Tuesday, April 25, 2023

மணல் கொள்ளை கும்பல் வீஏஓ அலுவலகம் உள்ளே வெட்டி கொலை

 மணல் கொள்ளை கும்பல் வீஏஓ அலுவலகம் உள்ளே வெட்டி கொலை. இது ஈவேரா மண்ணு.

தூத்துக்குடியில் பயங்கரம்: ஆபிஸ் புகுந்து விஏஓ வெட்டி கொலை - வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு வலைவீச்சு!

Written by Prabakar B | Samayam Tamil

தூத்துக்குடி அருகே பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பாம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வருவாய் கிராமத்தில் கோவில்பத்து பகுதியில் விஏஓவாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் விஏஓ வாக பணியாற்றி வரும் அவர் இன்றும் வழக்கம் போல காலை முதல் தனது பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அலுவலகம் புகுந்து தாக்குதல்

காலையில் நீதிமன்ற வழக்கு தொடர்பாக அங்கு சென்று பணிகளை முடித்த பின்பு தனது வருவாய் கிராமத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொண்டுள்ளார். பகல் 12:30 மணியளவில் பணியில் இருந்த போது விஏஓ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் லூர்து பிரான்சிஸை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் லூர்து பிரான்சிஸ் சரிந்து விழுந்தார்.

சிகிச்சை பலனின்றி விஏஓ பலி

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல் துறையினர் உடனடியாக வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லூர்து பிரான்சிசை மீட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை சிகிச்சை பெற்ற லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்த நிலையில் தகவல் அறிந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு சென்றார். மேலும், முறப்பநாடு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அவரது உறவினர்கள் சக வருவாய் அலுவலர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.
இதனிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் உடலை பார்வையிட்டு அவரின் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது கூறியதாவது,

மாவட்ட ஆட்சியர் உறுதி

லூர்து பிரான்சிஸ் மிக நேர்மையான அதிகாரி. ஆதிச்சநல்லூர் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டு நேர்மையாக செயல்பட்ட அதிகாரி. தற்போது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக முறப்பநாடு வருவாய் கிராமத்தில் பணியாற்றி வரும் அவர் நேர்மையான அலுவலராக தனது பணியை சிறப்பாக செய்தவர். இன்றும் கூட நீதிமன்றத்திற்கு சென்று தனது பணிகளை முடித்த பின்பு, தனது பணிகளை அலுவலகத்தில் செய்து கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறினார்.

கேரள பதனம்திட்டா கத்தோலிக்க டயோசிஸ் மணல் கொள்ளை வழக்கில் பிஷப் & 6 பாதிரிகள் ஜாமீனில் உள்ளனர்

No comments:

Post a Comment