இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல்படி யூதேயா - இஸ்ரேல் என்பவை கிரேக்கர் காலம் முன்பு மிகச் சிறு கிராமம் மட்டுமே. தாவீது ஜெருசலேம் என்பது ஒரு கால்பந்து ஆடுகள அளவே என உறுதியாக கூறுகின்றனர்.
ரோம் நகரில் உள்ள போர்கீஸ் அருங்காட்சியகத்தில், 17ஆம் நூற்றாண்டில் பெரினி என்ற புகழ்பெற்ற கலைஞரால் செதுக்கப்பட்ட டேவிட் சிலை. கோலியத் என்ற பெரும் வீரனை கவணை கொண்டு ஒரே எறிதலில் வீழ்த்திய மாடு மேய்க்கும் யூத சிறுவன் டேவிட்டின் சிலை. மைக்கேலேஞ்சலோவின் டேவிட் சிலை உலகப் புகழ் பெற்றது என்றாலும் அது இதைப் போல் action - freeze picturization இல்லை. டேவிட் சிலை வடிவங்களில் எனக்கு மிகப் பிடித்த சிற்பம். ஜூடியா பகுதியில், யூத அரசை 3000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவிய டேவிட், இஸ்ரேலியர்களின் முதல் மற்றும் முக்கிய மன்னர். இன்றைய இஸ்ரேலிய தேசிய கொடியில் star of David இடம்பெற்றுள்ளது. இந்த அற்புதமான சிலையின் வீடியோ காட்சி, முதல் பின்னூட்டத்தில்.
No comments:
Post a Comment