Wednesday, September 17, 2025

ஆந்திரா கட்டிய புதிய அணைகள்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆந்திராவை ஆட்சி செய்த முதலமைச்சர்கள் நீர் பாசன துறையில் ஒரு புரட்சியை செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

400 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நாகர்ஜுனன் சாகர், 300 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஸ்ரீசைலம், 130 டிஎம்சி கொள்ளளவு கொண்ட துங்கபத்ரா, 112 tmc கொள்ளளவு கொண்ட ஸ்ரீராம் சாகர் என்று சுமார் 960 டிஎம்சி நீர் பிடிக்கும் அளவிற்கு அணைகளை கட்டி நீர் பாசன துறையில் மிகப்பெரிய புரட்சியை செய்து இருக்கிறார்கள்.

மேட்டூர் அணையின் உடைய கொள்ளளவு 100 டிஎம்சி கூட கிடையாது அதைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிக அளவு நீர் சேமிப்புக்காக வேலை செய்திருக்கிறார்கள் ஆந்திராவை ஆட்சி செய்த முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா தியேட்டர் இருட்டில் முதலமைச்சர்களை கண்டுபிடிக்கும் தமிழ்நாடு மக்களே உங்கள் பக்கத்து மாநிலத்தை பாருங்கள் சுதந்திரம் அடைந்த பிறகு கிட்டத்தட்ட 1000 டிஎம்சி அளவுக்கு நீரை சேமிக்கும் பாத்திரங்களை வாங்கி இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் தேர்வு செய்து வைத்திருக்கும் இந்த சினிமா நடிகர்கள் எதுவுமே செய்யவில்லை மாறாக உங்கள் மாநிலத்தின் பாதி பகுதியை வறட்சியில் வைத்திருக்கிறார்கள் செயற்கையான வறட்சியில் வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இப்போது இருக்கும் கோமாளிகளின் அரசு நீர் பாசனத்துறையில் எதுவுமே செய்யவில்லை முழுக்க முழுக்க நாடக அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள் எந்தவித தொலைநோக்கு திட்டங்களும் இல்லை

No comments:

Post a Comment

ஆந்திரா கட்டிய புதிய அணைகள்

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆந்திராவை ஆட்சி செய்த முதலமைச்சர்கள் நீர் பாசன துறையில் ஒரு புரட்சியை செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்...