Tuesday, October 1, 2024

இயேசுவின் காலில் இருந்து வந்த புனித நீர் என்றது கழிவறை சாக்கடை நீர் என நிரூபித்தவருக்கு சர்ச்சை

இயேசுவின் காலில் இருந்து வந்த நீரால் ஏற்பட்ட சர்ச்சை   17 மே 2012 

https://www.bbc.com/tamil/india/2012/05/120517_indiablashphemy

இந்தியாவில், இயேசு கிறிஸ்துவின் கால்களில் இருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்ததை கேள்விக்குள்ளாக்கியவர் சட்ட நெருக்கடியை எதிர்நோக்குகிறார்.

இந்தியாவின் மும்பை நகரில் இருக்கும் வேளாங்கண்ணி தேவாலயத்தில் உள்ள இயேசு கிறிஸ்து சிலையின் கால்களில் இருந்து தண்ணீர் சொட்ட ஆரம்பித்ததும் அந்த நகரில் இருக்கும் கத்தோலிக்கர்கள் அதிசயித்துப் போனார்கள்.

இந்த நிகழ்வானது நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிலையின் பாதத்தை நோக்கி தினசரி குவியவைத்தது. இந்த தண்ணீருக்கு நோய்களை குணமாக்கும் சக்தி இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தேவாலயத்தின் இந்த கருத்தை நம்ப மறுத்த இந்தியர் ஒருவர் இதை கேள்விக்குள்ளாக்கினார். விளைவு, இந்த அதிசய நிகவு அவருக்கு சட்ட நெருக்கடியாக உருவெடுத்து இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் இருக்கும் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலான இயேசு கிறிஸ்துவின் கால் விரல்களிலிருந்து திடீரென தண்ணீர் சொட்ட ஆரம்பித்தது. இதைக்கண்டு அதிசயித்த கிறித்துவை நம்புபவர்கள் இதை உடனே அற்புதம் என்று வர்ணித்தார்கள். இதைத்தொடர்ந்து இந்த சிலையைச்சுற்றி தினசரி கூட்டம் கூடத்துவங்கியது.

இந்த தண்ணீரை சேகரித்துக் குடித்த பக்தர்கள் இதற்கு அற்புத சக்திகள் இருப்பதாக தெரிவித்தார்கள். மூட்டுவலி முதல் புற்றுநோய் வரை பலவகையான நோய்களையும் இந்த தண்ணீர் குணப்படுத்த வல்லது என்றெல்லாம் அவர்கள் தெரிவித்தார்கள். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலே இருந்தது.

இந்த நிலையில், இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் பத்திரிகையாளருமான சணல் எடமருகுவுக்கு மட்டும் இதில் சந்தேகம் எழுந்தது. கடவுள் அருள் என்பதை அவர் நம்பவில்லை. அந்த இடத்திற்கு நேரில் சென்ற அவர் அங்கே ஒருமணிநேரம் ஆய்வு செய்து ஒரு உண்மையை கண்டுபிடித்தார். அந்த சிலைக்கு அருகில் இருந்த கழிவறையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தண்ணீர் தேங்கியதையும், அப்படி தேங்கிய தண்ணீரே இந்த சிலையின் கால் வழியாக கசிந்ததாக அவர் நிரூபித்தார்.

தனது இந்த கண்டுபிடிப்பை அறிவித்தபோது, கத்தோலிக்க மதத்தலைவர்கள், தனக்கு எதிராக மத நிந்தனை குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு பதியுமாறு காவல்துறையிடம் கோரியதாக சணல் எடமருகு பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு இந்திய கத்தோலிக்கர்களை பிளவு படுத்தியிருக்கிறது. இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை இடமருகு சந்திக்கவேண்டும் என்றும் குறைந்தது கிறித்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியமைக்காக அவர் மன்னிப்பு கோரவேண்டும் என்றும் ஒரு சாரார் கோருகிறார்கள். ஆனால் மற்ற தரப்பினரோ, சணல் இடமருகுவை விமர்சிப்பவர்கள் மத அடிப்படைவாதம் பேசும் முஸ்லிம்களைப்போல நடந்துகொள்வதாகவும், எதிர்கருத்தை விவாதிக்க மறுப்பதாகவும் கூறுகிறார்கள்.

தொடர்ந்து மதத்தலைவர்களை எதிர்த்து கேள்விக்குள்ளாவதிலும், அற்புதங்களை செய்து நோய்களை குணமாக்குவதாக கூறும் ஏமாற்றுப் பேர்வழிகளின் சாயத்தை வெளுக்கச் செய்வதிலும் எடமருகு பேர்போனவர்.

தற்போது அவர் இந்திய மதநிந்தனை சட்டங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று முயற்சி எடுக்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். நியாயமான கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவின் மதசார்பற்றத்தன்மை இந்திய அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஆழமான மத நம்பிக்கைகள் தொடர்பான விவாதங்களும் மோதல்களும் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து எப்போதும் விலகியிருந்ததில்லை.

No comments:

Post a Comment

Indian God believers land swindled by Churches

https://www.news18.com/business/after-govt-this-christian-body-largest-landowner-in-india-8773512.html After Govt, This Christian Body Large...