Friday, April 28, 2023

தமிழக கால்டுவெல் சைவம் -தமிழ் மரபில் கிருத்துவம்

தமிழ் மரபில் கிருத்துவம்
வெளியிட்டவர்:கட்டளை கைலாசம் ஐயகோ
அட்டைப்படம்: நடராஜர்
பின்னணி : சைவ சித்தாந்த செயற்பாட்டாளர் 😁😁😁

இவிங்க சைவம் சைவம்னு இவ்ளோ பக்தியா இருக்கானுங்களே! எத்தனை பக்தி மான் இவர்கள்?என நீங்கள் மெய் மறக்கும் அதே வேளையில் மெல்லமாக சிலுவையை உங்கள் கழுத்தில் மாட்டுவர்...

இந்த குறிப்பிட்ட சைவ சித்தாந்த சபைகள் பெந்தகோஸ்தேவா, ப்ராட்டஸ்டன்ட்டா, என்று கேட்ட நபரால் பரபரப்பு!!

இன்று இவர்களை நீங்கள் இவர்களை சாதாரணமாய் எண்ணலாம்... முழு விஷம் !!


பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் நடக்கவிருந்த "தமிழ் மரபில் கிறிஸ்தவம்" நூல் வெளியீடு இந்து முன்னணியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நூலை முனைவர் கட்டளை கைலாசம் அவர்களும், முனைவர் ஆனந்த் அமலதாஸ் அவர்களும் இணைந்து எழுதியுள்ளனர். 

கட்டளை கைலாசம் ஐயா தொடர்ச்சியாக ஓலைச்சுவடிகளை ஆய்வுசெய்து நூல்கள் எழுதிவருபவர். அர்ச் ஞானப்பிரகாசியார் சரித்திரம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஓலைச் சுவடிகளையும் பதிப்பித்துள்ளார். பாளையங்கோட்டை சைவ சித்தாந்த சபையின் தலைவர். 

அமலதாஸ் ஐயாவும் அவ்வாறே! வியன்னா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கியப் பல்கலைக்கழகங்களில் வருகை விரிவுரையாளர். சமஸ்கிருதத்தில் நூல்கள் எழுதியவர்; ஜெர்மானிய மொழிப் புலமை கொண்டவர். அவரது கிறிஸ்தவ ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் உலகளாவிய ஆய்வாளர்களால் வாசிக்கப்படுபவை. 

நூல் என்ன பேசுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலே, தமிழ் மரபு குறிப்பிட்ட கட்சிக்கு, மதத்துக்கு மட்டுமே உரிமையானது என்று உரிமை கோருவது சரியல்ல. கிறிஸ்தவம், இஸ்லாம், சைவம், வைணவம், சமணம், பௌத்தம் என மதங்கள் தாண்டி தமிழ் என்ற உணர்வால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. பண்பாட்டையும் மரபையும் தனதாக்கிக் கொள்ள பாசிச சக்திகள் முயன்று கொண்டிருப்பதை தொடர்ந்து இங்கு சுட்டிக்கொண்டே இருக்கிறோம். "தமிழ் மரபில் கிறிஸ்தவம்" என்ற நூலின் தலைப்புக்கும் அட்டைப் படத்தில் உள்ள நடராசர் படத்துக்கும்தான் சிக்கல் என்றால், அவை இந்து முன்னணியின் சொத்தா என்ன? மரபு இங்கு அனைவருக்கும் பொதுவானது. அதுகுறித்து எவரும் எழுதலாம். அதை அரசியலுக்குப் பயன்படுத்துவது கண்டிக்கவேண்டியதே.

தொடர்ச்சியாக இங்கு கிறிஸ்தவம் பற்றி எழுதவும் இயங்கவும் இவ்வாறான தடைகள் ஆய்வாளர்களுக்கு வருகிறது எனில், எதிர்வினை வழக்கம்போல ஒன்றுமில்லாமல் போவதா? சைவமும் கிறிஸ்தவமும் தழைத்து ஓங்கிய நெல்லை மண்ணில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடப்பது தமிழ்ச் சமூகத்துக்கு நல்லதல்ல (என் அறியப்படாத கிறிஸ்தவம் நூலுக்கு நெல்லையில் வந்த எதிர்ப்பையும் இங்கு நினைவூட்டுகிறேன்). வாக்கரசியல் செய்யும் அரசியல்வாதிகள் (சிறுபான்மையினர் உள்பட) வெற்றிபெற்று பதவிகளுக்கு வந்தபின் இவ்வாறான பிரச்னைகளில் ஒதுங்கிக் கொள்வது சரியா? காவிக் கொடியைப் பார்த்ததும் அதிகார வர்க்கம் வளைந்து கும்பிடுவது சரிதானா? நடப்பதெல்லாம் நடக்கட்டும் நமக்கு என்ன என்று பொதுமக்கள் வழக்கம்போல "சும்மா கடந்து செல்வது" சரியா? பாசிசம் உங்கள் வீட்டு வாசல் கதவைத் தட்டும் நாள் தொலைவில் இல்லை. அப்போது என்ன செய்யப் போகிறோம்?

No comments:

Post a Comment