Sunday, December 28, 2025

சொமாலிலாண்ட் - இஸ்ரேல் அங்கீகாரம்

 சொமாலியா = சொமாலியா + சொமாலிலாண்ட்!

திர்மா: "சொமாலியா புட்டுக்கிச்சிது. சவுதியும் புட்டுக்கப் போகுது. அப்புறம் பாக்ஸ்டானும், வங்கடேஷும்..."
சர்வ்: "என்னப்பா... ஒரேயடியா அடுக்கிட்டே போறே..."
திர்மா: "உண்ம தான் தல. சொமாலியா நம்ம ஆதரவு மர்ம நாடு. அதிலருந்து பிரிஞ்சிட்டதா 1991ல அறிவிச்சி சொமாலிலாண்ட் அப்படீன்னு ஒரு பகுதிய அறிவிச்சாங்க. அதை எவனும் ஏத்துக்கலைன்னாலும் நேத்து இஸ்ரேல் அந்த சொமாலிலாண்டை அங்கீகரிச்சிருக்கறாங்க. நேதன்யாஹு - சொமாலிலாண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்குது".
சர்வ்: "சொமாலியா ஒரு இத்துப் போன நாடு. அதிலருந்து இன்னொரு பகுதி இத்துப் போனா நமக்கென்னய்யா?"
திர்மா: "அங்க தான் தலைவரே தப்பு பண்றீங்க. அந்தப் பகுதில இது வரை துருக்கியும் சீனாவும் தான் மணி ஆட்டிட்டிருந்தது. இப்ப அதை தனி நாடுன்னு அங்கீகரிச்சிருக்குது இஸ்ரேல். அடுத்து அமெரிக்காவும் அங்கீகரிக்கும். அதோட... காஸால இருக்கற நம்ம ஹமாஸ் பாய்களை சொமாலிலாண்டுல ஒரு பகுதில போட்டு அடைக்கப் போறாங்களாம். காஸா பகுதிய காலி பண்ணி அங்க டிரம்ப் எஸ்டேட் பில்டிங் கட்டப் போறாராம். அங்கிட்டு அமெரிக்க இராணுவ தளமும் வருதாம். சொமாலிலாண்டு கடற்கரை இருக்கறதால, அங்க இஸ்ரேல் - அமெரிக்கா கடற்படை அமைக்கப் போறாங்களாம். வர்த்தக சமுத்திரம் அது. உலக கடல் வர்த்த்தத்தில 30% அந்த சொமாலிலாண்டு வழியாத் தான் போகுதுங்கறதால, ரொம்ப முக்கியமானது அது. அதோட, சீனா - துருக்கி இனி அங்க வாலாட்ட முடியாது."
சர்வ்: "கத அப்படிப் போகுதா...? இந்த விஷயத்தை மத்த மர்ம நாடுகள்லாம் அங்கீகரிச்சிட்டாங்களா?"
திர்மா: "இல்ல தல. சவுதி ரொம்ப கடுப்புல இருக்குதாம். கண்டிச்சி அறிக்கை விட்டிருக்குது. அந்த எண்ணெய் ஏற்றுமதி செய்யற நாடுகள் கூட்டமைப்பு கண்டிச்சிருக்குது. பாக்ஸ்டான் கூட கண்டிச்சிருக்குதுன்னா பாருங்களேன்.."
சர்வ்: "ஓ.. பிரச்சினை பெருசு தான் போல. நம்ம மோதிஜி?"
திர்மா: "அவரு கல்லுல நாறு உறிக்கறவர் தல. வாய் திறக்க மாட்டார். ஆனா, அவர் சமீபத்தில எத்தியோப்பியா போனாரே நியாபகம் இருக்குதா? அந்த எத்தியோப்பியாவை சொமாலிலாண்டை ஆதரிக்கச் சொல்லித் தான் போனாராம் மோதிஜி. இதை வெளியே சொல்ல மாட்டேன்கறாங்க. சைப்ரஸ் மாதிரி நாடுகளெல்லாம் சொமாலிலாண்டுக்கு ஆதரவு".
சர்வ்: "ஏதோ திட்டம் பெருசா இருக்கும் போலயே...! நம்மகிட்ட ஒண்ணுமே கலந்தாலோசிக்கறதே இல்லை இந்த மோதிஜி."
திர்மா: "உங்க நெலமையை நெனச்சா ரொம்ப அவமானமாயிருக்கு. பாலிடாயில்..."
சர்வ்: "யோவ்... நீ வேற வெந்த புண்ணுல வேலப் பாச்சாதேய்யா. அப்புறம் சவுதி பத்தி ஏதோ சொன்னியே. அது என்ன?"
திர்மா: "ஆங்... சவுதி தெக்குப் பகுதிய யெமன் பயங்கரவாதிகள் ஆக்கிரமிச்சிருக்காங்களாம் தல. அதை 'தென் அரேபியா' அப்படீன்னு அனௌன்ஸ் பண்ணப் போறாங்களாம். இங்கிலீஸ்ல Greater Yemen அப்படீங்கறாங்க. கிட்டத்தட்ட அகண்ட யெமென் மாதிரி இருக்குது. இஸ்ரேல் ஒரு பக்கம் அகண்ட இஸ்ரேல்னு கெளம்பியிருக்கானுக. சங்கீஸ் ரொம்ப காலமா அகண்ட பாரதம்னு சொல்லிட்டிருக்கறானுங்க. உலக வரைபடமே மாறிரும் போல"
சர்வ்: "என்ன கொடுமையா இது?? வங்கடேஷையும் பாக்ஸ்டானையும் உடைச்சி அகண்ட பாரதம் வரும்னு எங்க ஜோசியர் வேற சொல்லிட்டிருக்கார்"
திர்மா: "ஆமாம் தல... என்ன பண்ணலாம்னு ஐடியா ஏதேனும் இருக்குதா?"
சர்வ்: "ஆமா... எம் மருமவன் கிட்ட சொல்லி, காஸால டிரம்ப் கட்டற எஸ்டேட்ல முதலீடு பண்ணச் சொல்லலாம்னு தோணுது. மருமவன்கிட்ட பேசிட்டு சொல்றேன்"
திர்மா: .....

No comments:

Post a Comment

Agriculture affected by DMK