Sunday, November 7, 2021

திருமாவளவன் மூலமாக முனைவர் தெய்வநாயகத்தின் கிறிஸ்துவமோசடி ஆய்விற்கு மீண்டும் விளம்பரம் வருகிறது

கீழ்ப்பாக்கத்தில் உள்ள எஸ்ரா சற்குணம் நடத்தும் இஎஸ்ஐ  சர்ச் கிறிஸ்துவ இயல் கல்லூரியில்(1) 05-11-2021 நடைபெற்ற   'திருக்குறள் பற்றிய புரட்சி நூல்' எனும் தலைப்பில் முனைவர் .தெய்வநாயகம்  எழுதிய  புத்தகம் வெளியிடப் பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமா(2) அதைப் பெற்றுக்கொண்டார் என்பது பத்திரிகை செய்தி.  சினிமா இயக்குனர் வி சேகர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு  நடத்துவர்(3)  (2015இல் சுவாமி கோவில் சிலைகளை கடத்தியதாக கைது செய்யப் பட்டு ஜாமீனில் உள்ளவர்)  மேடையில் உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நூலை வெளியிட்டு பேசியபோது இந்த நூலில் தெய்வநாயகம் கூறியவாறு திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்று தான் திருக்குறளை எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

1969ல் முதல் நூல் “திருவள்ளுவர் கிறித்தவரா?” வெளிவருகிறது அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அணிந்துரையோடு.

 

தொடர்ந்து மேலும் ஐந்து நூல்கள் எழுதி 1972இல் முரசொலி மற்றும் தினமணி ஸ்பான்சர்(4) செய்ய கிறிஸ்துவ சர்ச் வளாகத்தில் தேவநேயப் பாவாணர்  தலைமையில்  ஒரு மாநாடு நடந்தது.  அந்த மாநாட்டிற்கு வந்த தமிழ் உணர்வு உள்ளவர்கள் எதிர்க்க திருக்குறளுக்கு பழங்காலத்திலேயே கிறிஸ்தவ உரையுடன் ஓலைச்சுவடிகளை தயாரிக்க ஆர்ச் பிஷப் பேராயர்.அருளப்பா(5) ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த திரு ஜான் கணேஷ் ஐயர்(6) என்பவரை ஏற்பாடு செய்து அவருக்கு 15 லட்ச ரூபாய் வரை கொடுத்து பிறகு அது வழக்கு நீதிமன்றத்தில் முடிந்தது 

பிறகு தெய்வநாயகம்   உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் ச.வே.சுப்பிரமணியம்  கீழ் முனைவர்  பட்டத்தை பெற்றார். பிறகு கிறிஸ்தவ சர்ச் பணத்தில் நூலாகவும் வெளியிட்டார்.                                        

 வரலாற்றறிஞர் திரு.வேதபிரகாஷ்  1989ல் "இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை" என்ற நூல் எழுதும் பொழுது உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடர்பு கொண்ட பொழுது- அந்த நூலைப் படித்த தமிழ் மரபு சார்ந்த அறிஞர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது  வேதபிரகாஷ் தன் நூலில் பதிவிட்டுள்ளார் .  

                                        

வரலாற்று ஆசிரியர் திரு.ஈஸ்வர்; சரண் கனடா நாட்டில் பிறந்து இறை அனுபவம் தேடி இந்தியா வந்து இந்து சந்நியாசியாக  ஆங்கிலத்தில் 1991எழுதிய நூல். பல சேர்க்கைகள் உடன் பல பதிப்புகளையும் கண்டுள்ளது. இணையத்திலும் இலவசமாக கிடைக்கிறது 
தெய்வநாயகம் எந்த நிறுவனம் மூலமாக தான் முனைவர் பட்டம் பெற்றேன் என்று கூறினாரோ அந்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அது ஆய்வுக் கட்டுரை அல்ல என மிகத் தெளிவாக அறிக்கை வெளியிட்டு  30 வருடங்களுக்கும்  பின்பும் அந்த பொய் திருப்பித் திருப்பி கூறப்படுகிறது.

திருக்குறளில் கிறிஸ்தவ கருத்துக்கள் எதுவுமே இல்லை என்பது கிறிஸ்தவ அறிஞர்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளனர்.  1974
ல்   திருப்பதி வேங்கடவன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சுப்பு ரெட்டியார் தலைமையில் நடந்த திருக்குறள் கருத்தரங்கில் -  லயோலா கல்லூரி தமிழ் துறை பேராசிரியரும் இயேசு சபை பாதிரி எஸ்.ஜே.ராஜமாணிக்கம்  திருக்குறளில் கிறிஸ்துவம் சிறிதும் இல்லை-என மிக ஆணித்தரமாக பதிவிட்டார்.


 திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி  தமிழாய்வுத்துறை தலைவர் (ஓய்வு)  பேராசிரியர்-  முனைவர் ப.ச. ஏசுதாசன் எழுதிய நூல்- திருக்குறளும் திருவிவிலியமும் (ஓர் ஒப்புநோக்கு)
 

திரு தெய்வநாயகம் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவின் நூல் அட்டையிலேயே பெயரே “மற்ற உரைகள் அனைத்தும் தவறானவை என நிலைநாட்டும் திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்,”
அனைவருக்கும் புரிந்துகொள்ளஎளிதாக விளக்குகிறோம் திருக்குறளில்  முதல் மூன்று அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து- பிதாவை குறிப்பதாகவும்;  வான் சிறப்பு -பரிசுத்த ஆவியை குறிப்பதாகவும் &  நீத்தார் பெருமை  என்பது சுவிசேஷக் கதை இயேசுவை குறிப்பதாகவும் தெய்வநாயகம் பொருள் செய்கிறார். அத்தோடு திருவள்ளுவர் மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான் என குறிக்கும் எழுபிறப்பு என்பது தலைவன் பெரும் மகன் பேரன் பேத்தி என பரம்பரையை குறிக்கிறது அல்லது ஒரு மனிதனின் பல்வேறு கால நிலையைக் குறிக்கிறது என்று அவர் பொருள் கொள்கிறார். அதுபோல சான்றோர் என்றால் இறந்த இயேசுவிற்கு சான்று கொடுப்பவர் என்று பொருள் கூறுகிறார் ஐந்தவித்தான் என்ற தொடரை ரோமன் மரண தண்டனையில் இயேசுவின் மரணத்தை குறிப்பதாக சொல்கிறார் 
 (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் 
//“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.
இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar//
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு ஜேசன் ஸ்மித் என்பவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட் இன்ஸ்டியூட்டில் பல மாதங்கள் தங்கியிருந்து திருக்குறள் பற்றிய முனைவர்பட்ட கையேட்டை 2020இல் வெளியிட்டுள்ளார் அவர் மிகத் தெளிவாக திருக்குறளில் கிறிஸ்தவம் மற்றும் சமண கருத்துகள் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்

திருக்குறளிற்கு பல்வேறு கிறிஸ்தவ அறிஞர்கள் உரை எழுதியுள்ளார்கள். நாம் முக்கியமாக முனைவர்.தேவநேய பாவாணர், முனைவர்.சாலமன் பாப்பையா திரைப்பட கதாசிரியர் ஆரூர்தாஸ், முனைவர் முனைவர்.வளன் அரசு  இவர்கள் யாருமே தெய்வநாயகத்தின்  திரித்துக் கூறும் பொருளை தங்கள் உரையில்  கூறவே இல்லை.  
 

2013இல் மகாபலிபுரத்தில் நடந்த ஒரு திருக்குறள் கருத்தரங்கில்  செயின்ட் தாமஸ் இந்தியா வந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்று  பேராயர் எஸ்ரா சற்குணம் கேட்டதற்கு திரு அந்த நிகழ்ச்சியில் கருத்தரங்க நீதிபதிகளில் ஒருவராக கலந்துகொண்ட சத்திய வேல்முருகன் என்பவர் தெய்வநாயகம் தாமஸ் வந்தது கட்டுக்கதை என்று கூறினார் என்று பதிவு செய்துள்ளார்
 

(1) 
(2)
(3)உலகத் திருக்குறள் கூட்டமைப்பு என நடத்தும் சினிமா இயக்குனர் வி சேகர் இவர் 2015இல் சுவாமி கோவில் சிலைகளை கடத்தியதாக கைது செய்யப் பட்டு ஜாமீனில் உள்ளவர் 
https://www.hindutamil.in/news/tamilnadu/53509-77-1.html  https://tamil.oneindia.com/news/tamilnadu/conditional-bail-director-v-sekar-235182.html 
   
 (4)   தேவநேயப் பாவாணர் தலைமை வகித்த  இந்த மாநாட்டைப் பற்றி வெளியே கூற வேண்டாம் என்று கூறிவிட்ட நிலையில் 2005 வரை   மாநாடு    பற்றி அனைத்துச் செய்திகளும் மறைக்கப் பட்டிருந்தது.  இந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த புலவர் என்.வி.கலைமணி   மலேசியாவில் திருக்குறள் கருத்தரங்கில்  இதை கட்டுரையாக பிரசுரித்து பின் தன்னுடைய திருக்குறள் சொற்பொருள் சுரபி என்ற நூலிலும் எழுதிட இந்த ஆய்வின் பின்னணியில் தேவநேயப்பாவாணர் இருந்தார் முழுமையாக என்பதும் உறுதியானது
  
திருவள்ளுவர் பைபிளை காப்பியடித்து திருக்குறளை எழுதினார் என எழுதப்பட்ட திருவள்ளுவர் கிறிஸ்தவர்களுக்கு மறைமுகமாக தேவநேயபாவாணர் கொடுத்த விளம்பரம் என்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இணையத்தில் உள்ளது 


(5)https://ishwarsharan.com/2010/07/04/archbishop-arulappas-history-project-goes-terribly-wrong-k-p-sunil/

(6) https://ishwarsharan.com/2010/07/03/2-archbishop-arulappa-sends-his-document-forger-to-jail-ganesh-iyer-k-p-sunil/
  

No comments:

Post a Comment

Pakistan Parliament discussions