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த மதுரபாக்கம் கிராமத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நேற்று மாலை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஆடு மேய்க்க சென்றபோது வனப்பகுதியில் மனித எலும்பு கூண்டு கிடப்பதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற சேலையூர் போலீசார் பார்த்த போது, அந்த எமும்புக் கூடு சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் எலும்பு கூடு என்பதும்  இறந்து ஒரு மாதம் காலம் ஆனதால் எலும்புகூடாக மாறியதும் தெரியவந்துள்ளது.

உடனடியாக எழும்புகூட்டை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 8ஆம் தேதி அகரம் தென் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் எஸ்தர் என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. அவரது மகள் ஏஞ்சலின் இது சம்பந்தமாக சேலையூர் போலீசில் புகார் அளித்தும் தெரியவந்ததை அடுத்து புகார் கொடுத்த ஏஞ்சலின் அழைத்து சென்று பிரேதத்தை காட்டியபோது இவர் தனது தாயார் தான் என அடையாளம் காட்டினார்

எலும்பு கூடாக கிடந்த எஸ்தர் மத போதனை செய்து வந்ததாகவும், கடந்த 8ம் தேதி வீட்டை பூட்டி சென்றவர் திரும்ப வரவில்லை என தெரியவந்தது.

இந்நிலையில் எட்டாம் தேதி காணாமல் போன எஸ்தர் எப்படி அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தார், அவறை யாரேனும் கடத்திச் சென்று கொலை செய்து வனப்பகுதியில் உடலை வீசிவிட்டு சென்றனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 https://zeenews.india.com/tamil/tamil-nadu/crime-news-tn-police-has-found-a-skeleton-of-a-women-in-tambaram-forest-area-398442
சென்னை சேலையூர், மதுரபாக்கம் கிராமத்தில் வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள், அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டனர். உடனடியாக அவர்கள் சேலையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாகக் கிடந்த பெண், அணிந்திருந்த உடைகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 8-ம் தேதி அகரம் தென் எம்.ஜி.ஆர் நகர், மகாலட்சுமி தெருவைச் சேர்ந்த ஏஞ்சல் என்பவர் தன்னுடைய அம்மா எஸ்தர் (51) என்பவரைக் காணவில்லை என்று புகாரளித்திருந்தார்.

மாயம்

இதையடுத்து ஏஞ்சலுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்குச் சென்ற ஏஞ்சல், சடலமாக கிடந்தது தன்னுடைய அம்மா எஸ்தர்தான் என உறுதிப்படுத்தினார். அதனால் எஸ்தர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் எஸ்தரின் சடலத்தை பிரேத பரிசோதனைசெய்த மருத்துவர்கள் அவரின் தலையில் காயம் இருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதனால் எஸ்தரை யாராவது கொலைசெய்தார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

                                                      எஸ்தர்
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தது எஸ்தர் என்பது உறுதியாகியிருக்கிறது. அவர், பாலாஜி நகரில் உள்ள பெந்தேகோஸ்தே சபை சர்ச்சுக்கு கடந்த 26.5.2022-ம் தேதி விடியற்காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அவர் வீட்டிலிருந்து புறப்பட்டபோது அவரின் மகள் ஏஞ்சல், அவரின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதனால் எஸ்தர் எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார் என அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்து வருகிறோம். அதில் ஒரு சிசிடிவி-யில் அதிகாலை ஐந்து மணியளவில் எஸ்தர் நடந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருக்கிறது.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த நேரத்தில் சென்ற வாகனங்களின் விவரங்களையும் சேகரித்து வருகிறோம். அதோடு எஸ்தரின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், அவரின் செல்போன் சிக்னல் ஆகியவற்றின் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது. இறந்துபோன எஸ்தர், மதபோதகராகவும் இருந்ததாகக் தகவல் கிடைத்திருக்கிறது."

சர்சுக்குச் சென்ற பெண், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சேலையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...