குலக்கல்வி திட்டம் குறித்த குற்றச்சாட்டே ஒரு உருட்டு... பள்ளிகள் எண்ணிக்கை குறைந்ததால் இரண்டு ஷிப்ட் கொண்டு வந்தார் ராஜாஜி.
இவரல்லாம் ஐடி கம்பெனி தொழில் அதிபர் வேறு.. https://x.com/MuthaleefAbdul/status/2004321977708974194
மதியத்துக்கு மேல் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்டதற்கு ஏதாவது ஒரு தொழில் பயிலலாம் அல்லது தந்தைக்கு உதவியாக இருக்கலாம் என்று சொன்னதை குலக்கல்வி திட்டம் அமல் என உருட்ட ( அந்த காலத்திலேயே இவர்கள் அப்படித்தான்) எதிர்ப்பு காரணமாக ராஜாஜி அதை வாபஸ் வாங்கினார். 1953-ல் கொண்டு வரப்பட்ட ஷிப்ட் முறை கல்வி எதிர்ப்பு காரணமாக ஓரிரு மாதங்களில் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் இவர் ஏதோ 1954-ல் காமராஜர் வந்து திட்டத்தை நிறுத்தியது போல பதிவிடுகிறார். வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல் நம்ப வைக்க AI பிக்சர். ஒரு காலத்தில் எதுவும் இல்லாத காலத்தில் வாயால் வடை சுட்டார்கள். இது AI காலம் என்பதால் இப்படி வடை சுடுகிறார்கள்...பள்ளி நேரம் குறைந்ததால் மாணவர்கள் வீட்டில் என்ன செய்வார்கள் என்ற குதர்க்க கேள்வியுடன். அதற்கு ராஜாஜி அளித்த பதில் - கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள், கவலை உனக்கினி ஒத்துக் கொள்' என்ற வொக்கேஷன் எஜுகேஷன் என்று இன்று நாம் பெருமையாக பேசும் - ஓய்வு நேரத்தில் ஏதாவது ஒரு கைத்தொழிலை கற்றுக் கொள்ளுதல். Obviously அப்போது அவரவர் வீடுகளில் தந்தைமார் செய்து வந்த தொழில். ஆனால் இது கட்டாயமல்ல, அவர்கள் எந்த தொழிலை வேண்டுமானாலும் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment