Saturday, November 22, 2025

ஸ்டாலின் one-to-one

 https://www.facebook.com/100000562444408/posts/26022682464000480/

ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதி கட்சி செயலாளருடனும் 2026 தேர்தல் ஏற்பாடுகள் குறித்து one-to-one பேசுகிறாராம்..! அப்டி என்ன பேசுவார்..? கற்பனை:
ஸ்டாலின் : "நல்லா கேட்டுக்க.. இந்தத் தடவை உங்க தொகுதில ஜெயிச்சே ஆகணும்..! இல்ல, உங்க டீம் எல்லாரையும் கூண்டோட தூக்கிடுவேன்..! மணல் அள்னதுலேயே நீ 300 c அடிச்சிருக்க, பாக்கி விஷயங்களும் இதோ பாரு கணக்கு..! 'சம்பாரிச்சது'ல, 80% 'செலவு' பண்ணனும்..! புரிஞ்சிதா..?"
"அண்ணே..! மணல் 500 க்கு அள்ளிட்டு நமக்கு 100 தான் குடுத்தாங்கண்ணே.."
"இந்த மாதிரி சால்ஜாப்புல்லம் சொன்னா நீ மாவட்ட செயலாளர் போஸ்ட்டுக்கே லாயக்கில்ல..! பணம் கலெக்ட் பண்றதுல தெறமையா இல்லன்னா உனக்கு அரசியலே வேஸ்ட்டு..! தூக்கிடுவேன்..! அந்த பாலம் டெண்டர்ல 200 அடிச்சியாமே..?"
"அண்ணே... 200 இல்லண்ணே... 100 தான்ணே..!"
"பொய் சொன்னா பிச்சிப்புடுவேன்..! நான் போலீஸ், உளவுத்துறைலாம் எதுக்கு வெச்சிருக்கேன்..? லா அண்ட் ஆர்டர் மெயிண்டெய்ன் பண்றதுக்கா..? நீங்கல்லாம் எவ்ளோ சம்பாரிக்கிறீங்கன்னு கண்டுபுடிச்சி கணக்கு வெச்சிக்கத்தான்..!"
"புரிஞ்சிருச்சிண்ணே..!"
"மக்களுக்கு பணம் டிஸ்ட்ரிபூஷன் இப்பவே ஆரம்பிக்கணும்..! இது அட்வான்ஸ்னு சொல்லுங்க..! எலக்க்ஷன் வரைக்கும் இன்ஸ்டால்மெண்ட்ல கொடுத்துட்டே இருக்கணும்..! நீங்க பண்ணலன்னு தெரிஞ்சது, தொலைச்சிபுடுவேன்..!"
"அண்ணே ஒரு சின்ன டவுட்டு, கேக்கலாமாண்ணே..?நாங்க பணம் கொடுக்கறோம்னு எப்டி உங்களுக்குத் தெரிய வரும்..?"
"நீங்க பணம் கொடுத்தா, அடுத்த நாளே உங்க ஏரியா டாஸ்மாக் கலெக்க்ஷன் ஜாஸ்தியாவும்..! அதை வெச்சி தெரிஞ்சிப்போம்..! ஏமாத்லாம்னு நினைக்காதே..!"
"ஆஹா..! விஞ்ஞானம்ணே, விஞ்ஞானம்..! You are more dangerous than கலைஞர்ணே..!"

No comments:

Post a Comment

ஸ்டாலின் one-to-one

 https://www.facebook.com/100000562444408/posts/26022682464000480/ ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதி கட்சி செயலாளருடனும் 2026 தேர்தல் ஏற்பாடுகள் க...