பகவத்பாதர்களின் காலத்தைக் கணிக்கச் செப்பேடு
பின்வரும் செப்பேடு குஜராத் மாநிலத்தில் கிடைத்தது. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்தது. மஹாராஜா பூதன் என்பவனால் வெளியிடப்பெற்றது.
எபிக்ராஃபியா இண்டிகாவின் 40-ஆம் தொகுதியில் வெளியானது. இதில் இடம் பெற்றுள்ள வரியில் பகவத்பாதாயதனஸ்ய என்ற சொல் இருமுறை இடம் பெற்றுள்ளது. பகவத்பாதரின் ஆயதனத்திலுள்ள துறவிகளுக்கு உணவளிக்கப்பெற்ற மான்யத்தைக் குறிக்கிறது. இதனை வெளியிட்டவர்கள் பகவத்பாத என்னும் சொல்லை திருமால் என்று கருதி திருமாலின் கோயிலில் துறவிகளுக்கு அமுதளிக்க என்று மொழிபெயர்த்துவிட்டனர்.
இதனை மீளாய்வு செய்த சங்கரநாராயண சாஸ்த்ரிகள் பகவத்பாத என்னும் சொல் எங்கும் திருமாலுக்கு பயின்று வராததையும், ஆதிசங்கரருக்கு மட்டுமே பகவத்பாதர் என்னும் அடைமொழி இருப்பதையும் குறிப்பிட்டு துறவியருக்கு அமுதளிக்கும் தொடர்பையும் குறிப்பிட்டு ஐந்தாம் நூற்றாண்டு இறுதியில் கோயில் இருப்பதால் அவருடைய காலம் பொயு நான்காக இருக்கலாம் என்று கருதியுள்ளார். இதற்கேற்ற மற்றைய சான்றுகளையும் அவர் அலசியுள்ளார்.
No comments:
Post a Comment