Monday, June 20, 2022

ஆசிரியை மாணவன் ஜாதிய உரையாடல் ஆடியோ-ஈவெரா மண்ணு

 

pdenoSs9 tiht4g75அந்த ஆசிரியை மாணவன் உரையாடல் ஆடியோ கேட்டேன்.. நம் சமூகத்தில் செயல் படும் சாதிய மனோபாவத்தை தெளிவாக காட்டுகிறது என்ற வகையில் ரொம்பவுமே முக்கியமான ஒன்றுதான் அது. அந்த மாணவனின் கல்மிஷமற்ற தன்மை வெகுவாக மனதை கவர்கிறது.கூடவே சில கேள்விகளும் எழாமல் இல்லை
அந்த மாணவன் ' எல்லோரும் சமம்தானே'என்று சொல்வது எதற்கான மறுமொழி என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை .பொதுவாகவே சாதி வித்யாசம் பாக்கக்கூடாது என்று அந்தப் பையன் சொல்வதாக எடுத்துக் கொள்ளப்பட்டு அது மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.


ஆனால்,அந்த டீச்சர் குறிப்பிட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்ட சாதிகளை ஓதுக்கி விட்டு அட்மிஷன் போடறாங்கன்னு சொல்வதற்கு மறுமொழியாக அவன் அதைச் சொல்வது போலவும் தெரிகிறது..அதாவது அட்மிஷனில் சாதி வித்யாசம் இட வித்யாசம் பார்க்காமல் எல்லோருக்கும் சமமாகவே அட்மிஷன் தரவேண்டும் என்று சொல்கிறோனோ என்றும் தோன்றியது எனக்கு.ஆனால் பொதுவாக அந்த ஆசிரியர்களை அவனுக்கு பிடிக்கும் என்று சொல்வதை வைத்துப் பார்த்தால் அவன் மனதில் சாதி வித்யாசம் இன்னும் உருவாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.அதுவே மிகுந்த பாராட்டுக்குரியதுதானே.
ஆனால் யதார்த்தத்தில்,அந்த மனோபாவம் ஒரளவு வரை தான் இருக்க முடியும்..நம் அமைப்பே அந்தளவுக்குத்தான் அதை அனுமதிக்கும். நாளை கல்லூரி அட்மிஷன் என்று வந்தால் அவனுக்கே நிச்சயம் சாதிய ஓர்மை வந்து விடும்.ஏனெனில் இந்தப் பையன் பிற்படுத்தப் பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புச் சார்ந்தவன்.. அவனது சில நண்பர்கள் பட்டியல் சாதியாக இருக்கும் பட்சத்தில்,இவனுக்கு கிடைக்காத கோர்ஸ், கல்லூரி,உதவித்தொகை ஆகியவை அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது இவன் மனதில் சாதி குறித்த ஒரு ஓர்மையும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்ற எண்ணமும் உருவாகத்தான் செய்யும்.
இன்று இருக்கும், க்ரீமி லேயர் விலக்கு கூட இல்லாத வெறும் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு,உருவாக்கி இருக்கும் ஒரு பிரச்னை இது. மருந்தே நோயானது போல.
இதில் இன்னொரு விஷயமும் பார்க்க வேண்டும்.அந்த டீச்சரும் ஒன்றும் பெரிய வில்லியெல்லாம் இல்லை .அவங்க வெளிப்படுத்தறதுதான் நம் சமூகத்தின் பொதுவான மனோ பாவம்.அந்தக்குறிப்பிட்ட பள்ளியில்,அவர் சொல்வது போல, ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள், இடத்தை சேர்ந்தவர்களுக்கு அட்மிஷன் கிடைக்காமல் செய்கிறார்கள் என்றால், அதுவும் தவறானதே. அதையும்,விசாரிக்கத்தான் வேண்டும். இவரை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதால் பிரச்னைகள் தீர்வதில்லை.

Suresh Venkatadri


K Kandaswami
1. ஜாதியை மனதில் , இல்லத்தில் , பள்ளியில் இட ஒதுக்கீட்டில் , கல்லூரியில் இட ஒதுக்கீட்டில் , அரசு வேலைவாய்ப்பில் , அரசு வேலையில் உத்தியோக உயர்வில் , தேர்தல்களில் - இந்த நிலைகளில் எல்லாம் வெற்றிகரமாக வைத்துக்கொண்டு - யாரும் ஜாதீய மனோபாவத்தில் இருக்கக் கூடாது என்று சொல்லுவது வேடிக்கை . எனவே அந்த ஆசிரியை இந்த ஜாதீய மனோபாவ சமூகக் கூட்டமைப்பில் இருப்பது யதார்த்த நிலைதான் . அவரைக் குற்றம் சொல்ல முடியாது . 
2 ' ஹிந்துப் பெயர் தாங்கிகள் ' பலர் ஜாதி ரீதியான முன்னுரிமையை அதன் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு புற வாழ்கையில் வேறு சமயத்தில் உள்ளார்கள் . இது ஒரு முரண். இந்தஜாதி ரீதியான இடஒதுக்கீடு தோல்வி அதன் பலன்கள் தேவையானவர்களுக்கு செல்லுவதில்லை எனவும் , இதனை மாற்ற வேண்டும் என்பது ஒரு விஷயம் . Creamy layer விலக்கும் சரி வர செய்யப்படுவதில்லை . 
3 . வழக்கம்போல பதிவரின் ஜாதியை திட்ட சிலருக்கு இந்தப் பதிவு ஒரு வாய்ப்பு !

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...