தாமிரபரணி ஆற்று தண்ணீர் ஒரு லிட்டர் ஒரு பைசா தானா..? உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிர்ச்சி! Published by:Karthi K news18-tamil November 21, 2025
தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் 1 லிட்டர் நீருக்கு 1 பைசா கட்டணம் செலுத்துவது குறித்து நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அதிர்ச்சி தெரிவித்தனர்.
தாமிரபரணி ஆற்றில் தனியார் நிறுவனங்கள் தங்கள் பயன்பாட்டிற்கும், வணிக நோக்கிற்கும் நீரை எடுப்பதற்கு, ஒரு லிட்டருக்கு ஒரு பைசா தான் அதிகாரிகள் கட்டணமாக வசூலிக்கின்றனரா? என நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முத்துலாம் குறிச்சியை சேர்ந்த எழுத்தாளர் காமராசு, தாமிரபரணி ஆற்றில் இருந்து தனியார் நிறுவனங்கள் எடுக்கும் நீர் மற்றும் அதற்கு வசூலிக்கப்படும் விலையை முறைப்படுத்த கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் தாமிரபரணியில் இருந்து நிறுவனங்கள் எடுக்கும் 1 லிட்டர் நீருக்கு ஒரு பைசா என்ற அளவிலே கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாக முறையிடப் பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், தனியார் நிறுவனங்கள், ஒரு லிட்டர் நீர் பாட்டிலை 20 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், அவர்களிடமிருந்து ஒரு லிட்டருக்கு ஒரு பைசா வசூலிப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.

No comments:
Post a Comment