Friday, November 5, 2021

மாணவர்களை மதம் மாற்றும் ஐக்கப் (AICUF – All India Catholic University Federation) & திருமாவளவன்

 லயோலா கல்லூரியின் ஐக்கப் (AICUF – All India Catholic University Federation) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நோக்கம். https://www.facebook.com/MaVeWriter/posts/881309269037303?__cft__[0]=AZWD4HzPl5e6M_RCFeUCvteVrMjEHa1jXTR7Y2ZbHb5gnfG3-gQJJzIR0jc0fYKqTsaOjh_cBWtVKEm-F80OtKMIwgni_OJZl-_uEVC8RhlPDZY9QW3cJlDIoP9UwM3jXEcErrsx7PiFylU-iL35pt5z&__tn__=%2CO%2CP-R


 மாணவர்களிடையே கிறிஸ்தவத்தை பரப்புவது அதாவது மதமாற்றம் என்பது இதனுடைய முக்கிய நோக்கம். அது முடியவில்லை என்றால் மாணவர்களை கம்யூனிச சித்தாந்தத்திற்கு மாற்றுவது. மாணவர்களின் சிந்தனை எதை நோக்கி இருக்க வேண்டும் என்பதை ஐக்கப் மன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கலந்துகொள்ளும் விஐபிக்கள் யார் என்று பார்த்தேலே தெரிந்துவிடும்.


கம்யூனிசவாதியும் நடிகையுமான ரோகிணி, ச.தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அங்கு மாணவர்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசுவார்கள். காதலர் தின சிறப்புக் கூட்டம் கூட இந்த ஐக்கப் இல்லத்தில் நடைபெற்றுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வருடம் எனக்கு நினைவில்லை. 2000 அல்லது 2002வது வருடமாக இருக்கலாம். நான் மயிலாப்பூர் விவேகானந்தர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஐக்கப் மன்றத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பற்றிய மாநில அளவிலான வினாடிவினா போட்டி நடைபெற்றது.

அதில் நானும் எனது நண்பரின் தம்பி மோகனும் கலந்து கொண்டோம். பல மாநிலங்களிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். கடைசியில் நாங்கள் முதல் பரிசு வெற்றிபெற்றோம். பரிசளிப்பு நிகழ்ச்சியில் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டார். அண்ணல் அம்பேத்கரைப் பற்றி பேசி கடைசியில் கிறிஸ்தவம் நமக்கு விடுதலையளிக்கும் என்றும் பேசினார்.

எங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசு 3000 ரூபாயும், கிறிஸ்தவ புத்தகங்களும்தான். அதில்கூட அண்ணல் அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் இல்லை.

தெளிவாக, மாணவர்கள் கிறிஸ்தவத்தை உள்வாங்க வேண்டும் என்பதற்காகவே அண்ணல் அம்பேத்கர் பெயரை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இப்போதும் அப்படித்தான். இதற்கு அப்போதும் சரி, இப்போதும் சரி சில பட்டியல் சமூக அமைப்புகளும், கட்சிகளும் துணை நிற்கின்றன.


No comments:

Post a Comment

பீகார் SIR இல் முஸ்லிம்களின் வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் மதரீதியான பாகுபாடு இல்லை

  No evidence of disproportionate Muslim deletions in Bihar SIR   Gender- and reason-wise breakdowns of Bihar’s deleted electoral roll show ...