Wednesday, June 15, 2022

திருக்குறள் காட்டும் சனாதன தர்மம்

இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல் சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள்.  . இந்து மதம் என்பது எளிதான பெயர்.




மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து  இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூற்வார் மேலும் எளிதாகப் புரிய‌

இந்துமதத்தின் புராதனப் பெயரே சனாதன தர்மம்.

திருக்குறள் உலகப் பொதுமறை, உலகப் பெருநூல். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான கருத்துக்களைக் கூறுவதே திருக்குறளின் சிறப்பு.

திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்றாலும், திருக்குறளின் உட்கிடையாகப் பெறப்படுவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமே.


திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை.

உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றுண்டு, மறுபிறப்பு உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.
“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போ டுயிரிடை நட்பு”
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”

இப்பாடல்கள் உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றில்லை ,மறுப்பிறப்பு இல்லை எனக் கூறும் கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களின் கருத்துகளுக்கு மாறானது.

“இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற குறள் வினைப்பயனே இல்லை என்பவர்களுக்கும், வினைப்பயனை வகுத்து வழங்க இறைவன் வேண்டாம் என்போருக்கும் மாறானது.

சுருங்கச் சொன்னால், இறைவனே நமது செயல்களின் பயனை தொகுத்து வழங்கிறான் என்ற இந்துமதக் கருத்தை இப்பாடலில் திருவள்ளுவர் கூறுகிறார்.
திருக்குறளில் கடவுள், ஏழுபிறவிகள், வினைப்பயன் , பாவப் புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஊழிக்காலம் ( யுகம்) என்ற இந்துமதக் கருத்துக்களே நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. வானுலகம் ,தேவர்கள்,இந்திரவிழா போன்ற இந்துமதக் கருத்துக்களை திருவள்ளுவர் கூறுகிறார்.
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குத் துய்த்தல் அரிது” ஊழைத் தொகுத்து வழங்கும் இறைவனால் அன்றி முயன்று கோடிக்கணக்கான செல்வத்தைச் சேர்த்தவருக்கும் அவற்றை அனுபவிக்க முடியாது என்பதே இக்குறளின் பொருள்.


கோடிக்கணக்காகச் செல்வத்தைச் சேர்த்தாலும் அதை அனுபவிக்க உனது ஊழ்வினைப்பயனைத் தொகுத்து வழங்க இறைவன் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஊழ்வினை என்பதை இந்துக்களைத் தவிர வேறு யாரும்
கூறுவதில்லை. “ஊழ்” என்றே ஒரு அதிகாரம் அமைத்து பாடியுள்ளார் திருவள்ளுவர்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”

ஊழ்வினையைவிட வலிமையானது வேறெதுவும் இல்லை. ஊழை விலக்கும் பொருட்டு இன்னொரு வழியைத் தேடினால் அங்கும் ஊழே முன்நிற்கும் _
என்பதே இப்பாடலின் பொருள்.


ஊழ்=பழவினை,தலைவிதி(பூர்வஜென்ம புண்ணியம்)
பூர்வ புண்ணியம் எனப் பேசுவது இந்துக்களின் மரபு எனச் சொல்லத் தேவையில்லை.
ஒருவன் தான் தேடிய செல்வத்தை அனுபவிக்கவும் இறைவனின் அருள் வேண்டும் என்ற திருவள்ளுவரின் கருத்து புத்தம், சமணம் போன்ற சமயங்களுக்கு மாறுபட்டது.
சமண முனிவரின் நாலடியார்
‘ வினைப்பயனை ,வினைசெய்தோருக்கு கொண்டு சேர்க்க இறைவன் என ஒரு முதல்வன் வேண்டாம் ‘ என்கிறது.எனவே திருக்குறள் புத்த,சமண மத நூலல்ல என்பது தெளிவு. எனவே
‘வகுத்தான் வகுத்த வகையல்லால்’
என்ற பாடல் கூறும் கருத்து இந்துக்களுடையதே என்பது உறுதி
இந்திரலோகம் ,வானோர்,அமரர் உலகு, இந்திரவிழா _ என திருக்குறளில் பலப்பாடல்களில் வருகின்றன. இவை இந்துமதக் கருத்துக்களே.
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்
விசும்புளார் கோமகன்
இந்திரனே சாலுங் கரி”

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் தேவர்களுக்காக நடைபெறும் விழாவும் நடைபெறாது என்பதே இப்பாடலின் பொருள்.
மழை பொழிய வேண்டுமென்று இந்திரனுக்கு விழா எடுப்பது இந்துக்களின் மரபு.
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு”
புத்தேள் உலகு= தேவர்கள் உலகு.
இதுவும் இந்துமதக் கருத்தே.

ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்

ஊழிபெயரினும் என வள்ளுவர் கூறுவது யுக வேறுபாடே. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரயுகம்,கலியுகம் என இந்துக்களின் வேதங்கள் கூறுவதையே திருவள்ளுவரும் கூறுகிறார். செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா சொர்க்கத்திற்கோ, இருள் உலகமான நரகத்திற்கோ செல்கிறது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதே கருத்தையே வள்ளுவர் தனது குறளில் கூறியுள்ளார். “அருள்சேர்ந்த நெஞ்சினார்கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்”

புண்ணியம் செய்தவர்கள் நரகத்திற்குச் செல்லமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர்;திருமூலரின் திருமந்திரமும் இதையே உரைக்கிறது. கீதை கூறும் அத்வைதக் கருத்தைப் பல பாடல்களில் திருவள்ளுவரும் கூறுகிறார். “யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” __ யான்,எனது என்ற ஆணவம் இல்லாதவன் உயர்ந்த உலகத்தை அடைவான் என்கிறார் திருவள்ளுவர்.

கீதையில் கண்ணன் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை
விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிபு”
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைப் போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்_ என்பதே இப்பாடலின் பொருள்.
‘ ஒழுக்கத்தில் நின்று பற்று விடுவது என்பது பகவத் கீதை கூறும் வழியாகும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையவர் அற்றாக அற்றது இலர் திருவள்ளுவர் கூறும் பற்றின்மை கீதையின் சாராம்சமே. “மடியில்லா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாவிய தெல்லாம் ஒருங்கு” சோம்பலில்லாத மன்னனுக்குத் திருமால் தாவி அளந்த உலகெல்லாம் கிட்டும் என்கிறார் வள்ளுவர்.

திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் “மலர்மிசையோன்” எனப் பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா என்பதே இதன் பொருள். திருவள்ளுவரும் “மலர்மிசை ஏகினான்” என்கிறார். “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” “அறவாறி அந்தணன் ” என்கிறார்திருவள்ளுவர். இவ்வாறு பிரம்மாவையே கூறுவர். “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் அரிது” “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்

இவ்வாறு பிறவியைப் பெருங்கடலாக இந்துக்கள் மட்டுமே கூறுவர். புத்த , சமண ,இஸ்லாமியரோ, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின்வந்த கிருஸ்தவர்களோ இவ்வாறு கூறமாட்டார்கள். “எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு”

“ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு டைத்து” “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு கழந்தும் அளறு” _ இவ்வாறு ஏழு பிறவிகள் உண்டென்பதை பலபாடல்களில் கூறுகிறார் திருவள்ளுவர். ஏழுபிறவிகள் உண்டென்பது இந்துக்கள் மட்டுமே நம்புவதாகும். அனைத்துயிர்க்கும் காவலாகிய தவநெறியை சிவனது நெறியாகக் கொண்டு வழிபடுவது தமிழ் நெறி வழக்கம். “தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே”(புறநானூறு_1) “அருந்தவ முதல்வன்”

(கலித்தொகை100 :7) “ஆல்கெழு கடவுள்(திருமுருகாற்றுப்படை) _ என பழந்தமிழ் இலக்கியங்கள் தவக் கோலம் கொள்வதைச் சிவபெருமானின் அடையாளமாகக் கொள்கின்றன.
திருவள்ளுவ நாயனாரும் சிவனின் தவக்கோலத்தைக் குறித்தே
“பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றார்
“கோளில் பொறியிற் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
இதில் இறைவனின் எட்டு குணங்கள் எவையென பரிமேலழகர் பொருள் எழுதும்போது சைவ ஆகமங்களின்படியே பொருள் கூறுகிறார்.

தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல்,
இயற்கை உணர்வினனாதல்,முற்றும் உணர்தல்,இயல்பாகவே பாவங்களை நீக்குதல்,பேரருளுடைமை,முடிவில்லா ஆற்றலுடைமை
_ என்பவையே அவை. இவை சிவனின் குணங்களாகும்.
” அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.


திருவள்ளுவரோ “அடிசேர்தல்”,”தாள்தொழல்” என்றெல்லாம் கூறுகிறார். இவ்வாறான
சொல்லாட்சிகள் இந்துக்களுக்கே உரியது. எனவே திருக்குறளின் அடிநாதமாக விளங்குவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமேயாகும்.

-கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்




ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.                        -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64


ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள்  = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர்  = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு  பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு


நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.              குறள் 335:

நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து  குறள்:24 நீத்தார் பெருமை 

திண்மை என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

 ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வான் நணியது உடைத்து. (அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:353
பொழிப்பு (மு வரதராசன்): ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
மணக்குடவர் உரை: மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து.
துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது.
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து (அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:361)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர்.
இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் (அதிகாரம்:துறவு குறள் எண்:346)
பொழிப்பு (மு வரதராசன்): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.
மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் - குறள் 50 இல்வாழ்க்கை
மணக்குடவர் உரை: இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவன். இவன் எல்லாராலும் நன்கு மதிக்கப்படுவ னென்றவாறு.
கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
        மற்றீண்டு வாரா நெறி.  356.                       
மெய்யுணர்தல்
கற்க வேண்டிய முறையான நூல்களைக் வற்றைக் கற்று  மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

தமிழர்  மரபு எனும்


உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை. 

இறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது. பிறந்து இறந்து மீண்டும் பிறந்து  இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது.


திருக்குறளின் வேர்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு                                                                                ஆக்கம் எவனோ உயிர்க்கு.   குறள் 31: அறன்வலியுறுத்தல்.

மணக்குடவர் உரை: முத்தியும் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமும் உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று

அறம், உயிருக்கு முக்தியை அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?

ஒருவர் தன் வாழ்வை ஒழுக்கமாகவும் நிறைவாகவும் வாழ உதவும் நற் செயல்களை வலியுறுத்துவதே  சனாதன தர்மம் எனலாம். இந்தக் கோட்பாடுகள் வழிகளே அன்றி விதிகள் அல்ல. 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.        குறள் 38:  அறன்வலியுறுத்தல்
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் இல்லை என அறம் செய்தால், அந்த அறச் செயல்களே அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.              குறள் 335:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.

அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து  குறள் 361. அவாவறுத்தல்

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் மீண்டும் மீண்டும்  வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
 
வேண்டாமை வேண்ட வரும் குறள் 362. அவாவறுத்தல்

பிறப்புத் துன்பத்தினை உணர்ந்தவன் ஒன்றினை விரும்பினால், அவன் பிறவாமை என்பதனையே விரும்புதல் வேண்டும். அவன் ஆசை இல்லாமையை விரும்ப, அவனுக்கு அப்பிறவாமை உண்டாகும்.

 

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.         குறள் 173: வெஃகாமை.
மணக்குடவர் உரை: சிற்றின்பமாகிய பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் செய்யார் பேரின்பமாகிய வீடுபேற்றைக் காமிப்பவர். இது வீடுபெற வேண்டுவார் செய்யாரென்றது.

  கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.                          குறள் 03 -கடவுள் வாழ்த்து
ஒருவர் கற்ற கல்வியினால் தூய அறிவு வடிவாக விளங்கும் உலகினைப் படைத்த தெய்வத்தின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், ஆகிய பயன்  என்ன?

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. குறள் 36:

மையில் உள்ளவர் பின்னர் அறத்தைச்  செய்யலாம் என்றிடாமல் உடனே அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்திலும் அழியாத் துணையாகும்.

 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.                             குறள் 10 -கடவுள் வாழ்த்து
பிறவியாகிய  மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின்  திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமே, மற்றவரால் இயலாது.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். குறள் 370: அவாவறுத்தல்.

ஒருபோதும் தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே எப்போதும் மாறாதிருக்கும் (மீண்டும் பிறப்பு இல்லாத பேரா இயற்கை பேரின்ப) வாழ்வைத் தரும்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.   குறள் 358. மெய்யுணர்தல்

மீண்டும் மீண்டும் பிறப்பு எனும்  அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

மனிதன் அறிவு எதற்காக?

இந்த உலகியல் மெய்மையை பிறப்பு எனும் அறியாமைலிருந்து வெளியேறவே என மிகத் தெளிவாக உரைக்கிறார்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358:

மு. வரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

திருவள்ளுவர் மன்னுயிர் மற்றும் மாயா உயிர் என்ற பயன்படுத்தி உயிர் ஆனது நிலைத்து இருக்கும் என்பதை aளிவாகக் காட்டுவது.

 

 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 

திறந்தெரிந்து தேறப் படும்.   குறள் 501:  தெரிந்துதெளிதல்
அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

02 கற்றதனால்

3 பிறப்பு என்னும் பேதைமை

பொன்றுங்கால் 

அறம் என்ற கோட்பாடு ஒன்றுதான் குறளில் வலியுறுத்தப்படுகிறது.

அறம் என்பது அவரவர் வாழ்க்கை நிலை தொழில் அடிப்படையில் மாறுபடும். 

மனித வாழ்க்கையை 4 நிலைகளாக, மாணவர், இல்லறத்தார், மனத்தவ நிலை & துறவிகள் பிரிப்பது மெய்யியல் மரபு. இந்தப் பிரிவில் பொருள் ஈட்டுபவர் இல்லறத்தார் மற்ற 3 நிலையினர் நல்வழியில் வாழ உதவுவது கடமை என்கிறார் வள்ளுவர்.

சமுதாயத்தில் தொழில் அடிப்படையில் 4 பிரிவுகளை வள்ளுவர் கல்வியாளர், அரசு சார் பணி ,  உற்பத்தி + வர்த்தகர் & உதவியாளர் என பிரித்து ஆண்டு உள்ளார் அரசு பணியில் அமைச்சர்

போர் வீரன்

தூதுவர் அரசர் இந்த அறக் கடமைகள் மற்ற மூவர்க்கு பொருந்தாது.

வர், மிகத்தெளிவாக 

நிலையின்


"உண்மையை பேச வேண்டும். அன்பாகப் பேச வேண்டும். தீங்கு விளைவிக்குமாயின் உண்மையையும், அன்பாக இருக்கும்போது பொய்யையும் பேசாதே. இதுவே சநாதன தர்மமாகும்"  - மனுதர்மம் - 4.138.
"உண்மையைச் சொல்வதே அறத்திற்கு (தர்மத்திற்கு) இசைவானது. உண்மையைவிட வேறு உயர்ந்தது ஏதும் கிடையாது. எங்கே பொய்மை, உண்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே உண்மை சொல்லப்படக்கூடாது இதுவே சனாதன தர்மம்..!
- மகாபாரதம்.




கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.  
குறள் 2: கடவுள் வாழ்த்து.

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?


உண்மை உரைத்தல்

நமது வேத நூல்களில், உண்மை பேசுவது பற்றி பல மேற்கோள்கள் உள்ளன.  உபநிஷதங்களில் ‘சத்யம் வத‘ (உண்மையைப் பேசு) போன்ற வரிகள் உள்ளன. கீழே உள்ள நீதி ஸ்லோகமும் இதையே குறிப்பிடுகிறது:

“சத்யம் ப்ரூயாத் பிரியம் ப்ரூயாத் ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம்
ப்ரியம் சா ந அன்ருதம் ப்ரூயாத் ஏஷ தர்ம: சனாதன: “

அதாவது, “சத்தியமும் இனிமையும்  வாய்ந்தவற்றைப் பேசவேண்டும்.  உண்மையாய் இருப்பினும் கடுமையாக இருப்பதை பேசக் கூடாது. அதைப் போல இனிமையானதும் பொய்யானதையும் கூட பேசக்கூடாது. இதுவே சனாதன தர்மமாகும்.”

ஸ்ரீராமர் மற்றும் ராஜா அரிச்சந்திரனின் கதைகள் இந்தக் கருத்தை நமக்கு தெளிவாக விளக்குகின்றன.

உணவின் பங்கு

நமது பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தேவையான உணவுகள் பரிந்துரைக்கப் பட்டிருக்கின்றன. எந்த உணவுகளை சேர்த்து உண்ணலாம், எவற்றைச் சேர்க்கக் கூடாது, எவற்றை அன்றே உண்ண வேண்டும்  முதலான பல விதிமுறைகளை நாம் அதில் காணலாம். அதே போல  மஹாபாரதத்தில் வரும் சுக்ராச்சாரியார் மற்றும் கச-தேவயானி விருத்தாந்தம் மது வகைகளின் தீமை பற்றித் தெளிவாக விளக்குகிறது.

அஹிம்சைக்கு முக்கியத்துவம்

அஹிம்சை நமது கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாகும். ‘அஹிம்சா பரமோ தர்ம:’ (அஹிம்சையே மேலான தர்மம்) என்பது நமது கோட்பாடாகும். எனவே தான் நாம் பசு முதலிய விலங்குகளுக்கு நாம் இறை ஸ்தானம் தருகிறோம். ஜீவகாருண்யத்தின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் நாம் துளசி போன்ற செடிகளின் இலைகளை பறிக்கும் முன் நாம் ஸ்லோகம் சொல்லி மன்னிப்பு கோருகிறோம்.

ஒழுக்கமான வாழ்க்கை

நமது வாழ்க்கையானது அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகிய பேறுகளை உள்ளடக்கியது. இவற்றைச் சரிவர பின்பற்றி வாழ்ந்தோமானால் வாழ்க்கை இனியதாக இருக்கும். அப்படி இல்லாமல் பொருள் மற்றும் பிற இன்பத்தில் மனதை செலுத்தினால் வாழ்வில் துன்பமே மிஞ்சும். இதையே ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் இப்படி குறிப்பிடுகிறது.

“அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்”    “ஏதத் மாம்சவஸாதி விகாரம்”

“பொருளைக் கண்டு மயங்காதீர் “, ” உடல் மீது உள்ள ஆசை நிலை இல்லாதது”

ஒரு கடவுள், பல வடிவங்கள்

சனாதன தர்மத்தின் முக்கிய நம்பிக்கைகளில் ஒன்று – கடவுள் ஒன்றே என்றாலும் அவர் பல வடிவங்களில் வழிபடக் கூடியவர். இதனால் தான் உருவ வழிபாடு, அருவ வழிபாடு, ஒளி வழிபாடு, இயற்கை வழிபாடு, த்யானம், நாம சங்கீர்த்தனம் என எந்த விதமான வழிபாட்டு முறைக்கும் நம் மதத்தில் இடம் இருக்கிறது. புத்தம், சமணம், சீக்கிய மதம் போன்ற கிளை மதங்கள், சாக்தம், சைவம், வைணவம் போன்ற குறிப்பிட்ட கடவுள் வழிபாடு முறைகளையும் நாம் இங்கு காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட சனாதன தர்மத்தை கடைபிடிக்க முடியும். உதாரணமாக, இராமாயணத்தில் சக்கரவர்த்தி தசரதரின் அரசவையில் ஜாபாலி முனிவர் இத்தகைய கருத்துக்களை உடையவரே. எனினும் அரசவையில் வசிஷ்டர் முதலியவர்கள் நடுவில் அவரும் மதிக்கப் பட்டார். 



https://thedal.info/sanatana-dharma-tamil/







சத்திரிய தர்மம் என்றால் சத்திரியர் கடமை என்று பொருள்.

சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

அற வழி என்றால் நல்ல வழி என்று பொருள். அற வழிக்கும் சனாதன வழிக்கும

இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.

சனாதன தர்மம் வகுக்கப்படுகிற ஒரு நூல் பகவத் கீதை. இந்த நூலை மிக சிறந்த நூல் என்பார்கள். உங்களில் இதைப் படித்துப் பார்த்தவர்கள் ஒரிருவர்தான் இருப்பீர்கள்.

பகவத் கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஓரொர் பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது அதவாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனை பார்த்து அரசாங்கம் சண்டை கடமைகளை செய் அதற்க்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பர்த்து மாடுகள் வளர்த்து அதற்க்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான். நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளக இரு என்றான். இந்த பிரிவினையை செயத தன்னாலேயும் மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை வேலை செய்யக்கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்த பாவங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என அச்சுரித்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குகுங்கள் என்றான். தன்னை வழிபாடு செயதால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.

இதுதான் சனாதன மதம். இது நமது மதம் அல்ல. பகவத் கீதையில் சாதி தர்மம் என்ற வார்த்தை உள்ளது. அதாவது அவரவர் சாதிக்கு ஏற்றவாறு கடமைகளை செய்ய வேண்டும் என்று பொருள்.

வேதம் மற்ற எல்லா சனாதன நூற்கலின் சாராம்சம் பகவத் கீதை என்று ஆரிய நூற்களைப்பை படித்தவர்கள் சொல்கிறார்கள்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் சநாதனம் என்றால் என்ன என்று.



ஸநாதன தர்மம் என்றால் என்ன? ஸநாதன சக்திகளை வேரறுப்போம் என்றொரு பெருங்கூட்டம் இங்கு சுற்றுகிறதே? அவர்களிடம் இச்சொல்லிற்கான பொருள் என்னவென்று கேட்டால் பொருத்தமாக இருக்குமோ என்னவோ🤔. இவர்களுக்கு சநாதனம் என்றதும் மனுதர்மம், நான்கு வர்ணம்தான் நியாபகம் வரும். அடுத்து பிறப்பால் பிரிவினை என்றொரு உருட்டு. சநாதன தர்மம் என்ற சொல்லே பௌத்தத்திலிருந்துதான் வந்தது என்பதுவரை சமூக வலைதளங்களில் உருட்டுகள் உருண்டோடுகின்றன. ஆகவே சநாதன தர்மம் என்றால் என்ன? இந்த சொல்லாடல் முதன் முதலில் எங்கே வருகிறது என்பதையும் அதற்கும்‌ பௌத்தத்திற்கும் சம்பந்தம் உண்டா என்பதையும் தர்மத்திற்கும் அறத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் இப்பதிவில் பார்ப்போம்...!
சரி "ஸநாதன தர்மம்" என்றால் என்ன? அச்சொல் எக்காலத்தில் வந்தது? பௌத்த நூல்களில்தான் உள்ளதா??? இவற்றை வெறும் திருக்குறள் வைத்தே விளக்கிவிட்டுச்செல்லலாம். இருந்தாலும்
ஸநாதன தர்மம் என்ற சொல்லாடல் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாக இந்துக்களால் நம்பப்படும் ஸ்ரீ மகாபாரதத்தில் உண்டு என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன். அதோடு 18 புராணங்களில் ஒன்றான சிவபுராணத்திலும் ஸநாதன தர்மம் என்ற சொல்லாடல் உண்டு. மகாபாரதத்தில் "ஞான வழியையும் கர்ம வழியையும் காட்டும் வழியாக" கண்ணன் காட்டியதே சநாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது.
"யேச வேதவிதோ விப்ரா:
யே சாத்த்யாத்ம விதோ ஜநா: I
தே வதந்தி மஹாத்மாநம்
கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் II
- மகாபாரதம்
சிவபுராணத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும்போது நானே சநாதன தர்மம் என்கிறார். அதாவது சிவபெருமான் கூறும் தர்ம நெறிகளே, அற நெறிகளே சநாதன தர்மம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல மனு ஸ்மிருதியில் உண்மையை பேச வேண்டும் என்பதுதான் சநாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது. அதாவது மனுதர்மத்தின் நான்காவது அத்தியாயம் 138 ஆவது வசனம் இவ்வாறு கூறுகிறது,
"உண்மையை பேச வேண்டும். அன்பாகப் பேச வேண்டும். தீங்கு விளைவிக்குமாயின் உண்மையையும், அன்பாக இருக்கும்போது பொய்யையும் பேசாதே. இதுவே சநாதன தர்மமாகும்"
- மனுதர்மம் - 4.138.
இப்படி மனுதர்மம், மகாபாரதம், சிவபுராணம் போன்ற நூல்களில் ஸநாதன தர்மம் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரதத்தின் காலத்தை புத்தர் காலத்திற்கு முன்பாக மிக எளிதாக எடுத்துச்செல்லலாம். உதாரணமாக தமிழில் நமக்கு கிடைக்கும் மிகப்பழமையான சங்க இலக்கியமான புறநானூற்றில் மகாபாரதப்போர் மற்றிய தகவல் உண்டு.
"அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்"
- புறநானூறு.
இப்பாடலில் மகாபாரதப்போரில் பங்குகொண்டவர்களுக்கு சேரமன்னன் உணவு அளித்தமையால் பெருஞ்சோறு வள்ளல் என்று புகழ்பாடுகிறார் புலவர். ஆக புறநானூறு எழுதப்பட்ட காலமாக கி.மு 300 ஆக கொண்டால் மகாபாரத்ததை இன்றிலிருந்து 2500 ஆண்டுகள் வரை சங்கத்தமிழ் இலக்கியங்கள் வாயிலாக பின்னோக்கி கொண்டு செல்லலாம் என்பதை முன்னிறுத்தி ஸநாதன தர்மம் என்ற சொல்லாடல் பௌத்த நூல்களுக்கு முன்பே இங்கு புழக்கத்தில் இருந்தது என்பதை கூற கடமைப்பட்டுள்ளேன். தர்மம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் அறம் என்பது பொருள். இதைத்தான் கண்ணன் காட்டும் வழியே அறம்(ஸநாதன தர்மம்) என்கிறது மகாபாரதம். சிவபுராணத்தில் நான் காட்டுவதே அறம் என்கிறார் சிவபெருமான். இதை திருவள்ளுவர் மிகத்தெளிவாக கூறுகிறார். உதாரணமாக,
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"
- திருக்குறள்.
பொருள் : ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
"அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்"
பொருள் : பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்"
பொருள் : ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
"சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு"
பொருள் : அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
இவ்வாறாக திருவள்ளுவர் கூறும் அறமே மகாபாரதத்தில் கண்ணன் கூறும் ஸநாதன தர்மம் என்றும், சிவபுராணத்தில் சிவபெருமான் கூறும் அறமே மனுதர்மம் குறிப்பிடும் சனாதன தர்மம் என்று கூறிக்கொண்டு சநாதனத்தை வேரறுப்போம் என்று கூறும் கும்பல்களுக்கு, சநாதன தர்மம் என்றாலே நிலையானது, அழிவில்லாத அறம் என்றுதான் பொருள் என்பதை கூறிக்கொண்டு நீங்கள் அதன் வேரை அறுக்க வேண்டுமெனில் அதன் ஆதி எங்குள்ளது என்பதை அறிய வேண்டும். அதாவது குறைந்தபட்சம் அதன் தொடக்கம் எது முடிவு எது என்பதை அறிந்தால் தான் சநாதன தர்மத்தின் வேரை தேடி கண்டுபிடிக்கவே முடியும். அதற்கு பின்தான் வேரை அறுக்க முடியும் என்பதை உங்களுக்கு ஒரு தகவலாக கூறி, சநாதன தர்மம் என்றாலே ஆதி அந்தமில்லாமல் நிலைத்திருப்பதே ஆகும் என்பதை உணரும்வரை நீங்கள் வேரறுத்துக்கொண்டே இருங்கள்...!
- பா இந்துவன்

அதாவது ஒருவர் எந்த மதத்தவர் ஆனாலும் (அல்லது மதமற்றவராக இருந்தாலும் கூட) அவர் சனாதன தர்மத்தைப் பின்பற்ற முடியும்.சனாதன தர்மத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை பார்ப்போம். 


இது ஆரிய மதத்தை குறிக்கும் சொல். இந்து மதம் என்பது பலரும் கொள்ளும் கருத்துக்களை உடையது.

திருக்குறளில் இப்படி ஒரு கோட்பாடு எதுவும் இல்லை. அறம் என்ற கோட்பாடு ஒன்றுதான் குறளில் வலியுறுத்தப்படுகிறது.

பலர் அறம் என்ற சொல்லையும், தர்மம் என்ற வட சொல்லையும் இணைக்கலாம். இது சரியான தில்லை. நாம் அப்படி பழகிப்போய்விட்டோம். வட மொழியில் தர்மம் என்றால் கடமை என்று பொருள். சத்திரிய தர்மம் என்றால் சத்திரியர் கடமை என்று பொருள்.

சனாதன தர்மம் என்றால் அவரவர் குலம் என்ன கடமையை செய்ய வேண்டும் என்று விதித்தார்களோ அதை எப்போதும் தவறாமல் செய்ய வேண்டும் என்று பொருள்.

அற வழி என்றால் நல்ல வழி என்று பொருள். அற வழிக்கும் சனாதன வழிக்கும் நேரடி சம்பந்தம் இல்லை.

இன்னும் விளக்கமாக சொல்கிறேன்.

சனாதன தர்மம் வகுக்கப்படுகிற ஒரு நூல் பகவத் கீதை. இந்த நூலை மிக சிறந்த நூல் என்பார்கள். உங்களில் இதைப் படித்துப் பார்த்தவர்கள் ஒரிருவர்தான் இருப்பீர்கள்.

பகவத் கீதையில் கிருஷ்ணன் என்கிறவன் தானே கடவுள் என்கிறான். மக்களை நான்கு வகையாய் பிரித்தவன் தானே என்கிறான். ஓரொர் பிரிவுக்கும் அடிப்படையாக ஒரு குணம் என்கிறான். இந்த அடிப்படை குணம் என்பது innate அல்லது inborn அதாவது கூடவே வருவது அதவாவது பிறவியில் உண்டானது என்கிறான். பிராமணனை உன் குணப்படி கோயில் பூசாரியாக கடமையை செய் என்கிறான். சத்திரியனை பார்த்து அரசாங்கம் சண்டை கடமைகளை செய் அதற்க்கான குணம் உண்டு என்று சொல்கிறான். வைசியன் என்பவனைப்பர்த்து மாடுகள் வளர்த்து அதற்க்கான குணம் உனக்கு உண்டு என்றான். இவர்களை இரண்டுமுறை பிறந்த உயர் பிறவிகள் என்றான். நான்காவதாக உள்ள சூத்திரர்களைப் பார்த்து குணம் ஏதும் சொல்லாமல் முன் கூறிய மூவருக்கும் வேலையாளக இரு என்றான். இந்த பிரிவினையை செயத தன்னாலேயும் மாற்ற முடியாது என்றும் சொன்னான்.

கிருஷ்ணன் இது மட்டுமா சொன்னான்? அவரவர் கடமையை மட்டும்தான் செய்ய வேண்டும் என்றான். சூத்திரன் எவ்வளவு தான் வீரமுள்ளவனாய் இருந்தாலும் சத்திரியன் கடமை வேலை செய்யக்கூடாது என்றான். சத்திரியன் எவ்வளவு தான் படித்திருந்தாலும் பூஜை வேலைகளை செய்யக்கூடாது என்றான். அப்படி செய்தால் பாவங்கள் உண்டாகும் என்றான். இந்த பாவங்கள் அடுத்த பிறவியில் தொடரும் என அச்சுரித்தினான். இன்னும் சொல்கிறான் மற்ற கொள்கைகளை மதங்களை ஒதுக்குகுங்கள் என்றான். தன்னை வழிபாடு செயதால் கீழுள்ள பெண்கள், சூத்திரர்கள், வைசியர்கள் மாட்சிமை அடையலாம் என்றான். இதெல்லாம் இரகசியம் என்றான்.

இதுதான் சனாதன மதம். இது நமது மதம் அல்ல. பகவத் கீதையில் சாதி தர்மம் என்ற வார்த்தை உள்ளது. அதாவது அவரவர் சாதிக்கு ஏற்றவாறு கடமைகளை செய்ய வேண்டும் என்று பொருள்.

வேதம் மற்ற எல்லா சனாதன நூற்கலின் சாராம்சம் பகவத் கீதை என்று ஆரிய நூற்களைப்பை படித்தவர்கள் சொல்கிறார்கள்.

நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் சநாதனம் என்றால் என்ன என்று.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...