இந்த வரைபடம் டச்சு பயணி ஜோகன் நியூல்ப் [ 17th century Dutch traveller Johan Nieuhof ]என்பவரால் நேரில் கண்டு வரையப்பட்டது.17 ம் நூற்றாண்டில் வரையப்பட்ட படம் இது.இந்த படத்தில் இருப்பவர் வேணாடு ராணி "அஸ்வதி திருநாள் உமையம்மை".முலைக்கவசம் அவர் அணிந்திருக்கவில்லை.உடனிருப்போருக்கும் இல்லை.இத்தனைக்கும் இந்தப் படம் ஒரு வழக்கு விசாரணையின் நிகழ்வைக் குறிக்கிறது.அவர் பொது ஜனங்களின் முன்பாக நின்று கொண்டிருக்கிறார்.
தோள் சீலை விவகாரம் பற்றி எத்தனையோ பதிவுகள் கிறிஸ்தவர்களால் உண்டாகி விட்டன.தெய்வம் போல அந்த பதிவுகளை தொழுது வழிபாடு செய்து வருபவர்கள் தமிழ் நாட்டு மார்க்ஸியர்கள்.அவர்கள் வரலாற்றின் இந்த பெருந்திரிபை நம்பவே விரும்புகிறார்கள் எத்தகைய ஆராட்சியும் இல்லாமல்.
முலைக்கு வரி இருந்ததா என்றால் இல்லை .அது இட்டுக் கட்டப்பட்டது. 1968 -ல் மிஷினரிகள் முலைவரி இருந்ததாக இட்டுக் கட்டி ஒரு நூலில் குறிப்பிட்டு வரலாற்றுத் திரிபை உருவாக்குகிறார்கள். இன்றளவும் இந்த திரிபு எல்லோர் உள்ளத்திலும் பதிவாகி உள்ளது. திருவிதாங்கூர் அரச வழிகாட்டில் முலைவரி குறிப்பிடப்பட வில்லை. ஆனால் தொடர்ந்து இந்த நூலே முலைவரி இருந்ததற்கான ஆதாரமாக தொடர்ந்து மேற்கோளிடப்படுகிறது. மிஷினரிகள் உண்டாக்கிய கள்ளம் அந்த நூல்.
அய்யா வைகுண்டரின் சீடர் அரிகோபாலன் எழுதிய அகிலத்திரட்டம்மானை நூலில் அரச வரிப்பட்டியல் இடம் பெற்றுள்ளது. அதில் முலைவரி இருந்ததாக குறிப்பில்லை. பிற வரிகள் அம்மானையில் பட்டியல் இடப்பட்டுள்ளன
பொதுவாகவே இந்தப் பகுதி மக்களுக்கும் சரி ராணி மார்களுக்கும் சரி முலைகவசம் அணியும் பழக்கம் இல்லை.பிற்காலங்களில் துண்டு மறைப்பு உண்டு. சேலையை இழுத்து மறைத்திருப்பார்கள். மேற்கே கேரளத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் முற்றிலுமாக அப்பழக்கம் இல்லை.நாற்பதாண்டுகளுக்கு முன்புவரையில் முலைகவசம் அணியாத பல பெண்டிரை நேரில் கண்டிருக்கிறேன்.அது தேவை என்று உணரப்படவில்லை.ஒரு பிராந்திய உடைகுறியீடு அது.அவ்வளவே.இன்று மனதில் உருவாகியிருக்கும் பெண்முலைக் கண்ணோட்டமும் அன்று இல்லை.
டச்சுக்காரனுக்கு முலையுடன் ராணி உதித்து நிற்பது வினோதமாக இருந்திருக்கலாம்.அவன் ஒவியனும் கூட.அப்படியே வரைந்து சென்றிருக்கிறான்.அவனுக்கு பிற நோக்குகள் இல்லை.
காலனிய வரலாறு முழுவதுமே இத்தகைய திரிபுகளால் ஆனவை.அப்படி உண்டா என்றால் மறுக்கவும் முடியாது,அப்படியில்லையே என்றால் அதுவும் சரியாக இருக்கும்.இருவிதமான நோக்கங்களுக்கு இடையில் ஊசலாடும் உண்மை கொண்ட பூதம் அது.
இந்த படங்கள் முக்கியமானவை
(சில தகவல்கள் வரலாற்று ஆய்வாளர் என். டி. தினகரிடம் கேட்டு சரிபார்த்துக் கொள்ளப்பட்டது)
No comments:
Post a Comment