Friday, November 5, 2021

இந்திய பாரம்பரிய கல்வி அனைத்து ஜாதியினரும் பிரிட்டீஷ் வருகை முன்பே படித்த்னர்

ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு முன் இந்தியாவின் கல்வி முறை எவ்வாறு சிறப்பாக இருந்தது என்பதை மிக விரிவாகவும், மறுக்க முடியாத தரவுகளுடனும் அழகிய மரத்தில் நிறுவியிருக்கிறார் காந்தியவாதி.தரம் பால்.

 

இந்தியாவிற்கான கல்வி முறை வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக அதை காலனி இந்தியாவெங்கும் திணித்து அழகிய மரத்தை அழித்து விட்டார்கள் என மஹாத்மா காந்தி கூறிய தை விவரித்து பிரிட்டிஷ் ஆதரங்களோடே எழுதப்பட்ட நூல் 

பிரிட்டிஷார் இந்தியா வருவதற்கு முன்னால் உலகின் பிற பகுதிகளில் கல்வி எப்படி இருந்ததோ அதைவிட மேலான நிலையில் இந்தியாவின் கல்வி இருந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் காலனி ஆட்சியில் தான் இந்திய கல்வி நிலை மற்றும் தரம் பெரும் வீழ்ச்சி அடைந்தது என்பதை பல்வேறு ஆவணங்கள் மூலம் குறிப்பாக ஆங்கிலேய அதிகாரிகளின் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் வழியாக நிருபிக்கிறார்.



ஒரு உதாரணத்திற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 15ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டுவரை கற்பிக்கப்பட்ட பாடப்பிரிவுகள், ஒவ்வொன்றிலும் ஆசிரியர், மாணவர்களின் எண்ணிக்கை என்று பல்வேறு தரவுகளை முன்வைத்து அதன்மூலம் இரு தேசங்களின் கல்வி நிலையை பற்றிய மதிப்பீட்டை முன்வைக்கிறார். 

1770களில் இந்திய அறிவு, கல்விமையங்கள் தொடர்பாக மூன்று அணுகுமுறைகள் பிரிட்டிஷாரின் டியில் இருந்த இந்தியப் பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டதாக கூறுகிறார். இவை மிக மிக முக்கியமான ஒன்று.

  1. பிரிட்டிஷாரின் அதிகார பெருக்கம் மற்றும் நிர்வாக தேவைகள்.
  2. இந்திய நாகரிகத்தை ஆக்கிரமித்து தோற்கடிப்பது
  1. மக்களை நிறுவனமயப்படுத்தி, எளிய, சட்டத்துக்குட்பட்ட கிறிஸ்துவ சமுதாயத்தை உருவாக்குதல்.

இந்திய பாரம்பரிய கல்வியானது எவ்வாறு பரந்துபட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வந்தது என்பதையும், அந்தந்த கிராம/நகரதில் உள்ள கல்வி மையங்கள் அங்கிருந்த அனைத்து மக்களின் பங்களிப்போடும் எவ்வாறு நடைபெற்றது என்பதையும் விளக்கமாக விவரிக்கிறார். பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் வருமானமானது மைய அதிகாரத்தின் கீழ் குவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தப் பாரம்பரிய அமைப்பு சிதைந்து அழிந்துவிட்டது என்பது மிக முக்கியமான அவதானிப்பு.

 மிக முக்கியமான இந்த ஆய்வு அறிக்கையில் ஒரு தகவல் , அது கல்வி கற்கும் மாணவர்களின் சாதி பற்றிய விவரங்கள். மாணவர்களின் சாதி – பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர், பிற சாதியினர் (பட்டியல் சாதி). 

ஓரிரு இடங்களைத் தவிர, அனைத்து இடங்களிலும் சூத்திரர் சாதி எண்ணிக்கை மாணவர்கள்தான், மற்ற அனைத்து சாதி எண்ணிக்கை மாணவர்களை காட்டிலும் குறிப்பாக பிராமண சாதி எண்ணிகையை காட்டிலும் அதிகம்.

No comments:

Post a Comment