Friday, November 19, 2021

திமுக இளைஞர் அணிக்கு சர்ச் மக்கள் கொடுத்த காணிக்கை பணத்தை எடுத்து தரலாமா

 

 
தஞ்சாவூர்,:திருச்சியை தலைமைஇடமாக கொண்ட, தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபையின் கீழ், 200க்கும் மேற்பட்ட பள்ளிகள், 40 சிறுவர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் காப்பகங்கள், மருத்துவமனைகள், ஒரு கலைக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது.

திருச்சபை பிஷப் டேனியல் ஜெயராஜ் என்பவர், ஹேமாவதி என்ற பெண்ணிடம், 34 லட்சம் ரூபாய் பெற்று, தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்துவ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியையாக பணி நியமனம் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, திண்டுக்கல் திருச்சபையின் தலைவர் பிளேட்டோ, திருச்சி திருச்சபை பொருளாளர் தெய்வீகன், உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் கூறுகையில், 'ஹிந்துவாக இருந்த ஹேமாவதியை, ஒரே நாளில் மதமாற்றம் செய்து, ஆசிரியையாக பணி நியமனம் செய்துள்ளார். 'சி.இ.ஓ.,விடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சி.இ.ஓ., தரப்பிற்கும் லஞ்சம் வழங்கப் பட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

No comments:

Post a Comment