Sunday, April 16, 2023

இயேசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம்: சர்ச்சைக்குரிய வழிபாட்டில் 4 பேர் உயிரிழப்பு

 

இயேசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம்: சர்ச்சைக்குரிய வழிபாட்டில் 4 பேர் உயிரிழப்பு


கென்யாவில் ஏசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பலியான 4 பேர்

கென்யாவின் கடலோர கிலிஃபி கவுண்டியில் இயேசுவை சந்திக்க காட்டில் உண்ணாவிரதம் இருந்து, சர்ச்சைக்குரிய வழிபாட்டி ஈடுபட்ட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், மேலும் டஜன் கணக்கானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தின் நான்கு வழிபாட்டாளர்கள் மகிரினி(Magarini) தொகுதியின் ஷகாஹோலா கிராமத்தில்(Shakahola village) உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் பல நாட்கள் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர் என நியூஸ்வீக் செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூர் போதகர் ஒருவர் இயேசுவை சந்திக்க உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என சொன்னதை தொடர்ந்து குழு ஒன்று பல நாட்கள் அந்த காட்டில் உணவு உண்ணாமல் வாழ்ந்து வந்துள்ளனர் என காவல்துறையின் கூற்றுப்படி தெரியவந்துள்ளது.

வழிபாடு நடைபெறுவது தொடர்பான ரகசிய தகவல் கிடைத்த உடன், காட்டுப் பகுதிக்குள் சோதனையிட்ட பொலிஸார், உண்ணாவிரதப் பயிற்சியில் ஈடுபட்ட 15 பேரை கண்டறிந்தனர், அதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்தின் தலைவரான மக்கென்சி என்தெங்கே(Makenzie Nthenge)என்பவரால் இந்த குழு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 Pastor Paul Makenzie Nthenge(Nation)

போதகர் ஜாமீனில் விடுவிப்பு

மிகப்பெரிய அழிவு சாபத்தை(apocalyptic damnation) தவிர்க்கவும், விரைவாக பரலோகம் நுழைந்து இயேசுவை சந்திக்கவும் தங்களை பட்டினி கிடக்கும்படி மக்கென்சி என்தெங்கே அறிவுறுத்தியதாக வழிபாட்டாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போதகர் மக்கென்சி என்தெங்கே கடந்த மாதம் 2 குழந்தைகளின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளியே அனுப்பட்டு இருக்கிறார்.

 standardmedia.co.ke

உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் போதகர் மக்கென்சி என்தெங்கே-வை பின்பற்றுபவர்களில் உள்ளனர்.

குழந்தைகளை இழப்பது மூலம் நீங்கள் ஹீரோவாக மாறுவீர்கள் என போதகர் என்தெங்கே பெற்றோரிடம் கூறியதாக கூறப்படுகிறது

https://m.dailyhunt.in/news/india/tamil/lankasrinews-epaper-dh6121882baafd43dc9bce7fba7339b4de/iyesuvai+santhikka+kattil+unnaviratham+sarcchaikkuriya+vazhibattil+4+ber+uyirizhappu-newsid-n490566978

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...