Friday, November 26, 2021

நாடார் வியாபாரிகளை ஆபாசமாக பேசிய பெண் மத போதகர் மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்


நாடார்  வியாபாரிகளை ஆபாசமாக பேசிய பெண் மத போதகர் மீது டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார்




சென்னை:'வியாபாரிகள் மீது அவதுாறு பரப்பும் வகையில் பேசிய, பெண் மத போதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில்புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா. இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ தேவாலயத்தில், பாதிரியார் சாமுவேல் முன்னிலையில் நடந்த ஆராதனை கூட்டத்தில், மத போதகர் பியூலா செல்வராணி, வியாபாரிகளை ஆபாசமாக சித்தரித்து பேசியுள்ளார்.
குறிப்பாக நாடார் இன துவேஷத்தை முன்னிலைப்படுத்தியும், கலவரத்தை துாண்டும் விதமாகவும் அவர் பேசிய, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பியூலா செல்வராணியின் பேச்சு, அடித்தட்டு, உழைத்து முன்னேறும் வியாபாரிகளுக்கு எதிராகவும், ஜாதிய இனவெறியை துாண்டும் விதமாகவும் உள்ளது.

அவரது பேச்சுக்கு, பாதிரியார் சாமுவேல் வருத்தம் தெரிவிக்காதது மிகுந்த வேதனைக்குரியது. இச்சம்பவம், வேண்டுமென்றே விஷத்தை துாவும் விதமாகவும் உள்ளது.விசாரணை நடத்தி, விஷம பிரசாரம் பரவவிடாமல் தடுக்க வேண்டும். பியூலா செல்வராணி மற்றும் சாமுவேலை கைது செய்து நீதியை நிலை நாட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சி.எஸ்.ஐ  பெண் பாதிரி  பியூலா செல்வராணி,   நாடார்  வியாபாரிகளை ஆபாசமாக பேசியதற்கு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமாம்



No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...