Friday, November 5, 2021

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை

திமுக முன்னாள் அமைச்சரின் மகனுக்கு 7 ஆண்டுகள் சிறை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தார்.

மாதிரிப் படம்

மாதிரிப் படம்














சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மறைந்த, திமுக முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் மகன் மணி அன்பழகன், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், சென்னை ஆயிரம் விளக்கு இந்தியன் வங்கியில் உள்ள 8 கணக்குகளிலிருந்து, வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு 78 கோடி ரூபாய் பணம் அனுப்பி உள்ளார்.

முறையான ஆவணங்கள் இல்லாமல், முறைகேடாக இந்தப் பணத்தை அனுப்பி வைத்ததாக, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி, குற்றம்சாட்டப்பட்ட மணி அன்பழகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்தாதபட்சத்தில் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மணி அன்பழகனுக்கு ஜாமீன் கிடைக்காத்தால், அவர் ஏற்கனவே சென்னை புழல் சிறையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அந்த வழக்குக்கு தீர்ப்பு வந்துள்ளது.





 

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...