Friday, June 17, 2022

குயின்ஸ்லேண்ட் பொழுது போக்கு பூங்கா


குயின்ஸ்லேண்ட் பூங்காவை காலி செய்ய தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு


https://www.hindutamil.in/news/tamilnadu/814701-notice-sent-by-hr-ce-to-vacate-queensland-amusement-park-canceled-high-court.html ஆர்.பாலசரவணக்குமார் : 16 Jun, 2022
சென்னை: குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்யக் கூறி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பாப்பான்சத்திரத்தில் அமைந்துள்ள குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா, அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு வேணு கோபாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி, பூங்கவை காலி செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா அமைந்திருக்கும் நிலம், கோயில்களுக்கு சொந்தமான நிலம் அல்ல. இந்த நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானதா, அறநிலைய துறைக்கு சொந்தமானதா என்பது தொடர்பான விவகாரம், நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் உள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வேலுமணி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நில உரிமை தொடர்பான விவகாரம் நில நிர்வாக ஆணையரிடம் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, குயின்ஸ்லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை காலி செய்ய வேண்டும் என்ற இந்து சமய அறநிலையத் துறையின் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.

'குயின்ஸ் லேண்ட்' மனு ஐகோர்ட்டில் நிராகரிப்பு

https://www.dinamalar.com/news_detail.asp?id=2878452 க் 28, 2021:சென்னை:குத்தகை காலம் முடிந்தும், 21 ஏக்கர் கோவில் நிலத்தை வைத்துள்ள, 'குயின்ஸ் லேண்ட் ரிசார்ட்டை' அப்புறப்படுத்த அனுமதித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2.75 கோடி ரூபாய் சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகில் பாப்பான்சத்திரத்தில், காசி விஸ்வநாதர் கோவில், வேணுகோபால் சாமி கோவில் உள்ளது. இதற்கு சொந்தமான 21 ஏக்கர் நிலத்தை, ராஜம் ஓட்டல் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. அதில், குயின்ஸ் லேண்ட் ரிசார்ட் நடத்தப்படுகிறது. குத்தகை காலம் 1998ல் முடிந்தது. நிலத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், குத்தகை பாக்கி மற்றும் இழப்பீடாக 2.75 கோடி ரூபாய் செலுத்தும்படி, குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்துக்கு கோவில் நிர்வாக அதிகாரி, 'நோட்டீஸ்' அனுப்பினார்; 2013ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குத்தகை தொகையாக 1.08 கோடி ரூபாய் கேட்டு, ஸ்ரீபெரும்புதுார் தாசில்தாரும் நோட்டீஸ் அனுப்பினார்.தாசில்தார் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, ராஜம் ஓட்டல் நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கோவில் பெயரில் 21 ஏக்கர் உள்பட 254 ஏக்கர் நிலத்துக்கு பட்டா கோரிய விண்ணப்பத்தை, மாவட்ட நிர்வாகம் நிராகரித்து விட்டது. 18 ஆண்டுகளாக 21 ஏக்கர் நிலமும் எங்கள் வசம் உள்ளது. அரசுக்கும், எங்களுக்கும் இடையில், குத்தகை தொடர்பான பரிவர்த்தனை இல்லை. எனவே, தாசில்தார் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டார். வருவாய் துறைக்கு 1.08 கோடி ரூபாய் செலுத்தவும், கோவிலுக்கு 9.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.மேல்முறையீட்டு மனுஅறநிலையத் துறை சட்டத்தின் கீழ், நிலத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள அனுமதித்து, நான்கு வாரங்களில் அதை முடிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, ராஜம் ஓட்டல் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. 'சம்பந்தப்பட்ட நிலம், வருவாய் துறைக்கு சொந்தமானதா; அறநிலையத் துறைக்கு சொந்தமானதா என முடிவு செய்யாத நிலையில், எங்களை வெளியேற்றியது தவறு' என்று மனுவில் கூறப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்தியா, சத்திகுமார் சுகுமார குருப் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரப்பட்டது. இரு தரப்பு வாதங்களுக்கு பின், மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.

பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபாலசாமி கோயிலுக்கு சொந்தமான நில
குயின்ஸ்லேண்டு பொழுது போக்கு பூங்கா அரசு நிலம் 21 ஏக்கரை குத்தகை காலம் முடிந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிய பிறகும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகிறது.
இந்த நிலம் பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் வேணுகோபாலசாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பதால் அதை திரும்ப பெறுவதற்காக
தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 2021 ல் வந்தது. அதில் அறநிலையத்துறை அந்த நிலத்தை மீட்க வேண்டும் என்பதோடு, குயின்ஸ்லேண்டு நிர்வாகத்திற்கு அபராதங்களையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் குயின்ஸ்லேண்டு நிர்வாகம்
சம்பந்தப்பட்ட 21 ஏக்கர் நிலம் அறிநிலையதுறைக்கு சொந்தமானதா அல்லது வருவாய்துறைக்கு சொந்தமானதா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், அறநிலையத்துறையின் மீட்பு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் அறநிலையத்துறையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நமது கேள்வி என்னவென்றால், நிச்சயமாக அந்த நிலம் நமக்கு சொந்தமானது கிடையாது என்று தெரிந்திருந்தும்,
அந்த நிலத்தை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறை அல்லது வருவாய் துறையிடம் ஒப்படைப்பதில் குயின்ஸ்லேண்டு நிர்வாகத்திற்கு என்ன தயக்கம்?
கோடிகளை குவித்த பிறகும், தங்களுக்கு உரிமை இல்லாத இடத்தை விட்டுகொடுப்பதற்கு இவர்களுக்கு மனதில்லையா?
கோவிலுக்கு தானமாக வழங்கபட்ட நிலம் அரசின் கட்டுபாட்டில் உள்ள நிலம் என்பது ஊர்ஜிதபடுத்தபட்ட பிறகு,
அந்த நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானதா அல்லது வருவாய்துறைக்கு சொந்தமானதா என்று முடிவெடுக்க, இதுவரை வீணாக்கபட்ட வருடங்கள் போதாதா?
இந்த சர்ச்சையை தீர்க்க சம்பந்தப்பட்ட இரண்டு துறை அதிகாரிகளுக்கு இன்னும் நூறாண்டுகள் தேவைபடுமோ?
ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளது என்று, இன்று வரை இருநூறுக்கும் மேற்பட்ட கோவில்களை தரைமட்டமாக்கி மீட்பு நடவடிக்கைகளில் வேகம் காட்டிய,
ஆக்கிரமிப்பு நிலத்தில் வீடுகள் கட்டியுள்ளனர் என்று சாமான்ய மக்கள் வசித்து வந்த பகுதிகளை தரைமட்டமாக்க வேகம் காட்டிய
அரசு நிர்வாகங்கள்
கோடிகளை குவித்து செமித்தவர்களிடமும் தங்களது வேகத்தை காட்டுமா?
ஆனாலும் ஆக்கிரமிப்பாளர்களின் அளவற்ற பேராசையை பற்றி என்ன சொல்வது?
இத்தனைக்கும் குயின்ஸ்லேண்டு நிர்வாகம் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களால் நடத்தபட்டு வருகிறது.








 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...