இந்தியா 800 ஆண்டுகள் அன்னியர்- அன்னிய மதங்களின் கீழே அடிமைப் பட்டு இருந்தனர். ஒரு இடத்தை தானம் பெற்றால் அதற்கு தெளிவாக ஆதாரப் பத்திரஙகள் இருக்க வேண்டும். 1860 வாக்கில் இந்தியா முழுவதும் சர்வே செய்து அரசு ஆவணம் உருவாகின, தனியார் இடங்களுக்கு பட்டா நிலம், எனவும் வரி இல்லாத கோவில், நீர் நிலை, மேய்ச்சல், அரசு நிலங்களுக்கு இனாம் நிலங்கள் எனப் பெயர் வைத்தனர். அது பிற்காலத்தில் புறம்போக்கு என ஆனது.
வக்பு என்றால் ஒரு நிலத்தின் உரிமையாளர் முஹம்மதிய மதக் காரியத்திற்கு எனக் கொடுத்தவைகளின் அறக்கட்டளையே.
எந்த ஆதாரமும் இல்லாமல் பல கிராமங்களை - வக்பு எனக் கூறி 252 இடங்களில் பத்திரப்பதிவுக்கு தடை கடிதம் கொடுத்ததை வாபஸ் பெற்றனர்.
வக்பு வாரியம் 252 இடங்களில் பத்திரப்பதிவுக்கு தடை வாபஸ் பெறுவதாக கடிதம் செப் 05, 2025
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-namakkal/waqf-board-letter-withdrawing-ban-on-deed-registration-in-252-places/4024791
சென்னை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பிட்ட நிலங்கள் தங்களுக்கு சொந்தமானது என்றும், அதை தனியார் பெயரில், பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்றும், வக்பு வாரியம் பதிவுத்துறைக்கு தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களில், பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த நிலங்களை, அதன் உரிமையாளர்கள் விற்க முடியாத நிலை ஏற்பட்டது.
வக்பு வாரியத்தின் நடவடிக்கையால், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது. இப்பிரச்னை எதிரொலியாக மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்களையும் செய்தது.
இந்நிலையில், ஆக., 14ல் நடந்த வக்பு வாரிய கூட்டத்தில், 252 இடங்களில் உள்ள நிலங்கள் தொடர்பாக, ஏற்கனவே வாரியம் அளித்திருந்த ஆட்சேபங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அந்த நிலங்களின் உரிமையாளர்கள் தடையின்மை சான்று கோரி, விண்ணப்பித்து வருவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, கரூர், அரியலுார், பெரம்பலுார், தஞ்சாவூர், சேலம், கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில், 252 இடங்களில் உள்ள நிலங்களுக்கு தெரிவிக்கப்பட்ட ஆட்சேபங்களை, திரும்பப் பெற வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான கடிதத்தை, அந்த வாரியம் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி உள்ளது. அதன் அடிப்படையில், வக்பு வாரிய ஆட்சேபம் திரும்ப பெறப்பட்ட விபரங்களை, பொது மக்களுக்கு தெரிவிக்க, சார் பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment