Friday, June 17, 2022

பாலவாக்கம் சட்டவிரோத கிறிஸ்துவ ஆக்கிரமிப்பு சர்ச் இடித்து அகற்றம்

சென்னை, பாலவாக்கத்தில், 87 வயது முதியவருக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச் உள்ளிட்ட கட்டுமானங்கள், நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன. 
GGM Church Gethsemane gospel ministries பாஸ்டர்.பால் மோசஸ் தான் அந்த ஆக்கிரமிப்பு சர்ச் இருக்கக் கூடும். பாலவாக்கம் எம்ஜிஆர் சாலையில் 3800 சதுர மீட்ட்டர், எனில் 17.5 மனை, அல்லது 30 கோடி மதிப்பு சொத்தை ஆக்கிரமித்து சட்டவிரோத சர்ச்
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் ஈஸ்வரா, 87. இவரது சகோதரர் பாலவாக்கத்தில் 40 ஆயிரத்து 900 சதுர அடி இடத்தை, 1960ல் வாங்கினார்; சில காலங்களில் அவர் இறந்து விட்டார். அவரது சட்டப்பூர்வ வாரிசாக, ஈஸ்வரா உள்ளார்.

அதில், 1,700 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து, தனசேகரன், பால் மோசஸ் என்பவர்கள் அங்கு சர்ச் கட்டினர். இது தொடர்பாக, ஈஸ்வரா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனு, நீதிபதிகள் டி.ராஜா, சவுந்தர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.இதில், திட்ட அனுமதி இன்றி, சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டு மானங்களை, நான்கு வாரங்களில் அகற்ற, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 
இந்நிலையில், மாநகராட்சியின் பெருங்குடி மண்டல பொறுப்பு உதவிக் கமிஷனர் முரளி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், முறைகேடாக கட்டப்பட்ட சர்ச், பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நேற்று துவங்கியது.

ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் மதில்சுவர் உள்ளிட்டவை அகற்றி வந்த நிலையில், சர்சில் மின் மோட்டார், மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் இருப்பதால், அதை தாங்களாகவே அகற்ற கால அவகாசம் கோரி, அதற்கான பணிகளை, சர்ச் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.
இதையடுத்து, சர்ச் கட்டடம் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சர்ச் கட்டடத்தை இடிக்கும் பணி இன்று மீண்டும் தொடரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாலவாக்கத்தில் தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு - பொதுமக்கள் போராட்டம் தினத்தந்தி Jun 16, 8:17 am
பாலவாக்கத்தில் தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சென்னை சென்னையை அடுத்த பாலவாக்கம் எம்.ஜி.ஆர். சாலையில் கடந்த 20 ஆண்டுகளாக உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தென் சென்னை கோட்டாட்சியர் சாய்வர்தனி, பெருங்குடி மண்டல உதவி கமிஷனர் முரளி உட்பட மாநகராட்சி மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரம் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது தேவாலயத்தில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள், தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும் என கூறிய அதிகாரிகள், தேவாலயத்தின் சுற்றுச் சுவரை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். உடனே அங்கிருந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் தேவாலயத்துக்கு முன்பு ஒன்று திரண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேவாலய நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தேவாலயத்தை அகற்ற 3 நாட்கள் கால அவகாசம் தரப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.

https://www.dailythanthi.com/News/State/protest-against-demolition-of-church-in-palavakkam-public-protest-723789



 

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...