Sunday, November 21, 2021

முஸ்லிம் மதம் மாறும் போதே சரியான முஸ்லிம் ஜாதிக்கு மாறலைன்னா BC சர்டிபிகெட் கிடையாது


இந்துவாக இருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது உட்பிரிவு குறிப்பிடப்பட வேண்டும் : பி.சி சான்றிதழ் கேட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவு.
2019-09-01@ 00:06:23Dkn_Tamil_News_2019_Aug27__1212274432182

சென்னை:  இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது இஸ்லாம் மதத்தின் உட்பிரிவு குறிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கவில்லை என்றால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் ரில்வான். இவருக்கு திருமணமாகி 11 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், 24 மனை தெலுங்கு செட்டி பிரிவை சேர்ந்தவர். இவரது மனைவி ஆதிதிராவிடர் பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில், ரில்வான் கடந்த 2012ல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். புதுப்பட்டினம் ஜமாத்தில் மதம் மாற்றத்திற்கான பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து தனக்கும் மனைவி, குழந்தைகளுக்கும் இஸ்லாம் மதத்தில் லெப்பை பிரிவு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் கேட்டு திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் மனு கொடுத்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. பிறகு செங்கல்பட்டு ஆர்டிஓவிடம் முறையிட்டார். அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, தனக்கும் தனது மனைவி, குழந்தைகளுக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சான்றிதழ் வழக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரில்வான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, இஸ்லாம் மதத்தில் லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. மதம் மாறும்போது உட்பிரிவை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட ஜமாத்தில் மதமாற்ற பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால், மனுதாரர் அரசிதழில் தனது மதமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்ததில் லெப்பை என்ற உட்பிரிவை குறிப்பிடவில்லை. அதனால் அவர் முற்படுத்தப்பட்டோர் பிரிவாகவே கருதப்படுவார். பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க முடியாது என்று வாதிட்டார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இதேபோன்ற வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிற்படுத்தப்பட்டோருக்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறும்போது சம்பந்தப்பட்ட நபர் இஸ்லாம் மதத்தில் தான் சேரும் உட்பிரிவை குறிப்பிட வேண்டும். மனுதாரர் தான் சேர்ந்த இஸ்லாம் மதத்தின் உடபிரிவை  குறிப்பிடவில்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...