Sunday, September 14, 2025

மண்டகப்பட்டு மகேந்திரவர்மன் சமஸ்கிருத குகைக் கல்வெட்டு்

மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு் 

அமைவிடம்:விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம், மண்டகப்பட்டு என்ற கிராமத்திலுள்ள சிறு குன்றிலுள்ள குகைத்தூண் கல்வெட்டு

அரசன் :முதலாம் மகேந்திரவர்மன்
வம்சம் : பல்லவர்கள்
ஆட்சியாண்டு: 5
பொ.ஆண்டு :7ஆம் நூற்றாண்டு (பொ.ஆ. 610 - 630)
மொழி :சமஸ்கிருதம்
எழுத்து :பல்லவக் கிரந்தம்

கல்வெட்டுப் பாடம்

1. ஏதனிஷ்டகமத்ரும மலோ

2. ஹமஸூஸிதம் விசித்ர சித்தநே

3. நிர்மாபித -ந்ருபேண ப்ருஹ்மே

4. ஷ்வர விஷ்ணுல க்ஷிதாய தனம்

விளக்கம்:

மகேந்திரவர்மன் செங்கல் , மரம், உலோகம், சுதை இவை ஏதுமின்றி பிரம்மன், சிவன், விஷ்ணு இவர்களுக்குக் கோயில் எடுத்தான் என்ற செய்தியைக் கல்வெட்டு கூறுகிறது. (அனிஷ்டம் - செங்கல்; அத்ருமம் - மரம்; அலோகம் - உலோகம் அல்ல; அஸிதம் - சுதை அல்லாது)

சிறப்பு:

பல்லவர் காலத்திற்கு முன் இவ்வித கட்டுமானம் பொருட்கள் கொண்டே கோயில்கள் கட்டப்பெற்றுள்ளன. கற்றளிகள் முதலாம் மகேந்திரவர்மன் காலந்தொட்டே கட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கற்றளி பற்றிய முதல் நோக்கீடாக இதைக்கொள்ளலாம். கற்பாறைகளைக் குடைந்து கட்டுதல் “கற்றளி” எனப்படும். இக்குடைவரை “லக்ஷிதாய தனம்” என்று பெயரிட்டழைக்கப்பட்டுள்ளது. லக்ஷிதாய தனம் என்பது முதலாம் மகேந்திர வர்மனின் பட்டப்பெயர்களுள் ஒன்றாகும். இதற்குச் சிறந்த லட்சியத்தை உடையவன் என்று பொருள்.




 

No comments:

Post a Comment

Vijay Vidyashram