Saturday, April 8, 2023

ஏசு மரணதண்டனை- இறந்து புதைத்த பின் மீண்டும் பழைய உடம்பில் உயிரோடு வந்தாரா- அது அதிசயமே- இல்லையே?

 கிறிஸ்துவ மத தொன்மக் கதை நாயகனான ஏசு  இஸ்ரேலில் பொஆ 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என சுவிசேஷக் கதைகளில் மட்டுமே உள்ளது. அவர் வாழ்ந்த இஸ்ரேல் நாட்டின் எபிரேய குறிப்புஅ ல்லது ரோம் நாட்டின் எந்த ஒரு குறிப்பிலோ அவரைப்பற்றி எந்த ஒரு செய்தியும் முதல் நூற்றாண்டு முழுவதும் இல்லை.

சுவிசேஷக் கதைகள் ரோமன்  கவர்னர் ஆயிரம் போர் வீரர் தலைவர் கீழான ஒரு படைவீரர் குழுவைக் கொண்டு ஏசுவை கைது செய்து விசாரணை நடைத்து ரோமன் மரண தண்டனையாக தூக்கு மரத்தில் அம்மணமாக தொங்கவிட்டு அதனால் இறந்து போனதாக கதை சொல்கிறது

தூக்கு மரத்தில் அவர் மூன்று மணி நேரம் மட்டுமே தொங்கினார் என்று ஒரு சுவிசேஷமும் அல்லது ஆறு மணி நேரம் என்று இன்னொரு சுவிசேஷ கதையும் கூறுகிறது.

சுவிசேஷக் கதைகளிலேயே பஸ்கா பண்டிகை நாள் - வெள்ளி- மறுநாள் -யாவே கர்ஹ்தர் ஓய்வு நாள் அதனால் (மறுநாள் பஸ்கா பண்டிகை என  யோவான் சுவி மட்டும் சொல்கிறது) இறந்தவர் உடல் தொங்கக்கூடாது என ரோமன் கவர்னரிடம் அனுமதி கேட்டு உடல் இறக்கப் பார்த்தனர் என்றும் அவரோடு சேர்த்து மேலும் இரண்டு பேர் மரண தண்டனையில் தொங்க விடப்பட்டவர்கள் மரணம் அடையாமல் இருந்ததால் கால்கள் வெட்டி கொல்லப்பட்டு இறக்கினார் ஆனால் ஏசு இறந்தது போல மயங்கி இருந்தார் என்  கால் வெட்டாமல் இறக்கினர் 

ஒரு முப்பது வயதான மனிதர் சாட்டையால் அறையப்பட்டு பிறகு தூக்குமரத்தில் ஆணிகள் அறியப்பட்டு தொங்கவிடப்பட்டால் 3 அல்லது 6 மணி நேரத்தில் இறப்பது நடப்பது இல்லை இன்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் இது ஒரு திருவிழாவாக வெள்ளிக்கிழமை காலை தன்னை சிலுவையில் அறைந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை கீழே இறங்குவது என்பதை பலர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்கள்

சரி உண்மையாகவே ஏசு இறந்ததாக  அவரை கீழே இறக்கி புதைக்கும் முன்பாக அவரிடம் அசைவு தோன்றி இருந்தாலும் அது போல நிகழ்வுகள் இன்று வரை ஓரு அதிசயம் எனப் பத்திரிகை செய்தியாக வருகிறது. இது உயிர்த்து எழுந்தார் என்பதாக கதை பரவியும் இருக்க வாய்ப்புண்டு. சுவிசேஷக் கதைகளை எழுதியது ஏசுவை நேரடியாக பார்த்த சீடர்களோ அவருக்கு அடுத்த தலைமுறை கூட இல்லை என பைபிளில் அறிஞர்கள் கூறுகின்றனர்

நம்மிடம் உள்ள சுவிசேஷங்க கிரேக்க மூல கிரேக்க சுவிசேஷ ஏடுகளில் ஒரு முழுமையான சுவிசேஷம் என்றால் கூட அது 4ம் நூற்றாண்டுக்கு பிற்பாடு தான் வருகிறது. மாற்கு சுவிசேஷக் கதை வரையப்பட்டது 70 -  80 க்கு இடையே அதாவது 30ல் இறந்த இயேசுவைப் பற்றி இரண்டு தலைமுறை பின்பு வரையப்பட்டது. நம்மிடம் உள்ள ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தைய மாற்கு சுவிசேஷம் அத்தியாயம் 16 என்பது எட்டாம் வசனத்தோடு முடிகிறது

அதாவது இரண்டு பெண்கள் மட்டுமே கல்லறைக்கு சென்றார்கள் சீடர்கள் எல்லோரும் கலிலியோவிற்கு செல்லுமாறு முன்பே கூறியிருந்தார் என மார்க் சுவிசேஷம் மத்தேயு கூறுகிறது ஆனால் இந்த இயேசு சோகமாக கலிலியோ செல்லுங்கள் என்ற வசனமானது தீர்க்கதரிசனமானது லூக்காவிலும் யோவானிலும் கிடையாது ஏனென்றால் அவை காட்சியை ஜெருசலேம் இல்லையே வைக்கின்றன.
இந்த ஒரு வசனம் ஒன்றே சுவிசேஷக் கதாசிரியர்கள் ஏசு சொன்னதாக தன்னிச்சையாக எதை வேண்டுமானாலும் அவர் சொன்னதாக போட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம். இறந்து போனதாக கூறப்பட்ட ஏசு மீண்டும் பழைய உடம்பில் சீடர்களுக்கு காட்சி கொடுத்ததான கதை  மூல கிரேக்க‌ மாற்கு ஏடுகள் ஐந்தாம் நூற்றாண்டு வரையிலும் இல்லை என்பதையும் நாம் கண்டோம்.
ஏசுவின் கல்லறை எங்கே என்பது 4ம் நூற்றாண்டில் ரோம் மன்னன் கான்ஸ்டன்டைன் அம்மா ஹெலனா தேடி வர யாருக்கும் தெரியவில்லை, பிறகு அவர் கனவில் வழி நடத்த தற்போது உள்ள ஏசு கல்லறை சர்ச் கட்டப்பட்டது. ஆனால் சுவி கதை கூறும் குகை கல்லறை அது அல்ல என அங்கிருந்து 2 மைல் தள்ளி உள்ள தோட்டக் கல்வாரி குகை எனும் இடமே பெரும்பாலன பைபிளியல் தொல்லியல் அறிஞர் கருத்தாக உள்ளது.

ஏசு பழைய உடம்போடு காட்சி மட்டுமே

சுவிசேஷக் கதைகளுக்கு முந்தையதான பவுல் கடிதத்தில் ஜெருசலேமில் ஒரே நேரத்தில்  12 சீடர்களுக்கு, ஏசு சகேதரன் ஜேம்ஸ், 500 பேருக்கு & எனக்கு காட்சி தந்தார். அனைவருக்கும் ஒரே மூல கிரேக்க சொல் காட்சி மட்டுமே; பேசியதாகவோ உடன் சாப்பிட்டதாகவோ எந்தவிதமான குறிப்பு பவுலில் இல்லை இப்பொழுது நாம் மாற்கு 16 ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய ஈடுகளிலும் ஏதுமில்லை என்பதை இணைத்து பார்க்க வேண்டும்
ஏசு அதிசயங்களை பற்றி கூறும் பொழுது ஒருவன் விளக்கை ஏற்றினால் அதைக் கட்டிலுக்கு அடியே வைக்க மாட்டான். அதை அனைவரும் காணும் படியாக பீரோவில் வைப்பான் என்று மிகத் தெளிவாக கூறுகிறார் எனவே அவர் இறந்த பின்பு மீண்டும் உயிரோடு வந்திருந்தால் மக்கள் அனைவருக்கும் அல்லது எதிரிகளுக்கும் கூட அதாவது மாற்கு சுவிசேஷத்தில் யூத தலைமை பாதிரிக்கு கூறியபடி காட்சி கொடுத்திருப்பார்

இறந்ததான ஒருவர் பிழைத்தால் அதிசயம் இல்லையே

இறந்த ஒருவர் பிற மீண்டும் உயிரோடு இரு பழைய உடம்பில் காட்சி கொடுப்பது என்பது ஒரு பெரிய அதிசயம் இல்லை ஆனால் அவர் அது தெய்வ வடிவம் எடுத்து காட்சி கொடுத்தார் என்றால் மிக நிச்சயமாக மற்றவர்களுக்கு கொடுத்து இருப்பார் அப்படி எந்தவிதமான குறிப்பும் சுவிசேஷக் கதைகளில் இல்லை

பவுல் உருவாக்கிய கதை ஏசுவின் மரணமும் ஆதாமின் பாவமும்

பவுல் ஏசுவின் மரணத்தையும் ஏசு இறந்த பின்பு மீண்டும் பழைய உடம்பில் காட்சி கொடுத்தார் என்பதை வைத்து இன்னொரு கதை செய்கிறார் அதாவது பூமியில் மனிதன் இறப்பதற்கான மரணம் அடைவதற்கு காரணம் என்பதாக ஒரு கதை பழைய ஏற்பாட்டில் உள்ளது அதன்படியாக ஆதாம் என்ற முதல் மனிதன் சாத்தான் எனும் இன்னொரு கடவுள் தூண்டிவிட நல்லது கெட்டது என அறியும் பகுத்தறிவு மரத்தின் கனியை சாப்பிட்டுவிட்டு அதனால் தான் ஆடையின்றி இருப்பதையும் உடலுறவு கொள்வதைப் பற்றி எல்லாம் புரிந்து மனைவியோடு உடலுறவு கொண்டு விடுகிறான் இதை அறிந்த கடவுள் மனிதன் அறிவற்று நிர்வாணமாக இருக்கவே தான் படைத்ததை மீறி விட்டான் என பூமியில் தள்ளி விட்டு பூமியில் மரணத்தையும் விதித்தார் என்பது கதை

ஒரு மனிதன் ஆதாமினால் இந்த பூமியில் மரணம் வந்தது இன்னொரு மரணம் ஏசு தன் உயிரை மரணதண்டனையில் விட்டதால் அதுவும் அவர் உயிரோடு எழுந்து காட்டியதால் இனிமேல் பூமியில் மரணம் நிகழாது எனும் பொருளில் பவுல் இறந்த இயேசுவை தெய்வீகர் ஆக்குகிறார்.
இதே வசனத்தை இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதிய யோவான் சுவிசேஷத்தில் இயேசு கூறியதாகவும் போட்டுள்ளனர் 

எனவே ஏசு இறந்த பிறகு மீண்டும் பழைய உடம்பில் உயிர் பெற்று இரு தெய்வீக நிலையில் காட்சி கொடுத்தார் என்பது உண்மையானால் பூமியில் மனிதன் மரணம் அடைவது நிகழ் நடந்திருக்கக் கூடாது இதை பவுல் உணர்ந்து இருந்தார் என்பதை நாம் தெளிவாக இன்னொரு வசனத்தில் பார்க்கலாம் அதாவது பவுல் என்ன கூறுகின்றார் என்றால் இன்னும் வரும் காலம் அதாவது உலகம் அழியும் தீர்ப்பு நாள் வரும் காலம் மிகவும்
குறைவாக இருப்பதனால் இனி திருமணம் ஆனவர்கள் ஆனா ஆகாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் திருமணம் ஆனவர்கள் கூட இனிமேல் அதத்தான் மனைவியோடு உடலுறவு கொள்ள வேண்டாம் என்று எழுதியுள்ளார் அதாவது உலகம் அழியும் காலம் மிக மிகக் குறைவான நாட்கள் என பவுல் நம்பினார்
அந்த நோக்கில் இறந்த ஏசுவை உலகம் முடிவிற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப் பட்ட நாடு எனும் கதைப்படி இஸ்ரேல் புராணக் கதை தாவீது பரம்பரை  ஆட்சி செய்ய வேண்டிய  யூத ராஜா என்ற கிறிஸ்து -தெய்வீகர் என பவுல்   ஒரு மூடநம்பிக்கை கருத்தை விதைத்தார். 

இதன் அடிப்படையில் தான் ஏசு  உயிர்த்தார் என்பதை அதிசயம் என்கிறார்கள் ஆனால் பவுல் இறந்து போனார் பேதுரு இறந்து போனார் அனைவரும் இறந்தனர் எனவே இயேசு உயிர்த்தெழுந்எனும் கதையில்  எந்தவிதமான அதிசயமும் இல்லை.

ஏசு தெய்வீகர் என்பது வெற்று கட்டுக்  கதை   என்பது சுவிசேஷக் கதைகளை நேர்மையாக படிப்போர்  அறிவோடு சிந்திப்பவர்கள் ஏற்பர்.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...