லஞ்சம் இல்லாமல் உங்கள் சேவைப் பதிவேடுகள் அனுப்ப மாட்டேன்- ராயப்பேட்டை மருத்துவமனை- சமூக வலைதள பதிவு வைரலாக மாசு தலையீடு
https://www.tamilmurasu.com.sg/tamilnadu/employees-demanded-bribe-doctor-government-infirmary?ref=recent_article
அந்த மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவராகப் பணியாற்றிய மருத்துவர் ஜெய்சன் பிலிப் என்பவர், கடந்த மார்ச் 14ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றலானார்.
மருத்துவர் ஜெய்சன் மாற்றலாகி சில மாதங்கள் ஆகியும் அவருடைய சேவைப் பதிவேடுகள் புதிய மருத்துவமனைக்கு அனுப்பப்படவில்லை. அதற்காகப் பலமுறை ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று அந்த மருத்துவர் கேட்டும் அந்த வேலை நடக்கவில்லை. அதற்காக அங்குள்ள ஊழியர்கள் தம்மிடம் லஞ்சம் கேட்பதாக அந்த மருத்துவர் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர் ஜெய்சன் பிலிப் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில், “எனது சேவைப் பதிவேடு உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.
“நான் தினமும் கேட்டு வருகிறேன். ஆனால், ரூ.1,000, ரூ.2,000 லஞ்சம் கேட்கின்றனர். முதல்வரிடம் புகார் அளித்தாலும், லஞ்சம் கொடுக்காமல் உங்களுடைய சேவைப் பதிவேட்டை அனுப்ப முடியாது எனக் கூறுகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர், செயலர் எனக்கு உதவ வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார். அரசு மருத்துவரின் இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு மருத்துவருக்கே இந்த நிலையென்றால் சாதாரண ஏழை நோயாளிகள் எப்படி இங்கு மருத்துவம் பார்ப்பது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தப் புகார் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர் ஜெய்சன் பிலிப்பை தொடர்புகொண்டு, உங்களுடைய பிரச்சினை விதி முறைகளின்படி உடனடியாகத் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment