ஆய்வின் போது, குறுக்கிட்டுப் பேசிய திமுக முன்னாள் நகர மன்றத் தலைவர் ஸ்ரீதர். `நீங்கள் யார்? நீங்கள் எதற்கு தலையீடுகிறீர்கள்'' - திடீரென டென்ஷனான நீதிபதி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கோர்ட் உத்தரவை மீறி கட்டுமான பணி தி.மலை கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-tiruvannamalai/judges-inspect-construction-work-at-thimalai-temple-in-violation-of-court-order/4049905
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவை மீறி நடக்கும் கட்டுமான பணிகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு நேற்று ஆய்வு செய்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிழக்கு பகுதி ராஜகோபுரம் எதிரே, 6.40 கோடி ரூபாய் செலவில் அடுக்கு மாடி வணிக வளாகம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், 'இண்டிக் கலெக்டிவ் அறக்கட்டளை' நிர்வாகி Tr.ரமேஷ் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், கடந்த 25ம் தேதி, மனுதாரர் ரமேஷ் ஆஜராகி, கோவிலில் கட்டுமானங்கள் மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்தும், பணி நடப்பதாக கூறி, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், 'கோவிலில் அக்., 5ம் தேதி, நாங்களே ஆய்வு செய்வோம்' என அறிவித்தனர். இதன்படி நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் ஆகியோர், திருவண்ணாமலை அருணாசலேஸ் வரர் கோவிலுக்கு நேற்று மதியம் வந்து, பல மணி நேரம் ஆய்வு செய்தனர்.
இதில் கோவில் நான்காம் பிரகாரத்தில், யானை கட்டும் மண்டபம் அருகே, மதில் சுவரை ஒட்டி கட்டப்படும் பக்தர்களின் தங்கும் அறை அவசியமற்றது எனக்கூறி கட்டுமானத்தை நிறுத்த உத்தரவிட்டனர். பிறகு, கோவில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
No comments:
Post a Comment